"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

கோனார்

கோனார் என்போர் தமிழகத்தில் வாழும் மிக பழமையான தமிழ் சமுகம் ஆகும். இவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டதிலும் பரவலாக வாழ்கிறார்கள்.
சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி,திருவண்ணாமலை,திருச்சி,தூத்துகுடி,கடலூர்,விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், தஞ்சை, சென்னை போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள்.

இன்று ஆந்திரத்தோடு சென்றுவிட்ட சித்தூர் போன்ற மாவட்டங்களில் கணிசமான அளவு கோனார்கள் வசிக்கிறார்கள்.

மேலும் தமிழகத்தை ஒட்டி கர்நாடகாவில் கணிசமான அளவு கோனார்கள் உள்ளார்கள்.அங்கு அவர்கள் பூர்விகமாகவும் வசிக்கின்றனர் மேலும் வேலைக்காக சென்றவர்களும் உள்ளனர்.

கர்நாடக அரசு பதிவேட்டில் யாதவா(கன்னடம் பேசும் கொல்லா மற்றும் தமிழ் பேசும் கோனார்கள் ) உள்ளனர் (ஆதாரம்)

இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள் ஆவர், கோனார் சமூகத்தினர் கால் நடை வளர்ப்பவர்களாகவும், போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக விளங்கி வருகின்றனர் தமிழ்நாட்டில் ஆயர்,இடையர்,கோன்,கோனார்,யாதவர்,கரையாளர்,பிள்ளை,யாதவ்,மந்திரி  என்றழைக்கபடுக்கிறார்கள்.

கோனார்கள் பண்டைய தமிழ் சமுகம் பகுத்த ஐந்திணைகளில் முல்லை திணையை சேர்ந்தவர்கள்.முல்லை திணை என்பது காடும் காடு சார்ந்த பகுதியும் ஆகும்.பண்டைய தமிழ் நூல்கள் இவர்களை ஆயர்கள் என்றும் இடையர்கள் என்றும் குறிப்பிடுகிறது. 

பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் பயன்படுத்தியவரை இவர்கள் கோனார் என்றே பயன்படுத்ததிவந்துள்ளனர்.நகர் பகுதியில் வாழும் இடையர்கள் பிள்ளை என்ற பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர் இடையர் இன மக்கள் மட்டுமே கோனார் என்ற பட்டத்தை பயன் படுத்துவார்கள் மற்ற சமுகத்தினர் யாரும் இந்த பட்டத்தை பயன் படுத்தியதில்லை,எனினும் மற்ற பெயர்களான பிள்ளை உள்ளிட்ட பெயர்கள் மற்ற சமுகத்தினறும் பயன்படுத்துகிறார்கள்.தற்போது யாதவ் என்ற பெயர் பரவலாக பயன்படுத்தபடுகிறது

இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.யாதவர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள். கிருஷ்ண பகவானைப் பல்வேறு பெயர்களால் வழிபடுகின்றனர். அவர்கள் சனிக் கிழமையைப் புனித நாளாகக் கருதுகின்றனர். ‘கோகுலாஷ்டமி’தான் அவர்களுக்கு மிக முக்கியமான திருநாள். அதற்கு மறுநாள் நடக்கும் உறியடி உதசவத்தின்போதுகிருஷ்ணரின் குழந்தைப்பருவ லீலைகளாகிய வெண்ணெய் திருடுதல், வெண்ணெய் மற்றும் தயிர்ப்பானைகளை உடைத்தல் முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

 கிருஷ்ணர்’ அவர்களுடைய குலத்தில் வளர்ந்தவர் என்பதால், யாதவர்களை மற்ற சமூகத்தார் அன்பு பாராட்டி நடத்துவதாகக் கூறப்படுகிறது.முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன், மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள். தென்மாவட்டங்களில் இன்றைக்கும் யாதவர் இனமக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இரவு நேரங்களில் விளைச்சல் நிலங்களில் ஆடுகளை நிறுத்தி ‘கிடை’ போடும் வழக்கம் சிலரிடம் இன்றைக்கும் உண்டு. இதனால் நிலத்திற்கு மிகப்பெரிய சத்துக்களை வழங்குகிறார்கள். 

யாதவர்களில் சிலர் நிலச்சுவான்தார்களாக இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் எருதுகளை அடக்கி வீரத்தைக் காட்டிய்பின்பே, மணமகன் மணமகளை மணக்க முடியும் என்ற நிலை இருந்தது. இன்று அது வழக்கொழிந்து போய்விட்டது.முன்பு வயதுக்கு வந்த பெண்கள் பல்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சீக்கிரமே திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இப்போது அந்தக் கட்டுப்பாடு வேகமாக மறைந்து வருகிறது.சிலர் அக்காள் மகளைத் திருமணம் செய்கின்றனர். சில பகுதிகளில் வாழும் யாதவர்கள் அத்தை மகள், மாமன் மகளை மட்டுமே மணக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.மணமக்கள் கலந்து பழகுவதற்காகவும், மணமகளின் வெட்கத்தை மாற்றும் பொருட்டும் திருமணத்தின்போது சில கேலி விளையாட்டுகள் நிகழ்த்தப்படுகின்ரன. தன்ணீர் நிறைந்த பானையில் ஒரு தங்க மோதிரத்தைப் போட்டு, அதை மணமக்களை எடுக்கச் சொல்கிறார்கள். மணமக்கள் வீட்டிற்குள் நுழையும்போது மணமகனின் சகோதரி, அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘ஆண் குழந்தை வேண்டுமா, பெண்குழந்தை வேண்டுமா’ என்று கேட்கிறாள். அதற்கு பதில் சொன்னபிறகே வழி விடுகிறாள். இது போன்ற பல சடங்கு சம்பிரதாயங்கள் இன்று இவர்களிடையே வழக்கொழிந்து போய்விட்டன.


1931 ஆண்டு எடுக்கபட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இடையர்களின் மக்கள் தொகை:
ராமநாதபுரம்:1,90,237
வட ஆற்காடு:1,60,003
திருநெல்வேலி:1,57,530
தென் ஆற்காடு:1,40,058
தஞ்சை:1,17,984
திருச்சி:1,15,934
செங்கல்பட்டு:1,13,563
மதுரை:83,802
மதராஸ்:23,611
கோயம்புத்தூர்:22,973
கன்னியாகுமரி:6,905
நீலகிரி:416
இது தமிழ் பேசும் இடையர்களுடையது மட்டுமே.
குறிப்பு:
1921 ஆம் ஆண்டு எடுக்கபட்ட கணக்கெடுப்பின் போது இருந்ததைவிட 1931ல் மதுரை மற்றும் ராமநாதபுரம் மக்கள் தொகை குறைந்ததாக ஒரு புகார்.தெலுங்கு பேசும் இடையர்கள் இந்த கணக்கெடுப்பின் போது நாயுடு என பதிவு செய்தார்கள்.ஆனால் அவர்கள் இப்போழுது யாதவா என பதிவு செய்கின்றனர். இவர்களும் கணிசமான அளவு தமிழக்த்தில் வசிக்கின்றனர்.


 ஆயர் குலத்திற்க்கு என்று மிக நீண்ட நெடிய வரலாறு உண்டு.

உலகின் இயற்கை அமைப்பை ஒட்டி நிலங்களைப் பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பாகுபாடு செய்தனர். மழை தவழும் மலைச் சாரலிலே பல்வேறு பூக்கள் மலர்ந்த போதும், அவற்றுள் தேன் நிறைந்த பூவான குறிஞ்சிப்பூவே சிறப்புப் பெற்றிருந்தது. அதனால் மலையும், மலைசார்ந்த இடமும் "குறிஞ்சி' எனச் சுட்டப்பட்டது.


முல்லைக்குரிய பெரும்பொழுதையும், சிறுபொழுதையும் வரையறுக்கும் தொல்காப்பியர், "காரும், மலையும் முல்லை' எனச் சுட்டுகிறார். ""கார் காலமாவது, மழைபொழியும் காலம். அது ஆவணித் திங்களும், புரட்டாசித் திங்களும். மாலையாவது இராப்பொழுதின் முற்கூறு'' என்பது இளம்பூரணம். முல்லைக்குரிய உரிப்பொருளான "இருத்தலை' பற்றி, நச்சினார்க்கினியர்,

""இனித் தலைவி பிரிவுணத்திய வழிப்பிரியார் என்றிருத்தல், பிறிந்துழிக்குறித்த பருவம் அன்றென்று தானே கூறுதல். பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவன ஆகியவை இருத்தல்'' என்று விளக்குவார்.

பொதுவாக, கருப்பொருள்களாகக் கருதப்படுபவை இவை என்று தொல்காப்பியர் விளக்குகிறாரேயன்றி ஐந்திணைகளுக்கும் உரியவை இவை என்று அவர் வகுக்கவில்லை. உரையாசிரியர்களே அங்ஙனம் வகுத்துள்ளனர். மேலும், தொல்காப்பியர்,


"ஆயர்வேட்டுவர் ஆடுஉத்திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும்உளரே''


என்று முல்லைத் திணைக்குரிய மக்களை மட்டும் விளக்குகிறார்.

முல்லைத் திணைக்குரிய முதற்பொருள்: 
பெரும்பொழுது - கார்காலம். 
சிறுபொழுது - மாலை. 
கருப்பொருள்: திருமால் (நெடுமால்) முல்லைத்திணைக் கடவுள்.
உரிப்பொருள்: நிலத்தலைவர்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் ஆகியோர். 


பறவை: கானக்கோழி, சிவல், விலங்கு: மான், முயல், ஊர்: பாடி, சேரி, பள்ளி என்று அழைக்கப்பட்டன. பூக்கள்: முல்லை, குல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ. 
மரங்கள்: கொன்றை, காயா, குருந்தம் முதலியன.
உணவு: வரகு, சாமை, முதிரை பறை: ஏறு கோட்பறை. 
யாழ்: முல்லையாழ். நீர்நிலை: கான்யாறு. 
தொழில்: நிரைமேய்த்தல், பயிர் விதைத்தல், களை கட்டல், அறுத்தல் முதலியன.

மனித வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள், மக்கள் தொகைக் பெருக்கத்தின் காரணமாக அடுத்துள்ள கானகப் பகுதியான முல்லை நிலத்திற்குச் சென்றனர். மனிதன், இதற்குள் நாய், எருமை, பசு, ஆடு போன்ற விலங்குகளைப் பழக்கி, வளர்க்கக் கற்றுக்கொண்டான்.

மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது நிலையான "ஆயர்நிலை' இவ்வாறு எய்தப்பட்டது. முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன் முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்பமுறை ஆகியவை உருவாயின. சமுதாயத்தின் இரண்டாவது வளர்ச்சி நிலை இது.


காதல் மணம், மணச்சடங்குகள் இன்மை (புலிப்பல் தாலி, தாழையுடை தவிர) ஆகிய தன்மைகளைக் கொண்டதும், "களவு' என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு' மணம் ஏற்பட்டது.


தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தைவழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்' ஆனான். தமிழகத்தில் இவ்வாறு அரசன் உருவானான் என்பதைக் காட்டும் சொல், "கோன்' (கோன்-இடையன், அரசன்; இடைச்சி-ஆய்ச்சி, அரசி). ஆடு, மாடு மேய்க்க உதவும் "கோலே' பின்னாளில் அரசனின் "செங்கோல்' ஆயிற்று.


ஆநிரையைச் செல்வமெனப் போற்றும் முல்லை நிலச் சிற்றரசுகளிடையே ஏற்பட்ட சிறுசிறு போர்களே (ஆநிரை கவர்தல்) தொடக்ககாலப் போர்களாக இருந்தன. எனவே, பண்டைத் தமிழகத்தின் முதற்போர் முறையாக, ஆநிரை கவர்தல் அமைந்தது. கிராமிய வாழ்வை - கற்பனையான பொற்கால வாழ்வைச் சித்திரிக்கும் பாடல்களே முல்லைப் பாடல்கள் என்பர் மேலை நாட்டு மொழி இயல் வல்லுநர்கள். தமிழகத்தில் உள்ள முல்லைத் திணைப் பாடல்களைப் போன்றே கிரேக்கம், லத்தீன், எபிரேயம், வடமொழி மற்றும் இந்திய மொழிகளிலும் முல்லைப் பாடல்கள் உள்ளன.


இந்திய நாகரிகத்தின் இரண்டாம் நிலையாக முல்லை நில வாழ்க்கை அமைந்துள்ளது. தமிழகத்தில் அரசன் உருவானது முல்லை நிலத்தில்தான். லத்தீன், தமிழ் ஆகிய செவ்வியல் மொழிகளில் இருப்பது போல் வடநாட்டில் ஏனோ, எந்த மொழியிலும் முல்லைப் பாடல்கள் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கடைச்சங்க இலக்கியங்களாக எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமே கருதப்படும். எட்டுத்தொகை நூல்களில் அக இலக்கியங்களான நற்றிணையில் 30 பாடல்கள், குறுந்தொகையில் 45, ஐங்குறுநூற்றில் 100, கலித்தொகையில் 40, அகநானூற்றில் 40 பாடல்கள் முல்லைப் பாடல்களாகும். பத்துப்பாட்டில் நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இரண்டு பாடல்களும் முல்லைத் திணைப் பாடல்கள். முல்லை நிலப் பாடல்கள் மொத்தம் 234. மிகக்குறுகிய 3 அடிச் சிற்றெல்லையில் ஐங்குறுநூற்றுப் பாடலையும், மிக அதிகமாக 188 அடிகளைக் கொண்ட நெடுநல்வாடைப் பாடலையும் காண்கிறோம்.
எட்டுத்தொகை நூல்களில் ஐங்குறுநூறு(100), முல்லைப் பாடல்கள் பாடிய பேயனாரை அடுத்து இடைக்காடரும், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனாரும் மிக அதிகமாக முல்லைப் பாடல்கள் பாடியுள்ளார்கள். முல்லைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 73. பாடிய புலவர்கள் பெயர்கள் தெரியாத பாடல்கள் எண்ணிக்கை 6.

