"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, August 27, 2014

24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது


யது குல வாரிசுகள் அனைவருக்கும் வணக்கம் !
கடந்த ஞாயிறு 24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்!
கூட்டத்தில் ஆர்வமுடன் சமுதாயத்தின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் கலந்து கொண்ட அத்துணை இளஞ்சர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .
கூட்டத்தில் கலந்து கொண்டு இன்றைய சமுதாய நிலையையும், நமது உரிமைகள் எப்படி பறிக்கப்படுகிறது , எப்படி மறுக்கப்படுகிறது, எதற்காக நாம் போராட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்த
திரு.தாமோதரன் யாதவ் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி ,
திரு.சரசுமுத்து யாதவ-தலைவர்- தமிழ்நாடு யாதவர் சங்கம்
திரு.கௌரிசங்கர் யாதவ் - மாநில இளைஞ்சர் அணித் தலைவர் - ராஸ்ட்ரிய ஜனதா தளம்
ஆகியோருக்கு நமது கூட்டமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் !




Tuesday, August 26, 2014

சித்தர் ஸ்ரீ மகான் சுருளி சுவாமிகள் தங்கம் யாதவ் வாழ்க்கை வரலாறு - 1

ஓம் சுருளி தேவாயா நமஹ!
முத்தா முத்தருளே யொயிர் கின்ற முழுமுதலே! 
சித்தா சித்தியெலாந் தரவல்ல செழுஞ்சுடரே! 
பித்தா பித்தனெனை வலிந் தாண்ட பெருந்தகையே! 
அத்தா தந்தனையே யரு ளாரமு தந்தனையே!

சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும், ஞானிகளும் தோன்றிய இப்புனிதமிக்க நமது பாரத பூமியில் பொதிகை மலைச்சாரலில் கேரள மாநிலத்தில் பாலக்காட்டில் உள்ள கவலப்பாறை என்ற ஊரில் கல்வி, அறிவு, ஒழுக்கங்களிலும், சிவபத்தியிலும் சிறப்புற்ற இராமசாமிக்கோன் என்ற ஒருவர் பெருவணிகராக இருந்தார். செல்வ செழிப்போடிருந்த அவரும் அவரது மனைவியாகிய செல்லம்மாள் அம்மையாரும் ஒன்றுபட்ட கருத்தும் அன்பும் உடையராய் நெறி வழுவாது இல்லற தர்மத்தை இனிதே இயற்றி வந்தனர்.
அவர்கள் இருவரும் சிவபூஜையினை மிக்க சிரத்தை
யோடு செய்து வந்தன்றியும்
" பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற "
என்னும் வள்ளுவர் வாக்கைக் கருத்தில் கொண்டு இம்மை மறுமைப் பயன்களை அளிக்கத்தக்க நன்மகப்பேற்றை நாடிப் பல நோன்புகள் இயற்றியும் புண்ணிய ஸ்தலயாத்திரை, தீர்த்த ஸ்நானம் ஸ்தலவாசம், மூர்த்திகள் தரிசனம், பெரியோர் சேவை முதலியவை செய்வித்தும் மகப்பேரின்றி மனத்துயர் கொண்டு பின்னர் பழனி மலைக்கு நடைபயணமாகச் சென்று வேல் கொண்டு வினை தீர்க்கும் முருகப்பெருமானைத் தரிசித்து கிரிவலம் வந்து இத்திருத்தலத்தில் சில காலம் தங்கி எம்பெருமான் முருகனை வழிபட்டு தங்கள் ஊர் திரும்பினர், சில நாட்களில் செல்லம்மாள் அம்மையார் வயிறு வாய்த்தது உன்னதமாகிய சுபதினத்தில், உலகில் உள்ள சர்வ ஆன்மாக்களும் உய்யவும் வலம்புரி ஈன்ற நல்முத்தென ஓர் அழகிய புத்திரனைப்பெற்றார். தந்தையாராகிய இராமசாமிக்கோன் பெரு மகிழ்ச்சியுடன் பழனியம் பதிப்பெருமான் முருகனின் பேரருளால் தோன்றிய இக்குழந்தைக்குப் " பழனியாண்டி " எனத் திருநாமம் இட்டார். 
புதைபொருள் கண்டவர்கள் போல தவப்புதல்வனாகிய பழனியாண்டியை, தாயும், தந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர். குழந்தைப்பேறு பெற்ற மகிழ்ச்சியில் திளைத்த தம்பதியினர் பல விதமான தான, தர்மகாரியங்களைச் செய்து மகிழ்ந்தனர். 
தவமாய் தவமிருந்து பெற்ற புத்திரனாகிய பழனியாண்டி என்னும் இக்குழந்தை பிறந்தது முதல் பசி முதலான எவ்வித உணர்வுகளுக்கும் அழுகை செய்தலோ அல்லது ஏதாவது ஒன்றை பார்த்துக் சிரித்தலோ, உற்று நோக்குதலோ இன்றி மெளனமாகச் சயனித்திருக்கும். தாய் தம்மடியில் கிடத்தி வற்புறுத்தி பாலூட்டினால் மட்டுமே பாலருந்தும் இல்லையெனில் மெளனமாகவே இருக்கும் இவ்விதமே தவழுகின்ற பருவங்களிலும் நடக்கின்ற பருவ காலங்களிலும் இருந்தது மட்டுமல்லாமல் சிறு பிள்ளைகளுக்கான ஓடியாடி விளையாடுதலும், குறும்புத்தனங்களும் இல்லாமல் இருக்க கண்ட பெற்றொர் மிகவும் மனத்துயர் அடைந்து தமது குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையை.? என எண்ணக் கலக்கமுற்றனர். குழந்தையான பழனியாண்டி எந்நேரமும் வீட்டில் கண்களை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் வீற்றிருக்கும்.

