Quick Links

Thursday, October 24, 2013

கவிதை

யாரிவன்.... யாரிவன்...... யாரிவன்...... !
இருபது கோடி பேரின் உறவானவன் !
இந்நாட்டு மக்களின் இதயமானவன் !
இடையனென்று பெயரெடுத்த இனியவன் !
யாரிவன் ஹே ஹே யாரிவன் !

சந்திர குலத்தில் தோன்றிய சத்ரியன் !
சகல கலைகள் யாவும்
அறிந்த வல்லவன் !
இந்நாட்டை ஆண்ட மன்னவன் !
யாரிவன் ஹே ஹே யாரிவன் !
மாய கண்ணன் அவன்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவன் ---(2)

பகவான் யாதவன் - நானும் யாதவன் !
பகவான் யாதவன் - நானும் யாதவன் !


Kannan is our God Father
we don't have any bother !
Kannan is our God Father
we don't have any bother !

யாரிவன் யாரிவன் யாரிவன்
யாதவன் யாதவன் யாதவன் !

நீ நீயென இருந்தால்
நான் நானென இருப்பேன் !

நீ தீயவன் போல திரிந்தால் ?
நான் தீயென வந்து
உன்னை அழிப்பேன் ! (யாரிவன்)

யாவும் அறியாமல் பல பேர் உண்டு
யாதவனை அறியாது யாரிங்கு உண்டு !------ (2)

பன்பறிவோம் ! யாருக்கும் பகைமை செய்யோம் !
அன்பரிவோம் ! யாரையும் அடிமை செய்யோம் !
தானம் செய்வோம் ! தர்மம் செய்வோம் !
யாரையும் தரம் குறைய செய்யோம் !

எங்கும் யாதவன் எதிலும் யாதவன் !
யாவரும் போற்றிட மீண்டும்
வருவான் யாதவன் !

செங்கோட்டையில் அமர்ந்து செங்கோல் ஏந்தியே
நாட்டை செம்மை செய்திட !
சீக்கிரம் வருவான் யாரவன் ?
ஆயர்குல மைந்தனவன் !----(2) (யாரிவன்)

நன்றி
செந்தில்குமார் யாதவ்

No comments:

Post a Comment