உலகச் செம்மொழிகளான கிரேக்கம், லத்தீன், எபிரேயம் ஆகிய மொழிகளிலுள்ள முல்லைப் பாடல்களின் எண்ணிக்கையைவிட, தமிழ் மொழியில் உள்ள முல்லைப் பாடல்களின் எண்ணிக்கை அதிகம்.

முல்லைப் பாடல்கள் வழி நாம் அறியும் சில சங்கச் செய்திகளாவன: விரிச்சி கேட்டு நிற்கும்பொழுது நற்சொல் கேட்பின், நன்மை நடக்கும் என்றும், நல்லது அல்லாத சொல் கேட்பின், நன்மை நடவாது என்றும் நம்பினர் அக்கால மக்கள். இன்றும் கிராம மக்களிடையே இந்தப் பழக்கம் தொடர்கிறது; யானைகளோடு பேசப் பாகர்கள் வடமொழியைப் பயன்படுத்தினர்; போர்க்களங்களில் மங்கையர் பணி புரிந்தனர்; ஏழடுக்கு மாளிகைகளில் மக்கள் வசித்தனர்; நாழிகைக் கணக்கர், "நாழிகை வட்டில்' கொண்டு காலத்தைக் கணித்தனர்; அரசுச் செய்திகளைப் பிறர் அறியாதிருக்க ஊமையர்களை (மிலேச்சர்) அரசர்கள் தங்களுக்குக் காவலாக வைத்திருந்தனர்; இதுபோன்ற சங்கச் செய்திகள் பலவற்றை முல்லைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

ஆயர்களின் வீரம்

கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர். 

அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சி நிலத்தவரும் நெய்தல் நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பொதுப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது

ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்விய லின் வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந் தைய பெயர்கள்.

ஏறு தழுவுதல் வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர நின்று தாகும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீரிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.

மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை களைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள்  என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.

காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை வீழ்வான். ஆதலால் கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்; தோல்வியின் அறிகுறி. காளைப் போரில் வெற்றி பெற்ற இளைஞரை ஆயர் குலம் வியந்து நோக்கும்; இள நங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.

ஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டு விழுவர். எக்கசக்கமாய் அகப்படாமல் இடர்ப்படுவர்; காளையின் கொம்புகளால் குத்துண்டு குடலறுந்து குருதி வடிப்பர். இங்ஙனம் ஈனமுற்ற இளைஞர் நிலை கண்டு ஆயர் வருந்துவர்; ஆர்வமொழிகளால் அவர் துயரத்தை ஆற்றித் தேற்றுவர். வெற்றி பெற்ற காளையும் வீழ்ந்த இளைஞரருகே வெம்மை நீத்து வாடி நிற்கும். பேராண்மையின் அணியாகிய ஏறாண்மை கண்டு ஆயர்குல வீரர் அகங்களிப்பர்.

முல்லை நிலமக்களின் வீரவிளையாட்டாக விளங்குவது ஏறு தழுவலாகும். இவ்விளையாட்டு இன்றும் விளையாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதற்கு மதுரை அலங்காநல்லூர் குறிப்பிடதக்க ஊராகும். இவ்வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றும், காளை விரட்டு என்றும், வடமாடு என்றும், மஞ்சுவிரட்டு என்றும், எருதுகட்டு என்றும் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். 

தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.

முல்லை நிலத்தில் வாழ்ந்த செல்வப் பெருங்குடி மக்கள் தங்கள் மந்தையில் காளைக் கன்று ஒன்றைத் தனியே வளர்ப்பார்கள். இதற்குத் தனியாக போர்ப் பயிற்சி கொடுத்து ஏறுதழுவலுக்குப் பயன்படுத்துவார்கள். தங்களின் வீட்டில் வளரும் மகளுக்கு பருவம் வந்தவூடன் காளையை அடக்கி வெற்றி கொள்ளும் காதலனுக்கு மணம் முடித்து வைப்பார்கள். அன்றைய மகளிர் ‘கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகிறவனை மறுமையிலும் ஆயமகள் தழுவமாட்டாள், என்று சூளுரைத்திருக்கின்றனா;.

காதலும் வீரமும் தமிழா தம் இரு கண்களாக இணைந்து நிற்பன. இந்த இணைப்பை முல்லைக் கலியில் பெரிதும் காணலாம். “ஆயர்களின் வீரத்தையூம் அஞ்சாமையையூம் எடுத்துக்காட்டும் ஏறுதழுவல் என்னும் முல்லை நில வழக்கத்தை முல்லைக்கலி மட்டுமே விளக்கமாகக் கூறுகின்றது. பிற சங்க நூல்கள் கூறவில்லை. ஆகவே கலித்தொகையில் முல்லைக்கலி புதுமையானது. கிரேக்க நாட்டில் நடைபெற்ற வீர விளையாட்டுகளில் ஒன்றான பொன் நீர் நாய்ப் போட்டியைப் பற்றிய பாடல்கள் ஏறுதழுவலைப் பாடும் முல்லைக் கலிப் பாடல்கள் போன்றுள்ளன எனக் கருதப்படுகின்றது.”1

ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்பதை,

ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்.2

என்னும் வரிகள் விளக்குகின்றன. பசுத்திரளை உடைய ஆயர் மகனுக்கு தலைவியை மணம் முடிக்க பெற்றோர் எண்ணினர். தான் விரும்பிய தலைவனோ செங்காhpக் கொம்பிடையில் புகுந்து தழுவி வெற்றி கொண்டுவிட்டான். தலைவியின் மணம் உறுதியாகிவிட்டதை,

இன்று எவன், என்னை எமர் கொடுப்பது-அன்று, அவன் 
மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப் 
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு!.3

என்ற பாடல் வரிகள் உணா;த்துகின்றன. ‘ஏறுகொள்ள வல்லார் என்னைப் போன்றவர் எவரும் இலர் என வீரம் பேசும் பொதுவன் தலைவிக்கு ஒருநாள் உறவினன் ஆகாமற் போவதில்லை. அத்தலைவனைக் கண்டு கண்களும் காதற் பயிhpனை வளர்க்கிறதாம் தலைவிக்கு. இதை,

‘கோளாளா என்ஒப்பார் இல்’ என நம்மானுள், 
தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள், 
கோளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்இ4

என்னும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

மெல்லிணா;க் கொன்றையூம், மென்மலர்க் காயாவூம்,
புல்லிலை வெட்சியூம், பிடவூம், தளவூம், 
குல்லையூம், குருந்தும், கோடலும், பாங்கரும்-
கல்லவூம், கடத்தவூம்- கமழ் கண்ணி மலைந்தனர்.5

இவ்வாறு பல மலர்களைச் சூடி ஆயா; இளைஞர்கள் விரைந்து வந்து ஏறு தழுவூதலைக் காண விரும்பிய ஆயமகளிர் பலரும் பரண்களில் முற்படவே வந்து அமர்ந்தனர்.

முல்லை முகையூம் முருந்தும் நிறைத்தன்ன
பல்லா, பெருமழைக் கண்ணா, மடம் சேர்ந்த
சொல்லா, சுடரும் கனங்குழைக் காதினர்.6

இவ்வாறு ஆய மகளிரும் ஏறுதழுவலைக் காண ஆர்வம் காட்டியூள்ளனர். ஏறுதழுவி வென்ற வீரனையே மணக்கவூம் விரும்பினர்.கெல்லேற்றுக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள் தழுவ விரும்பவில்லை உயிருக்குப் பயந்து ஏறுதழுவாதிருக்கும் ஆயர் இளைஞரை யாரும் விரும்புவதில்லை. தாம் காதலிக்கும் பெண்ணின் முலையிடை போலக் கருதி, ஆர்வமுடன் வீழ்ந்து தழுவி வெற்றியடைபவர்களையே பெற்றோர் தம் மகளுக்கு ஏற்றவனகாக் கருதுவார்கள் என்பதை,

கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்
முல்லையிடைப் போலப், புகின்.
ஆங்கு: 
குரவை தழீ, யாம், மரபுளி பாடி, 7

என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.

சான்றெண் குறிப்புகள்
1. கலித்தொகைஇ பா. 148-149.
2. மேலது. பா. 101 :9-12.
3. மேலது பா. 105:66-68.
4. மேலது பா. 101:43-46.
5. மேலது பா. 103:1-4.
6. மேலது பா. 103:6-8.
7. மேலது பா. 103:63-74.

வீரத்தை கூட்டும் குரவை கூத்து

அக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவர். ஆயர் கன்னியர் பாடும் பாடல் ஏறு தழுவப்போகும் தன் காதலனை உசுப்புவது போலவோ, ஏறு த ழுவி வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.

தஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்:

தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்தும் கலைச்சின்னங்களில் சிறப்பிடம் பெறுவது தஞ்சை பெரிய கோயிலாகும்.இந்த வரலாற்று சிறப்பு மிக்க பெரிய கோயிலில் யாதவர்கள பற்றி உள்ள
கல்வெட்டுகள் சிலவற்றை காண்போம்.

இடையன் நள்ளாறன் எழுந்தருள்வித்த திருவுரு அருண்மொழி தேவவளநாட்டு மங்கல நட்டு மங்கலத்தை சேர்ந்த இடையன் நள்ளாறன் என்பவன் வில்லானைக்குக் குருக்களாக ஒரு பிரதிமம் எழுந்தருல்வித்தான் என்று இராஜராஜன் கல்வெட்டு கூறுகிறது. மனிதர்க்குஎடுப்பிக்கும் செப்பு விக்கரகங்களே பிரதிமம் எனப்பெறும். முதல் இராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலில் திருவிளக்கு எரிப்பிக்கப் பல ஆயிரக்கணக்கான ஆடு,பசு,எருமைகளைத் தந்துள்ளான். இவை பன்னூறு இடையரிடம் ஒரு விளக்குக்கு நான்தொரும் ஒரு உலக்கு நெய் அளக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.நான்கு கல்வெட்டுகள் திருவிளக்கு கொடைகளை கூறுகின்றன. 

இடையர் பற்றிக் கூறும் பகுதி அக்காலத் தஞ்சையில் இருந்த தெருக்களை குறிக்கின்றது. இச்சாசனங்களினால் தஞ்சைப் பெரிய கோயிற்குச் சுமார் 4000 ஆடுகளும்,4000 பசுக்களும்,100 எருமைகளும் திவிலக்கு எரிப்பதர்காகத்
தரப்பட்டிருந்தமை தெரிய வருகிறது. பெரிய கோயில் வடக்குத் திருச்சுற்றுச் சுவரின் வெளிப்புறத்தில் உள்ள கல்வெட்டுகள் 21,22,23,24 ல் முழுவதுமாக கோவிலுக்கு திருவிளக்குகள் எரிப்பதற்காக நன்கொடைகள் நந்த செய்தியைக் கூறுவதாகும். மேற்படி கல்வெட்டுகளினால் ஒவ்வொரு இடையருடைய பெயரும்,ஊரும் மற்றும் அவர்களுடைய ஊர்,தெரு போன்றவைகள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் இராஜராஜன் கொடுத்த கால்நடைகள் இடையரிடம் ஒப்படைக்கப்பட்டுத் திருவிளக்குக்குத் தினந்தோறும் நெய் பெறப்பட்ட விவரங்கள்,பெற்ற கால்நடைகளுக்கு இன்னின்னார் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உள்ளன.

ஆயர் குலத்தை சேர்ந்த பிரபலங்கள்:

 • இந்தியாவின் முதல் சுகந்திர போராட்ட வீரன் அழகுமுத்து கோன்
 • ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன் காலத்தை வென்ற வரலாற்று பொக்கிஷங்களான செஞ்சிக்கோட்டையையும், கிருஷ்ணகிரி கோட்டையையும் கட்டி ஆண்டவர்கள்
 • இடைக்காட்டுச் சித்தர் (பதினெண் சித்தர்களுள் ஒருவர்)
 • திருமூலர்(பதினெண் சித்தர்களுள் ஒருவர்)
 • குதம்பை சித்தர்(பதினெண் சித்தர்களுள் ஒருவர்)
 • திருமூலர்( 63 நாயன்மார்களுள் ஒருவர்)
 • ஆனாய நாயனார்( 63 நாயன்மார்களுள் ஒருவர்)
 • திரு.சட்டநாத கரையாலர் முன்னாள் சபாநாயகர்
 • முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் திரு.ராதாகிருஷ்ணன் பிள்ளை
 • இ.மா. கோபாலகிருஷ்ணக் கோனார், பொன்னையக் கோனார்    (தமிழகத்தில் பதிப்புத் துறை பெரிதும் வளர்ச்சியடையாத காலத்திலேயே மதுரையில் பதிப்புத் துறையில் ஈடுபட்டவர்கள்) 
 •  கார்மேகக் கோனார்
 • கவியரசு வேகடாசலம் பிள்ளை
 • மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை

 • ஆனந்தரங்கம் பிள்ளை
 • முத்துசாமிக் கோனார்
 • அய்யம்பெருமாள் கோனார்
 • முள்ளிக்குளம் ராமசாமிக் கோனார்.
 • மதுரை வி.எஸ். வீரநாதக் கோனார் -நாடகப் பாடலாசிரியர்(1972 - 1973 கலைமாமணி விருது பெற்றவர் )
 • எஸ். பெருமாள் கோனார் - கிராமியப் பாடல் ஆசிரியர்(1995-1996 கலைமாமணி விருது பெற்றவர் )
 • கவிக்கொண்டல் கவிஞர் வாணிதாசன்
 • பொதுத் தொண்டர் கா.வே. திருவேங்கடம் பிள்ளை
 • நகைச்சுவையாக இலக்கியம் படைக்கும் பேரா.தி.அ. சொக்கலிங்கம்
 • திரு.கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர்
 • திரு.C.குருசாமி யாதவ் முன்னாள் தலைவர் சங்கரன்கோவில் ஒன்றியம்
 • முன்னாள் அமைச்சர் திரு.கண்ணப்பன் (or) ராஜகண்ணப்பன்
 • திரு.S.பாலகிருஷ்ணன் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்(1996-2001),முன்னாள் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
 • முன்னாள் அமைச்சர் திரு.தமிழ்குடிமகன்
 • முன்னாள் அமைச்சர் திரு.பெரியகருப்பன் MLA
 • திரு. நாசே ராமச்சந்திரன், பொருளாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
 • திரு. திருவேங்கடம் தேவநாதன்,தலைவர் யாதவ மகா சபை 
 • திரு. கே ஸ் அழகிரி முன்னாள் மக்களவை உறுப்பினர் (கடலூர்) காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்
 •  நாசே ராஜேஷ் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர்
 • செந்தாமரை பிரபல வில்லன் நடிகர்
 • சசிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்
 • கஞ்சா கருப்பு நடிகர்
 • பரணி  நடிகர்

43 comments:

 1. director samuthirakani konar illaya

  ReplyDelete
  Replies
  1. Director samuthrakani --》
   Nellai district 36 krama yathavar samugathai sarnthavar.
   That means vadugayar(telugu speaking idayar)

   Delete
 2. Replies
  1. உறுதி படுத்தமுடியவில்லை ஆனால் கன்னட இடையர் கூறூகிறார்கள்

   Delete
 3. En paasamigu uravugale unnai vanangugiren.... En pondra vaalibargalin nedunall viruppam namma inam perumai konda padalgal thiraipadangal thevai... Aanda iname... Aandavan iname.... Uruvakiduvom Puthiya ezhuchiyai muyarchi eduuu... Namma kula perumai parai saatra kavingar ah illaii.... Getha. Oru konar song kodu!!!!

  ReplyDelete
 4. நல்லது.நான் கோனார் இனத்தைச் சேர்ந்தவன்தான். அரசு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். ஆண்டு வருமானம் 4,00,000.எங்கள் பகுதியில் யாதவர்கள் குறைவு.எனவே எனக்கேற்ற வகையில் B.ed படித்த பெண் இருந்தால் 8489306424 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

  ReplyDelete
 5. Nellai district 36 krama yathavar samugathai sarnthavar.
  That means vadugayar(telugu speaking idayar)

  ReplyDelete
 6. anand neenga sollurathu yadava ilaingargal anaivarum ethi parpathaey

  ReplyDelete
 7. Ex minister thugavoor madavan yadavar pls add

  ReplyDelete
 8. Ex minister thugavoor madavan yadavar pls add

  ReplyDelete
 9. பயமரியாதவன்

  ReplyDelete
 10. walajabad MLA GANESAN AIADMK belongs to yadav.
  MEENAKSHI MEDICAL & ENGINEERING COLLEGE CHAIRMAN .RATHA KRISHNAN
  BELONGS TO YADAVA COMMUNITY.
  TINDIVANAM MUNICIPAL CHAIRMA VENKATESAN BELONGS TO YADAV COMMUNITY

  ReplyDelete
 11. Dr,NAMALWAR Ph D Rtd JOINT DIRECTOR FISHERIES & MARINE RESEARCH
  Virugambakkam MLA DMDK PARTHA SARATHY
  Virugambakkam yadav majoriy consituncy

  ReplyDelete
 12. pleas read in English also north yadavas not read in tamil singal word so they cant understand communication problem

  ReplyDelete
 13. பரம்பை பாரி வேந்தன், முல்லைக்கு தேர்கொடுத்த பாரி மன்னனும் நம்ம கோனார் தான், இதை பற்றி முழுமையான விவரம் Wikipedia la இருக்கு

  ReplyDelete
 14. பரம்பை பாரி வேந்தன், முல்லைக்கு தேர்கொடுத்த பாரி மன்னனும் நம்ம கோனார் தான், இதை பற்றி முழுமையான விவரம் Wikipedia la இருக்கு

  ReplyDelete
 15. முல்லை மக்களே வணக்கம். ஒரு சந்தேகம்.
  குடும்பம் என்பது மருதம் நிலத்தில்தான் முதன்முதலில் தோன்றியது என்பது வரலாறு.
  ஆனால் நீங்கள் குறிபிட்டது ஏன்?

  சான்றுவுடன் கொடுக்கவும்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சான்று
   சான்று:
   நச்சினார்க்கினியர், புறநானூற்றின் 203, 272, 284, 305, 332 ஆகிய பாடல்களை உழிஞைத் திணைக்கு உரியனவாகக் காட்டியுள்ளார். ஆனால் புறநானூற்றில் இவை முறையே பாடாண்டிணை - பரிசிற்றுறை என்றும் நொச்சி - செருவிடை வீழ்தல் என்றும் தும்பை - பாடாண் பாட்டு என்றும் வாகை - பார்ப்பன வாகை என்றும் வாகை - மூதின் முல்லை என்றும் குறிக்கப்பட்டுள்ளன.
   மூதின் முல்லை என நச்சினார்க்கினியர் அவர்களால் பாடப்படுகிறது எனவே முல்லை திணையே மூத்த தினையகப்படும்

   Delete
  2. மனிதன் முதலில் காடுகளில் இருந்துதான் நில பகுதிக்கு சென்றான் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட ஓன்று எனவே மூதின் முல்லை என நச்சினார்க்கினியர் அவர்களால் பாடப்படுவது ஆச்சிரியமன்று

   Delete
  3. இதற்கான ஒரு வரி பதில் "கோன்" என்ற சொல் தான்.

   மருத நிலம் என்ற ஒன்று முல்லை நிலத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு நிலம் என்பதை தாம் அறிந்திருக்க கூடும்.
   மருத நிலத்தை உருவாவதற்க்கு முன்பே முல்லை நிலத்தில் மக்கள் குடும்ப வாழ்க்கையும், அரசையும் அமைத்திருந்தார்கள்.
   அரசனின் தோற்றமே கூட்டு குடும்பத்தில் இருந்து உருவான ஒன்று தான்.

   50 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் சமுக்த்தில் கோன் என்ற பெயர் தான் பட்டம்.
   என் பாட்டனார் பெயர் தனக்கோட்டி கோன். எங்கள் ஊரில் உள்ள அனைவருக்குமே கோன் எனற பட்டம் தான்.
   இப்போழுது தான் கோனார்,பிள்ளை, யாதவ் என பட்டங்களை பயன்படுத்துகின்றார்கள்.

   Delete
 16. வணக்கம் ,எனது பெயர் ,பார்த்தசாரதி இராமநாதபுரம்,மாவட்டம்,நமது சமுதாய யது அரசன் வரலாறு வேண்டும் அனுப்பமுடியுமா,எனது email,parthasarathyraj43@hot.mail.com,sarthyraj03@gmail.com

  ReplyDelete
 17. திருவண்ணாமலை 1931 கணக்கில் மக்கள் தொகை யாதவர் இல்லை..?

  ReplyDelete
 18. hi yadava siggangale na THIRUPPATHI YADAV pudukkoddai namma yadavar kula kadaul sri kirushnar peyarai serkaum avare anaivarukkum moothavar

  ReplyDelete
 19. மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி இடையர்களான •திரு.ஏ.வி.செல்லையாக்கோனார் மற்றும் •திரு. ஏ.வி.அணுகுண்டுஅய்யாவு அவர்களைப் பற்றிய செய்திகளுடன்....

  என்னுடைய

  |தேசியமும் தெய்வீகமும்|

  எனும் கட்டுரை படிக்க

   http://shribalasubiksha.blogspot.com/2018/09/blog-post.html?m=1

  ReplyDelete
 20. வாழ்க யாதவம்.

  ReplyDelete

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar