"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, July 2, 2014

தத்துவஞானி திருமூலர்

                      
                   சைவத்திருமுறைகளில் பத்தாந்திருமுறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. திருமந்திரம். ”மூலன் உரை செய்த மூவாயிரம்” எனப் போற்றப் பெற்றது அந்நூல். அந்நூலாசிரியரான திருமூலரின் ஆகமப் பொருளைத் தழுவிய கருத்துக்களும் சித்தாந்தக் குறிப்புகளும் இந்நூலில் பரவிக் கிடக்கக் காணலாம்.
                   அறுபான் மூவரான சைவ அடியார்களுள் திருமூலரும் ஒருவர் அவர் ஆயர் குலத்தினர். தமிழறிவோடு ஆழ்ந்த வடமொழிப் புலமையும் வாய்ந்தவர். கயிலையிலுள்ள யோகி ஒருவர் தமிழ் நாட்டிற்கு வந்து கூடுவிட்டுக் கூடு பாய்ந்து மூலன் என்ற ஆயனின் உடலில் நுழைந்து திருமூலரானார் என்று ஒரு கதை கற்பித்திருக்கிறார்கள்! அறிவு-மேல் வகுப்பினருக்கே உரியது என்ற கொள்கையுடையவர்கள் கற்பனை அது. கதை நாம் அறிந்ததுதானே! தமிழையும் தாமிரபரணி நதியையும் அகத்தியர் வடநாட்டிலிருந்து கொண்டு வந்தார் என்று நம்பும் மக்களைப் படைத்த நாடு தானே இது! திருஞானசம்பந்தர் இளம் வயதிலேயே சிவனருள் பெற்றுத் திருப்பதிகம் பாடி பல அறிய சாதனை படைத்தார் என்பது உண்மை தானே! கீதையை உலகினுக்களித்த கண்ணனை, திருமாலின் அவதாரமென்றும், ஆயர் குலக்கொளுந்தென்றும் போற்றும் இம்மக்கள் திருமந்திரம் இயற்றிய திருமூலரை ஆயன் தான் என ஏற்றுக்கொள்ளத் தயங்குவது ஏனோ?
                    தம்மோடு அருள்பெற்றவர் எண்மர் என்றும், தம்முடைய சீடர்கள் எழுவர் திருமூலர் கூறுகிறார்.
         “ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
         தேடியும் கண்டேன் சிவன்தன் பெருமையை”
என்று கூறும் அவர் கைலையிலிருந்து வந்தது எவ்வாறோ தெரியவில்லை! அவர் மூவாயிரம் ஆண்டுகள் யோகம் செய்து, ஆண்டுக்கொரு திருமந்திரமாக மூவாயிரம் செய்யுள் இயற்றி ஆகமப் பொருளை வெளிட்டாராம்! நூறு ஆண்டு மனித வாழ்வின் எல்லை என்னும் போது மூவாயிரம் ஆண்டுகள் அவர் வாழ்ந்தாரென்பது ஒரு கற்பனையே!
       ‘வேத நூற்பாயிரம் நூறு மனிதர்தாம் புகவர்’ என்பது தொண்டரடிப் பொடியாழ்வார் திருவாக்கு.
       திருமந்திரம் வாட மொழியின் வழி நூலா-முதன் நூலா என்பதற்கு இவர் கூறும் பதிலே சான்று பகரும்.
        “அரனடி நாள்தோறும் சிந்தை செய்து
        ஆகமம் செப்பலுற் றேனே”
என்னும் அவர் திருவாக்கே, திருமந்திரம் தமிழில் தோன்றிய முதல் நூலே என்பதைக் காட்டும்.
        “என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
         தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே”
என்று, இறைவன் தம்மை படைத்ததே தமிழில் ஆகம நூல் அருளிச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார் அவர். ஆகையால், கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது-புராணப் புளுகு. திருமூலர் நூலிலே இவற்றிற் கெல்லாம்  ஆதாரம் இல்லை.
        “வேதத்தை விட்ட அறம் வேறில்லை. எனவே தர்க்கவாதத்தை விட்டு அறிஞர்கள் வேதத்தை ஓதியே வீடு பெற்றார்கள்” என்கிறார் திருமூலர். மொழி விஷயத்திலும் வீணான வாதம் கூடாது என்கிறார் திருமூலர். தமிழையும், வடமொழியையும் உணர்த்துபவன் அவனே என்கிறார்.
             “பண்டிதராவார் பதினெட்டுப்
              படையும் கண்டவர்”
        என்பர் திருமூலர். ஒரு மொழியே அறிந்தவர் பண்டிதராக மாட்டார் என்பது அவரது கருத்து.
        தேசமும் நாடும் தேடித் திரிந்து முடிவில் பரம்பொருளைத் தமது உடம்பிற்குள்ளே கண்டு கொண்டார் அவர்.தேடித் திரிந்த மற்றவர்களோ, மனம் நொந்து, போன இடம் தெரியாமல் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறார்களாம்! “என் உடல் கோயில் கொண்டானே இறைவன்” என்கிறார். தங்கள் உடம்பிலேயே அந்த இறைவன் குடியிருப்பதை அவர்கள் அறிந்தாரில்லை.
         “உடம்புள உத்தமன் கோயில் கொண்டானென்று
         உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே”
என்கிறார். சரீர சித்தி செய்து பல காலம் வாழ்ந்தார் எனத் திருமூலர் கூறுகிறார். உண்டியைச் சுருக்கி ஆன்ம சக்தியை பெருக்கிக் கொண்டாராம். பிரம்மச்சரியம். பிராணாயாமம் முதலிய உபாயங்களின் உதவியால் இவர் இயற்கையோடும், இறைவனோடும்இசைந்து தூய ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்து வந்தார் எனலாம்.
            “சாத்திரம் ஒதும் சதிர்சகளை விட்டுநீர்
             மாத்திரைப் போது மறந்துள்ளே நோக்குமின்”
என்று மூட நம்பிக்கைகளை விட்டு அவன் அருளை நம்பி அவனைக் காண வேண்டும் என்கிறார். இறைவன் ’பொய்க் கலந்தருள் புகுதாப் புனிதன்!’
            “ஒத்தப் பொறியும் உடலும் இருக்கவே
            செத்துத் திரிவர் சிவஞானி யர்களே”
என்று சிவஞானிகளின் சிவன்முத்தி நிலையைக் குறிப்பிடுகிறார் திருமூலர். உடம்பும் பொறிகளும் பிறரை ஒத்திருந்தாலும் உள்ளத்தாலும் ஆன சுத்தியாலும் சிவஞானி வேறுபட்டவன். உலகத்தில் உலகப் பற்று இல்லாமல் திரிபவன் அவன். சிந்தர்கள் சிவலோகத்தை இகலோகத்தில் கண்டவர்கள்.
        திருமூலருடைய சைவ சித்தாந்தம் ‘சித்த மார்க்கம்’-அஷ்டமா சித்திகளை திருமூலர் குறிப்பிடுகிறார். அந்த சித்திகளையெல்லாம் அருளுபவன் எல்லாம் வல்ல இறைவன் என்ற சித்தன். சித்தம் திரிந்து சிவமயமானால் சித்திகளும், சக்திகளும் நம்மையும், பிறரையும் உய்விக்கப் பயன்படும். யோகிகளின் சமாதி நிலையைச் சித்தரும் விரும்பி அடைவர் என்கிறார் திருமலர்.
        “நமன் வரின் ஞானவாள் கொண்டே எறிவன்” என்று வீர வாதம் பேசும் அவர் இதயக் கமலத்திலே சிவ நடனம் நடைபெறுவதாக் கூறுகிறார்.
            “பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
            மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
            மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
            பார்ப்பான் பசு ஐந்தும் பாலைய்ச் சொரியுமே”
என்கிறார். ஐம்பொறிகளையும் அருள் வழியில் அடக்கினால் ஆணவ நெறி அடங்கி உடலும் பொறியும் சிவ கைங்கரியம் செய்யும் என்பது கருத்து.
        சைவ அடியார்களுக்குள் மூலன் என்ற திருமூல நாயனாருக்குச் சிறந்த இடம் உண்டு. பல தத்துவங்களையும் விளக்கி ஆகம விதிகளை முதலில் எடுத்துக் கூறியவர் அவரே ஆவார். யோகிகளாய் உபாயங்களைப் பயன்படுத்தி முக்காலங்களையும் உணர்ந்த மாமூலர் முதலியோர், “அறிவன் தேஎத்து அனை நிலை வகையோர் ஆவர்” என்பர்.
       அவர்க்கு மாணாக்கராகித் தவம் செய்வோர் தாபத பக்கத்தவராவர் என்று நச்சினிக்கினியார் அவரைப் பற்றிய செய்தி ஒன்று வழங்கி வந்ததைக் கூறுகிறார். எனவே அவர் ஆக்கமும் ஆழிக்கவும் செய்யும் ஆற்றலுடைய தமிழ் முனிவராகக் கருதப்பட்டு, இவர்தம் திருவாக்குகள் நூலுரைகளில் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதையும் உணரலாம்.    

TYPING WORK
    M.MANI YADAV
       

             

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar