பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்
ஆக்கப்பூர்வமான தொடர் பணியில் - யாதவர் தன்னுரிமைப் பணியகம்
கட்டாலங்குளம் அழகுமுத்துக்கோன் நினைவு மணடபத்தில் வரலாற்று பதிவுகள் இல்லை என்பதை பலமுறை குறிப்பிட்டு இருந்தோம், அதனை தொடர்ந்து 11/07/2014 அன்று காலை யாதவர் தன்னுரிமைப் பணியகம் - மாணவர் அணியினர் மிக சிறப்பாக மதுரை யாதவர் கல்லூரியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள கட்டாலங்குளம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு மாலைஅணிவித்து அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கு செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியை சந்தித்து அவரிடம் ஆவணங்களையும், பிரபல ஓவியர் அய்யா ராமு வரைந்த வரலாற்று ஓவியங்களையும் காண்பித்தோம். மிக விரைவில் வரலாற்றுடன் ஓவியங்கள் அனைத்தும் அனுமதியுடன் வைக்கப்பட்டு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி !!! Athiban Yadav
No comments:
Post a Comment