"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, July 28, 2014

ஆயர்களின் பிரிவுகள்

ஆயர்களின் பிரிவுகள் மூன்று வகைப்படும். அவை
          1.பசுவினத்து ஆயர் (கோட்டினத்து ஆயர்)
                       2.ஆட்டினத்து ஆயர் (புல்லினத்து ஆயர்)
          3.கோவினத்து ஆயர் 

பசுவினத்து ஆயர்
இவற்றில் பசுவினத்து ஆயர்கள் பசுக்கூட்டங்களை மிகுதியாக உடையவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் பசுக்கள் மூலம் கிடைக்கும் பால், வெண்ணெய் போன்றவற்றை விற்று வாழ்ந்து வந்துள்ளனர். இதனை,
       “............................................................................தொடுதரத்
       துன்னி தந்தாங்கே நகைகுறித்து எம்மைத்
       திளைத்தற்கு எளிய மாக்கண்டை அளைக்கு எளியாள்
       வெண்ணைக்கும் அன்னள் எனக் கொண்டாய்”
                                           ( முல்லைக்கலி.11௦.3-6)
என்ற முல்லைக்கலியின் மூலம் அறியலாம். பசுவினத்து ஆயர் ‘நல்லினத்து ஆயர்’ எனவும் வழக்கப்பெற்றனர். இதனை
        “தொல் இசை நட்ட இசையோடு தோன்றிய
         நல் இனத்து ஆயர்”                      (முல்லைக்கலி 4.5-6)
என்ற முல்லைக்கலியின் பாடல்வரிகள் சுட்டுகின்றன.

          இவ்ஆயர்களின் தலையாய பணி ஆநிரைகளை மேய்த்தலும் பால் கறத்தலும் ஆகும். கறந்த பாலினைத் தயிராகவும், மோராகவும் பக்கவப்படுத்தி அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று விற்று வருதல் ஆயர்குலப் பெண்களான ஆய்ச்சியரின் வேலையாகக் கருதப்பட்டது.
இதனை இக்குலப் பெண்கள் மனமுவந்து செய்து வந்தனர் என்பதை,
          “அஃது அவலம் அன்று மன்
          ஆயர் எமர் ஆனால், ஆயர்தியேம் யாம்” (முல்லைக்கலி 8.8-9)
என்ற வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆட்டினத்து ஆயர்:

         ஆட்டினத்து ஆயர்கள் ஆடு மேய்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இதனை,
         “தளரியால் என்னறிதல் வேண்டின் பகையஞ்சாப்
          புல்லினத் தாயர் மகனேன் மற்றியான்” (முல்லைக்கலி.113.6-7)
என்ற முல்லைக்கலியின் வரிகள் உறுதிபடுத்துகின்றன. இவர்களைப் ‘புல்லினத்து ஆயர் என்றும் வழங்குவர். இந்த மாட்டினத்து ஆயர், ஆட்டினத்து ஆயர் ஆகிய இருவரில் மாட்டினத்து ஆயர்களே உயர்வானவர்களாக மதிக்கப்பட்டுள்ளனர். இதனை,
          “புல்லினத் தாயனை நீயாயிற் குடஞ்சுட்டு
           நல்லினத் தாயர் எமர்”     (முல்லைக்கலி 113.6-7)
என்ற வரிகள்மூலம் உறுதிபடுத்த முடிகின்றது.
           ஆயர் எனப்படுவர் தம்குலத்தால் ஒருவரேயெனினும் அவர்கள் வளர்த்துவந்த உயிரினங்களின்பொருட்டு மேற்காணும் பெயர்களைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

கோவினத்து ஆயர்
கோவினத்து ஆயர்கள் உழவுக்குப் பயன்படும் எருதுகளை அதிகமாக வைத்திருந்தனர். இக்கோவினத்து ஆயர்களும் பசுக்களை வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் பால் முதலிய பொருட்களை விற்று தங்களின் தேவையைப்  பூர்த்தி செய்துகொண்டனர்.

நன்றி
     யாதவர் தன்னுரிமை பணியகம் (YES)
தட்டச்சு வேலை
     மணி கோனார்
தமிழ்நாடு கோனார் பேரியக்கம்

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar