Quick Links

Thursday, March 13, 2014

முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி






முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ் வாடி கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்தனி அணியாக போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறது.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் இந்த தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். தற்போது அவர் மெயின்பூரி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். அந்த தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அத்துடன் அசம்கார் தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அசம்கார் தொகுதி தற்போது பாரதீய ஜனதா வசம் உள்ளது. இங்கு முஸ்லிம்கள், யாதவர்கள் அதிக அளவில் வசிப்பதால் தனது வெற்றிக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று முலாயம்சிங் யாதவ் கருதுகிறார்.
அசம்கார் தொகுதியானது பூர்வாஞ்சல் மண்டலத்தில் உள்ளது. பூர்வாஞ்சலில் 3 தொகுதிகள் சமாஜ்வாடி கட்சி வசம் உள்ளது. எனவே இங்கு போட்டியிடுவதன் மூலம் பூர்வாஞ்சலில் மற்ற தொகுதிகளையும் கைப்பற்ற ஏதுவாக இருக்கும் என்று முலாயம் சிங் யாதவ் கருதுகிறார்.

No comments:

Post a Comment