இராஷ்டிரிய ஜனதா தளம் ஓர்இந்திய அரசியல் கட்சியாகும். இது1997 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவால் தொடங்கப்பட்டது. இதன் சின்னம் கூண்டு விளக்கு (Lantern) ஆகும்.
பீகார், ஜார்கண்ட்,மணிப்பூரில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட இராஷ்டிரிய ஜனதா தளம், வடகிழக்கு மாநிலங்களில் போதிய வாக்குகள் பெற்றதால் 2008இல் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
2004 தேர்தலில் 24 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற இராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தது, இதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தார்.
இராச்டிரிய ஜனதா தளம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியாகும். ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான தேசிய கட்சி என்ற அங்கீகாரம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட லாந்தர் சின்னத்தை பீகார், ஜார்கண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அந்த மாநிலங்களில் இது மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment