இடைச்சி கல்.
தஞ்சாவூர் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுவது, இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம்.
இந்த பிரம்மாண்ட ஆலயம் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ஆலய பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இடையர் குலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சிவ தொண்டு செய்ய விரும்பினார்.
அவரது பெயர் அழகி என்பதாகும்.
இதையடுத்து அந்த மூதாட்டி, தன்னால் இயன்ற தொண்டாக, கோவில் கட்டும் பணியில் இருந்த சிற்பிகளின் தாகத்தை தணிக்கும் பொருட்டு,
தயிர் மோர் வழங்கி வந்தார். இதையறிந்த மன்னன் இராஜராஜசோழன் மூதாட்டியின் சிவா தொண்டினை அனைவரும் அறியும் வகையில்,
80 டன் எடை கொண்ட கல்லில் "அழகி" என பெயர் பொறித்து, அதனை இராஜ கோபுரத்தின் உச்சியில் இடம்பெற செய்ததாக கூறப்படுகிறது.
அந்த கல் இடைச்சிக்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்த கல்லின் நிழலே, கருவறையில் உள்ள இறைவன்
பிரகதீஸ்வரின் மேல் விழுகிறதாம்.
நன்றி:Selva Murugan
தட்டச்சு:சந்திரவம்ச யாதவர் கூட்டமைப்பு