மனக்கவலையுற்றிருந்த இராமசாமிக்கோன் இல்லத்திற்கு ஒருநாள் உருத்திராட்ச மாலையும், விபூதிபட்டையும், சடாமுடியுடன் காவியுடை தரித்த முதிய சிவயோகிஒருவர் வருகைபுரிந்தார். இராமசாமிக்கோன் அவரது மனைவி செல்லம்மாள் அம்மையாரும் சிவயோகியோரை இன்முகத்துடன் வரவேற்று அவருக்கு உணவு படைத்து தக்க உபரசணைகள் செய்தனர். பின் அவ்யோகியாரிடம் இராமசாமிக்கோன் தம் செல்வனாகிய பழனியாண்டியின் செயல்பாட்டைக். கூறி இது நமது தவக்குறைவோ என மனத்துயரத்துடன் வினவினார். சிவயோகியாரும் அச்சிறுவனை பார்க்க வேண்டுமென்று கூறிட வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பழனியாண்டியைக் காட்டினர். சிறுவனைக் கண்ட சிவயோகியார் அப்பனே மனத்துயர் கொள்ளாதே இக்குழந்தை, சாதாரணக் குழந்தையல்ல தெய்வீக குழந்தை. இது இவ்வுலக ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு இங்கே ஊதித்துள்ளது என பெற்றொர்களிடம் கூறி , சிறுவனாகிய பழனியாண்டியை வணங்கி சென்றனர். 
இராமசாமிக்கோன்,செல்லம்மாள் அம்மையாரும் சிவயோகியோரின் கூற்றைக் கேட்டு ஆறுதல் பெற்றாலும் அவர்களுக்குள் மனசஞ்சலம் இருந்து வந்தது. நாட்கள் செல்லச் செல்ல பழனியாண்டியின் செயல்பாடு அவ்வண்ணமே மாற்றமேதுமின்றி இருந்து. 
குழந்தையான பழனியாண்டிக்குத் சுமார் 5 வயது ஆகும் போது காலத்திலும் தாய், தந்தையர் தவமாய் தவமிருந்து பெற்ற இக்குழந்தை, மற்ற குழந்தைகளைப் போல் ஓடியாடி விளையாடாமல் சிறுபிள்ளைகளின் குறும்புத்தனம் இல்லாமலும் சதாசர்வகாலமும் சிவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு உலகப்பற்றற்ற ஞானிபோல அமர்ந்திருப்பதை எண்ணி பெற்றோர்கள் பெரிதும் மனக்கலக்கமும் ,வருத்தமும் அடைந்தனர். அக்கால வழக்கப்படி குருகுலம் ஒன்றில் பழனியாண்டியைக் கல்வி கற்க சேர்த்தனர். 
பள்ளியில் மாணக்கனாகச் சேர்ந்த பழனியாண்டி கல்வி கற்பதில் நாட்டமில்லாத சிறுவனைப் போலவும் யாருடனும் பேசாமலும் மந்தமாக இருப்பதைக் கண்டு ஆசிரியர் பிரம்பினால் அடிக்க சிறுவனின் உடலில் எந்த இடத்தில் அடிவிழுந்ததோ ஆசிரியரின் உடலின் அப்பகுதியில் சுரீர் என வலியும் ,தடிப்பும் தோன்றியதை உணர்ந்த ஆசிரியர் அதிர்ச்சியுற்றார். அடிவாங்கிய சிறுவன் பேசாமல் வலியை உணராதவனாக இருக்க அடித்த ஆசிரியர் வலியின் வேதனையை அடைந்தார் இதுபோல் பலமுறை நடக்கவும் இது குழந்தைதான்? அல்லது ஏதேனும் மாய சக்தி படைத்த வடிவமா? என எண்ணி வியந்தார். அது முதல் மாணக்கனான பழனியாண்டியிடம் மிக்க பரிவோடும் அன்போடும் கல்வி போதித்தார். ஆனால் பழனியாண்டி அடக்கத்தோடு அமர்ந்திருந்து ஆசிரியர் ஒரு முறை போதித்தவற்றைப் பிழையில்லாமல் அப்படியே திரும்பக்கூறும் அளவுக்கு ஆற்றல் படைத்தவராக ஆசிரியர் வியக்கும் வண்ணம் நடந்து வந்தார். ஆசிரியர் போதிக்காத நேரங்களில் அங்கேயே பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு நிஷ்ட்டையில் அமர்ந்துவிடுவார்.

தொடரும்......

Sunday, August 24, 2014

திருச்சி ஆட்டுகார தெரு,மஞ்சனகார தெரு பூர்வீக யாதவர் சங்கம் கிருஷ்ணா ஜெயந்தி பெரு விழா








கிருஷ்ணா ஜெயந்தி பெரு விழா. திருச்சி மாவட்ட நமது சொந்தங்களுடன்...ஏஆர்.கண்ணன் யாதவ்

மத்திய ..மாநில அரசே 150 செம்மறி ஆடுகளை இழந்த சந்தானம் யாதவ் குடும்பத்துக்கும் கோபாலகிருஷ்ணன் யாதவ் குடும்பத்துக்கும் தகுந்த இழப்பீடு தொகை வழங்குமாறு கோரிக்கை வையுங்கள் யாதவ இன மக்களே


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, தண்டவாளத்தில் படுத்திருந்த 150 ஆடுகள் ரயில் மோதி உயிரிழந்தன. வயலில் அமைக்கப்பட்டிருந்த பட்டியில் நேற்றிரவு மழைநீர் புகுந்ததால், தண்டவாளத்தில் ஆடுகள் சென்று படுத்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இன்று அதிகாலை கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் சென்ற ரயில், ஆடுகள் மீது மோதியது. உயிரிழந்த செம்மறி ஆடுகளின் மதிப்பு 11 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தானமும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனும் இணைந்து 350 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். அவர்கள் திருவிடைமருதூர் பகுதியில் அறுவடை செய்த வயல்களில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம். நேற்றிரவு மழை பெய்ததால் வயலில் தண்ணீர் தேங்கியது.

மேலும், பட்டியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பும் சாய்ந்தது. இதனால், செம்மறி ஆடுகள் அனைத்தும், அருகிலிருந்த தண்டவளாகத்தில் படுத்துக்கிடந்தன.

Thursday, August 21, 2014

24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம்


அன்புள்ள எனது யாதவ சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம்... வருகின்ற 24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று நமது யாதவ அமைப்பான சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருகின்றது. இதில் ஒரு தனிமனிதனின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பு ஏற்படுதுவது, கல்வி வழங்குவது, சட்டரீதியான ஆலோசனைகளை தருவது ஆகிய செயல்களுக்காக நமது அமைப்பின் சார்பாக செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். இதை மேலும் வலுபடுத்த தானும் தன் சமுதாயமும் வளம்பெற அணைத்து அங்கிகாரமும் பெற்றிட ஓவொரு தனிமனிதனின் கருத்துக்களை பதிவு செய்ய அனைவரையும் வருக என வரவேற்கும் உன்னைப்போல் ஒருவன்... 

இடம் : 
3rd Main Rd, T
ower Park, 
Anna Nagar West, 
Chennai, 
Tamil Nadu 600040.... Time : 9 am ...

தொடர்புக்கு செந்தில் கோன் 9042999966

Wednesday, August 20, 2014

மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்


மும்பையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


அந்தேரி

மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பில், மரோல் பைப்லைன் தமிழ் சாய் நகரில் உள்ள சங்க பணிமனையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துசாமி, செயலாளர் பப்பு நாதன், ஆலோசகர் முத்துகுமார், நிர்வாகிகள் வேம்பு, நித்தியானந்தன் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர் அணியினர் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று காலை உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

வசாய் ரோடு

பால்கர் மாவட்டம் வசாய்ரோடு யாதவ சங்கம் சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு சங்க தலைவர் நல்லகண்ணு மணி யாதவ் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர் தாஸ், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சீனிவாசன், கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, சுடலைகண்ணன், வேலாயுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

கார்கர்

நவிமும்பை கார்கர் கேந்திரிய விகார் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு சங்க தலைவர் முருகன் யாதவ் தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன் யாதவ் முன்னிலை வகித்தார். சிவக்குமார் யாதவ் வரவேற்று பேசினார். ஆசிரியர் முத்தையா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் பன்வெல் தொகுதி எம்.எல்.ஏ. பிரசாந்த் தாக்கூரின் சகோதரர் பரேஷ் சேட், கார்கர் தமிழ்சங்க தலைவர் செல்லப்பா, செயலாளர் ராமர்சிங்கம், கலம்பொலி தமிழ்சங்க தலைவர் மணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து தயிர்பானை உடைக்கும் உறியடி நிகழ்ச்சி நடந்தது.

நியூபன்வெல்

நவிமும்பை நியூபன்வெல் யாதவர் சங்கம் சார்பில் ஆந்திர சமிதி அரங்கில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. சங்க தலைவர் ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பன்வெல் தமிழ்ச்சங்க தலைவர் தங்கராஜ், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் லட்சுமண், ஆலோசகர் ரவிபிள்ளை, இசக்கி, அருணாச்சலம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலம்பொலி

நவிமும்பை காமோட்டே மற்றும் கலம்பொலி யாதவர் சங்கம் இணைந்து காமோட்டே செக்டர்-7 சீத்தல் அரங்கில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் குமார், சங்கமுத்து, மூர்த்தி, லட்சுமணன், மாசானம், ரமேஷ், எம்.எஸ்.மணி, கே.சாமி, அர்ச்சுனன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

முல்லுண்ட்

மும்பை முல்லுண்ட் யாதவ் சங்கம் சார்பில் தானே ஸ்ரீநகர் ஸ்ரீமங்கள் காரியாலா அரங்கில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில், முல்லுண்ட் யாதவ சங்க தலைவர் எஸ்.இ.முத்து முன்னிலை வகித்தார். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 10, 12-ம் வகுப்பு தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் முத்து, செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் பாலமுருகன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

கோவண்டி

மும்பை கோவண்டி யாதவர் சங்கம் சார்பில் சிவாஜி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு சங்கத்தின் சார்பில் புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. சங்க தலைவர் எஸ்.இ.தாஸ், பொறுப்பாளர் இ.எஸ்.முத்து தலைமையில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

யாதவ எஜூகேசன் வெல்பர் சொசைட்டி

மும்பை யாதவ எஜூகேசன் வெல்பர் சொசைட்டி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா மாட்டுங்கா லேபர்கேம்ப்பில் உள்ள அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சங்க தலைவர் கோபால கிருஷ்ணன் யாதவ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் சங்கர் யாதவ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மந்திரி வர்ஷா கெய்க்வாட் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

சுவாமி யாதவ், மாடசாமி யாதவ், சிவசுப்பிரமணியன் யாதவ், சுப்ரமணி யாதவ், ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் இ.முருகன் யாதவ் நன்றி கூறினார். சிறப்பு பூஜையில் ஐந்துமலை ஐயப்பா டிரஸ்ட் முருகேஷ் குருசாமி தலைமையிலான குழுவினர் பஜனை பாடல்கள் பாடினார்கள்.

செம்பூர்

செம்பூர் யாதவர் சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு சங்க தலைவர் சுப்பையா யாதவ் தலைமை தாங்கினார். இரவு 7 மணி முதல் 12 மணி வரை கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தானே மாவட்டம் மிரா ரோடு தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இரவு 12 மணிக்கு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tuesday, August 12, 2014

கோகுலாஷ்டமி(எ)கிருஷ்ண ஜெயந்தி(எ) ஜென்மாஷ்டமி

கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.
அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.
பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.
   
தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.
அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் "உறியடி'' திருவிழா நடைபெறும். மங்களகரமான இந்நாட்களில் ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு (மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை "கீத கோவிந்தம்'', "ஸ்ரீமந் நாராயணீயம்'', "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்'' போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். "ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!
வழிபாட்டு முறை:
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.
தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
"ஊரில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து செல்வார்கள். ஆடல்-பாடல் கோலாட்ட நிகழ்ச்சிகள், குழந்தைகள் ஆடுவதை பார்க்கும் போது கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டு பிள்ளையை நினைவுபடுத்தும். இவ்வேடமிட்ட குழந்தைகள் புத்திசாலியாக செயல்படுகிறார்கள்.
கண்ணனின் பரிபூரண அருள் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கிறது. பலன்கள்: கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும்.
மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும்.வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும். அமைதி நிலவும், ஆற்றல் பெரும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.
வழிபாடு செய்யும்போது கோவிந்தா என்று அழைத்து வழிபாடு செய்தால் அதிக பலன்களை பெறலாம். அதன் பொருள் பசுக்களின் தலைவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன். பூமியை தாங்குபவர். வேண்டுவதால் அடையக் கூடியவன் என்பதாகும்.இதனால்தான் ஆதிசங்கரரும், பஜகோவிந்தம் பாடுங்கள் அது மரண பயத்தை போக்கும் மந்திரம் என்றார்.
கிருஷ்ண ஜெயந்தி வழி பாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.
பெண்கள் அரசியலில் சிறந்து விளங்க இவ் வழிபாடு மிகவும் சிறந்த வழிபாடு 
திருமண தடை நீங்கும்:
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே இப்பாடலை பாடிய ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் மடியில் கண்ணன் அமர்ந்து பாடல்கள் கேட்பானாம். அதனால் அவர் தொடையை தட்டி தாளம் போடாமல் பாடுவாராம். அத்தகை சிறப்புமிக்க இந்த ஊத்துக்காட்டில் காலிங்க நர்த்தனனாக இருக்கும், கண்ணனை வழிபடுவதன் மூலம் பகையை வெல்லலாம்.
எதிரிகள் அஞ்சிடுவர், நாகதோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும்.இவ்வாலயம் கும்பகோணத்தில் இருந்து ஆவூர் வழியாக தஞ்சை செல்லும் சாலையில் ஊத்துக்காட்டில் உள்ளது. காம தேனு இறைவனின் அழகை கண்டுகளித்து இசையில் நனைந்த இடமான தேனு சுவாசபுரம் என்று அழைக்கப்பட்ட மூச்சுக்காடு எனும் ஊத்துக்காடு ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ்வாலயம் சென்று வழிபட்டு வரமேன்மை காண்பார்கள்.
கண்ணன் பிறந்த மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. யமுனை கரையோரம் கண்ணன் விளையாண்ட கேசியார்ட், கோவர் தனன் ராதை பிறந்த பட்சனா மகாபன் கோகுலம், நந்தி கிராமம் என்ற இடங்களில் மிகவும் பிரமாண்ட முறையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபடுவோம்

Monday, August 11, 2014

”தாஹி ஹாண்டி ” விழாவில் பங்கேற்க 18 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்: பாம்பே உயர் நீதிமன்றம்


மும்பை,
கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது, உயரமான இடத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும் வெண்ணைய் நிரப்பிய பானையை மனித கோபுரம் அமைத்து உடைக்கும் விளையாட்டு கொண்டாடப்படுகிறது.


இந்த விளையாட்டுக்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் பங்கேற்க கூடாது என்று பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், 20 அடிக்கு மேலாக வெண்ணைய் நிரப்பிய பானைகளை தொங்க விடக்கூடாது என்றும் கூறியுள்ளது. தற்போது 40 அடி வரை உயரமாக இந்த பானைகள் தொங்கவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

13/08/2014 அன்று டெல்லியில் 18 யாதவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம்

13/08/2014 அன்று டெல்லியில் 18 யாதவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடை பெறுகிறது, இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்பாக திரு சுகுமார் யாதவ் அவர்கள் கலந்து கொள்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம் - டெல்லி கிளை


நன்றி
Athiban Yadav

சென்னையில் ஆகஸ்ட் 31 யாதவர் சந்திப்புக்கூட்டம்


யாதவர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக சென்னையில் ஆகஸ்ட் 31 ஞாற்றுக்கிழமை அன்று யாதவா சந்திப்புக்கூட்டம் நடைபெறுகிறது அனைவரும் வருக வருக வருக






தேதி-ஆகஸ்ட் 31
நேரம்- 9 மணி

இடம்:சென்னை அண்ணாநகர் டவர் பார்க்

தொடர்புக்கு

மணி யாதவ்
9884774983
சென்னை மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பு

செந்தில் கோன்
9042999966
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பு

Saturday, August 9, 2014

திரு.ஐயம் பெருமாள் கோனார்

                   
         பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தோன்றும் போதே கருவிலே திருவுடையவராகத் தோன்றியவர்.அவருக்கு முன் அமைந்து இருக்கும் திரு என்பது அவரது தந்தையின் பெயராகிய திருச்சிராப்பள்ளி திருவேங்கடக் கோனாரைக் குறிக்கும். எனவே அவர் பிறந்த போதே, பிற்காலத்தில் திருவும், கல்வியும், செல்வமும் ஒரு சேரப் பெற்றுச் சிறந்து விளங்குவார் என்பதை இவருக்கு வாய்த்த ‘திரு’ என்னும் சொல் சுட்டி காட்டுகிறது.
          திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் விசுவாவிசு ஆண்டு ஆவணித் திங்கள் இருபத்தி ஆறாம் நாள் (05.09.1905) செந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில், வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள தம் பாட்டனார் இல்லத்தில் அகிலாண்டத்தம்மையார் அவர்கட்கு அருமந்த புதல்வனாய்ப் பிறந்தார். இளமையிலேயே அன்னையே இழந்த இவர், தம்பெரிய அன்னையின் ஆதரவில் திருச்சிராப்பள்ளி சின்னக் கடைத் தெருவில் உள்ள தம் இல்லத்தில் வளர்ந்து வரலானார். பெரிய அன்னையின் தூண்டுதலால் அவர் திருச்சிராப்பள்ளி ஆரியன் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அவர்க்குத் தமிழ்ப்பற்று நாளும் வளர்ந்து வரலாயிற்று. பிறகு தேசிய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார்.
           கோனார் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். பின்னர் மதுரைச் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வரும் தமிழ்த் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார். திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராகத் தனித் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி 1933-இல் வெற்றி பெற்றார். அவர் 15 ஆண்டுகள் தமிழ் உரையையும் ,வினா விடையையும் தம் சொந்த முயற்சிலேயும்,சில வெளியீட்டாளர் மூலமாகவும் வெளியிட்டு நல்ல போதக ஆசிரியராகவும் விளங்கிய அவர் சிறந்த உரையாசிரியராகவும் மதிக்கப்பட்டார்.
            1942-ஆம் ஆண்டு புனித சூசையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த நடேச முதலியார் அவர்களுக்குப் பின் அவருக்கு  அப்பதவி அளிக்கப்பட்டது. 1966-ஆம் ஆண்டு வரை தமது அறுபதாவது ஆண்டு முடிய தமது தமிழ்ப் பேராசிரியர் பணியைச் சிறப்பாக செய்து மாணவர்களும், ஆசிரியர்களும் போற்றிப் புகழ்ந்து பாராட்டும் வகையில் ஒய்வு பெறலானார்.
           கல்லூரிப் பேராசிரியரான பின், கல்லூரிப் தமிழ்ப்பாட நூல்களுக்கும் உரை எழுதலானார். இவ்வாறு கல்லூரியில் பாடம் கற்பிப்பதிலும், உரை எழுதுவதிலும் அவர் வல்லவர் என்னும் நற்பெயர் எங்கும் பரவப் பெற்றார்.
           அவரது சிறப்பினை உணர்ந்த உயர்திரு. செ.மெ.பழனியப்பச் செட்டியார் அவர்கள் அவரது உரை நூல்களைப் பள்ளி இறுதி வகுப்பு ஆகியவற்றின் தமிழ்ப்பாட நூல்களுக்கான உரைநூல்களைத் தமது வெளியீடாக வெளியிட விரும்பி ஏற்றுக்கொண்டார். மற்றும் பி.ஏ.பி,எஸ்.சி, வகுப்புத் தமிழ் உரைநூல் அவர்தம் மைத்துனர் வாசன் பதிப்பகம், கோனார் பப்ளிகேசன்ஸ் மூலமாக வெளியிட்டு வந்தார். அவர்க்குப் பின் சென்னை, மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பாடநூல்களின் உரைகளும் மதுரை கோனார் பப்ளிகேசன்ஸ் உரிமையாளர் திரு.சடகோபன் அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். கோனார் உரை நூல்க்கு முத்திரையும் பெற்றுச் சிறப்புச் சேர்த்து உள்ளார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, தமிழ் உரை நூலும் கோனார் பதிப்பகத்தில் வெளியிட்டு வந்தார்கள்
         அவர் 1965-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் தமது அறுபதாவது ஆண்டு நிறைவு நாளில் மணி விழாக் கண்டு மகிழ்ந்தார் திரு.கோனார் அவர்களின் தமிழ்ப்பற்றையும் தொண்டினையும் ‘ஆனந்த விகடன்’, ‘ஆசிரியரத்தினங்கள்’ என்ற தலைப்பில் பாராட்டுரை வழங்கிப் படம் வரைந்து சிறப்பித்தது. அவரது இறையன்பையும்,அதனை வளர்க்கும் நெறியில் இடையராது ஆற்றிய சொற்பொழிவுத் தொண்டினையும் போற்றும் வகையில் உறையூர் ‘வாசுகி பக்த சன சபையார்’ அவர்க்குப் பொன்னாடை போர்த்தி, ‘செம்பொருட்காட்சியர்’ என்னும் பட்டத்தை வழங்கினார். மேலும் அவரது சமயத் தொண்டினைப் பாராட்ட விரும்பிய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவருக்குப் தங்கப்பதக்கம் வழங்கி ‘திருப்பாவை ஆராய்ச்சி மணி’ என்ற பட்டத்தையும் சுட்டிச் சிறப்பித்தனர். மார்கழி முப்பது நாட்களிலும் திருச்சி வானொலி நிலையத்தினர் ஒலிபரப்பிய அவரது திருப்பாவை விளக்கவுரையைக் கேட்டுக் தமிழகமே பெரிதும் மகிழ்ந்தது.
          தமிழ்ப்பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தம் சிறந்த தமிழ்ப் பணியினால் மாணவருலகம், ஆசிரியர் உலகம் , சமய உலகம், தமிழுலகம் பயனுறுமாறு சிறந்த போதக ஆசிரியராகவும் உரையாசிரியாகவும், நூலாசிரியராகவும், சொற்பொலிவாளராகவும் சிறப்புற்று விளங்கினார்.
         திரு.கோனார் அவர்கள் இயற்றிய நூல்கள்:- கோனார் தமிழ்க் கையகராதி,திருக் குறளுக்குக் கோனார் பொன்னுரை மற்றும் சங்ககாலப் பாண்டியர், வாசன் பைந்தமிழ்ச் சோலை முதலின
நன்றி
     யாதவர் களஞ்சியம் ச.சி.செல்லம்
     யாதவர் தன்னுரிமைக் பணியகம்
தட்டச்சு வேலை
      முடிவை மணி கோனார்


இலக்கணத் தாத்தா திரு.மே.வீ.வேணுகோபால்பிள்ளை

               
                                மே.வீ.வேணுகோபால்பிள்ளை அவர்களின் தந்தையார் சென்னையை அடுத்த மேட்டுப்பாளையம் என்னும் ஊரை சேர்ந்தவர். இவர் மூன்று ரூபாய் ஊதியத்தில் அச்சு தேய்க்கும் பணியில் அமர்ந்தார். கையில் கிடைத்த தமிழ் நூல்களைக் கருத்து ஊன்றி படித்தார். அறிஞர் நடத்திய இரவு பள்ளியில் சேர்ந்து கற்றார். வேப்பேரியில் உள்ள அஞ்சலகத்தில் ஏவலனாகப் பணியாற்றினார். ஒரு வழக்கறிஞரிடம் பணிபுரிந்த போது வழக்குத் தாள்களைப் படித்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். பிற்காலத்தில் கூட்டங்களில் பேசும்போது “டால்ஸ்டாய்’, ‘எமர்சன்’, ‘கார்லைல்’ போன்றோரின் கருத்துகளையும் சீன நாட்டு கன்பியுசியஸ் கருத்துக்களையும் மேற்கோள் காட்டுவார்.
                  திரு.கா.ரா.கோவிந்தராச முதலியாரிடம் முறையாகத் தமிழ் கற்றார். பிறகு தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் எழுத்து வேளையிலும், பதிப்புத் தொழிலிலும் எடுபட்டார். அவர் பத்திராயு அல்லது ஆட்சிக் குரியோன்,திருக்கண்ணபிரானார், குனசாகரர் அல்லது இன்சொல் இயல்பு, அற்புத விளக்கு. அரிச்சந்திர புராணம்-விளக்கக் குறிப்புரை, இளைஞர் தமிழ்க்கையகராதி போன்ற நூல்களை இயற்றினார். அவர் மேலும் துருவன் என்ற நூலையும் அம்பல வாணன், இளங்கோவன் என்ற புதினங்களையும் இயற்றினார். எழுத்தெண்ணி நுணுகிப் பார்த்து பிழைகளைத் திருத்துதல் இவர்க்குக் கைவந்த கலை. அவர் திருத்தம் செய்து பதிப்பித்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை:- இறையனார் அகப்பொருள், வீரசோழியம், தொல்காப்பியம், இலக்கணச் சொல்லதிகாரம், நச்சினார்க்கினியார் உரை, தஞ்சைவாணன் கோவை விளக்கக் குறிப்புரை, அட்டப் பிரபந்தம் விளக்கக் குறிப்புரை, சித்தர் ஞானக் கோவை போன்றவை. சென்னை பவாநந்தர் கழக உறுப்பினராகத் திகழ்ந்தார். சென்னை பல்கலைக்கழகத் தமிழ் வெளியீடுகள், தமிழ்நாட்டுப் பாடநூல்கள் நிறுவனப் பதிப்பாசியராய்த் திகழ்ந்தார். சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்று வந்த கம்பர் கழகத்தில்  மே.வீ.வே. சிறந்த தொண்டாற்றினார். சென்னை ஸ்ரீவைஷ்ணவ மகாசங்கம் நடத்தும் மாநாட்டில் ஆண்டு தோறும் சமயச் சொற்பொழிவாற்றிதோடு, ஓராண்டு மாநாட்டுத் தலைமை தாங்கும் பொறுப்பும் அவருக்குத் தரப்பட்டது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களால் நடத்தப்பபெற்ற ‘தமிழகப் புலவர் மற்றும் தமிழ்ச்சான்றோர்’ குழுவின் தலைவராய் இருந்து தமிழ்ப் பணியாற்றினார்.
            ‘மகா வித்துவான் பட்டம் இவரைப் புலவர் உலகம் ‘இலக்கணத் தாத்தா’ என அழைத்து வருகிறது அறிஞர் அண்ணாவால் 1967-இல் ‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பட்டம் வழக்கப்பட்டது. 1977-இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ‘கலைமாமணி’ என்ற பட்டமும் 1981-இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினரால் ‘தமிழ் பேரவைச் செம்மல்’ பட்டமும் பொற்கிளியும் வழங்கிப் பாராட்டியது. 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது ‘முதுபெரும் புலவர்’ என்ற பட்டமும் பத்தாயிரம் வெண்பொற்காசுகளும் அப்போது முதல்வராயிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் வழக்கப்பட்டது. 1981-இல் தமிழ்நாடு நல்வழி நிலையம் இவருக்கு ‘செந்தமிழ் வித்தகர்’ என்ற பட்டமளித்தது.
             காஞ்சியில் சீவக சிந்தாமணி சொற்பொழிவாற்றினார். அதன் சிறப்பை அறிந்த திரு.வி.க அவர்கள் ‘சிந்தாமணிச் செல்வர் வேணுகோபால் பிள்ளை’ என்ற பட்டமளித்தார். ஆசிரியர்க்கு ஆசிரியரான இவர் நிறைவாழ்வு வாழ்ந்து பெரும் புகழ் ஈட்டினார். ஐரோப்பாவைச் சேர்ந்த டாக்டர் கபில் சுவலபில் அவர்கள் மே.வீ.வே வின் தமிழ் மாணவர். ஜெர்மனியிலுள்ள ‘கோல்ன்’ பல்கலைக்கழக நூலகத்திற்கு இலக்கணத் தாத்தா மே.வீ.வேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆயிரம் பிறைகண்ட அறிஞர் மே.வீ.வே யின் 80-வது பிறந்த நாளில் கி.ஆ.பெ.விஸ்வநாதன் தலைமையில் விழாவெடுத்து, ‘பாவலர் போற்றும் மே.வீ.வே’ எனும் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது.
நன்றி
     யாதவர் களஞ்சியம் ச.சி.செல்லம்
     யாதவர் தன்னுரிமைக் பணியகம்
தட்டச்சு வேலை
      முடிவை மணி கோனார்


Sunday, August 3, 2014

பவுனி நாராயணப் பிள்ளை

சென்னை பச்சையப்பர் கல்லூரி நிறுவனர் "பச்சையப்பர்" அவர்கள் சிறு வயதில் தன தந்தையை இழந்து யாதவர் சமுகத்தை சார்ந்த அய்யா "பவுனி நாராயணப் பிள்ளை" அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் பச்சையப்பர். "பச்சையப்பரையும்" அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றி அவரை உச்சத்திற்கு கொண்டுவந்தவர் அய்யா "பவுனி நாராயணப்பிள்ளை". அவரை நினைவூட்டும் விதமாக உங்கள் பார்வைக்கு .... இப்பொழுது நமக்கும், பச்சையப்பர் கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிபிடத்தக்கது.
நன்றி !!! யாதவர் கருவூலம், யாதவர் தன்னுரிமைப் பணியகம். 0452 4354343

Saturday, August 2, 2014

கோகுலத்தில் கொடைவிழா

கோகுலத்தில் கொடைவிழா
திருக்குறுங்குடி யாதவ சமுதாய
அருள்மிகு நல்லமாடாசாமி திருக்கோவில் கொடைவிழா அனைத்து யாதவ சொந்தங்களையும் வருக வருக என வரவேற்கிறோம்..

இவண்.
குறுங்கை யாதவ சமுதாயம்
மற்றும் குறுங்கை யாதவ இளைஞர் அணி

திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: 7–ந்தேதி முதல் அமல்

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் தரிசனத்துக்கு மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க புதிய நடைமுறையை அமுல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டது. அதன்படி 300 ரூபாய் கட்டண டிக்கெட் ஆன்லைனில் வருகிற 7–ந்தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் நாட்டில் எந்த மாநிலத்தில் இருந்தும் இன்டர்நெட் மூலம் ஆன்லைனில் இந்த தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தரிசனத்துக்கான நேரம் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருக்கும்.
அந்த நேரத்தில் பக்தர்கள் சென்றால் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவோ, பின்னரோ தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.
இந்த தகவலை தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராஜு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும் போது, இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கு ‘‘டைம் ஸ்பாட் டிக்கெட்’’ என அழைக்கப்படும். 7–ந்தேதி முதல் இது அமுல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 1–வது கியூ காம்ளக்சில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பக்தர்களை தணிக்கை செய்யும் வகையில் 14 கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது.
இந்த தரிசன முறையை படிப்படியாக தர்ம தரிசனம், திவ்ய தரிசனமும் (கால் நடை பக்தர்கள்) ஆன் லைன் மயமாக்கப்படும், அதே சமயத்தில் வி.ஐ.பி. பரிந்துரை கடிதங்களை ஏற்பது படிப்படியாக நிறுத்தப்படும்.
இவ்வாறு ஸ்ரீனிவாசராஜு தெரிவித்தார்.

Friday, August 1, 2014

சிங்கமுத்து சேர்வைக்கார யாதவ்

மன்னர் அழகுமுத்துவின் 6 தளபதிகள் இவர்கள் 6 பேரும் பீரங்கி வாயிலில் வைத்து சுடப்பட்டனர்.
1. கெசக்சிலணன் சேர்வைகார கோனார்
2. முத்தழகு சேர்வைகார கோனார்
3. வெங்கடேஸ்வர எட்டு சேர்வை கோனார்
4. ஜெகவீரரெட்டு மணியக்கார கோனார்
5. முத்திருளன் மணியக்கார கோனார்
6. மயிலுப்பிள்ளை கோனார்.
( படத்தில் இருப்பது சிங்கமுத்து சேர்வைக்கார யாதவ் பஞ்சாலக்குறிச்சி தளபதி ).

யாதவர் தன்னுரிமைப் பணியகம் விருதுகள் - 2014


யாதவர் தன்னுரிமைப் பணியகம் 13 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம், மதுரையில் முதல் முறையாக மிக பிரமாண்டமாக மூன்று விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைப்பின் பேரில் மதுரைக்கு வர இருக்கிறார்கள் அனைவரின் முன்னிலையில் பிரமாண்ட அரங்கில் மூன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

-- சமூகப்பணியில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சார்ந்த ஒருவருக்கு "அழகுமுத்துகோன் - விருது"

-- சமூகப்பணியில் சிறப்பாக பணியாற்றிய வெளி மாநிலங்களை சார்ந்த ஒருவருக்கு
"தீப் சந்த் யாதவ் - விருது" 
-- இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் இதில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கிய அறிஞர் ஒருவருக்கு "செந்நாப் புலவர் கார்மேக கோனார் - விருது "

இந்த மாபெரும் விருதை பெற இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும், அதற்கான பணியை தேர்வு குழு ஆரம்பித்துள்ளது. முக நூல் வழியாக உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 

நன்றி !!!

யாதவர் தன்னுரிமைப் பணியகம்
தொடர்புக்கு: 0452 4354343

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar