Quick Links

Monday, July 28, 2014

மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா

IMG-20140728-WA0116மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் கணபதி விழா நடக்கவுள்ளது இதற்க்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் விழா நடத்துவது பற்றி சில முக்கிய முடிவுகளை எடுக்கப்பட்டது இந்த விழாவில் பேசிய அந்தேரி யாதவ மகாசபை தலைவர் திரு.மாடசாமி யாதவ். என் உயிரிலும் மேலான யாதவ சொந்தங்களே இன மானம் காக்க ஓரணியில் திரள்வோம்.தமிழகத்தில் யாதவனின்றி எதுவும் நடக்காது என நிருபித்து காட்டுவோம்.ஆண்டவன் அவதரித்த குலம் நமது ஆயர் குலம்,ஆனால் ஆள முடியவில்லை?

முதல் விடுதலை வீரனை ஈன்ற இனம் நமது ஆயர் இனம்,இன்று தமிழகத்தில் அடையாளம் இல்லாமல் இருக்கிறது.இதற்கு யார் காரணம்?
மகாபாரதம் மூலம் உலகிற்கு அரசியலை கற்று தந்த இனம் இன்று அரசியல் அங்கிகாரம் இல்லாமல் தவிக்கிறது.இதற்கு யார் காரணம்?
நம் சமுதாயத்தின் மீதான அடக்கு முறையை அழித்தெறிய ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்.
என்றும் சமுதாய பணியில் ஓன்று திரள வேண்டும் என்றும் வரும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை மிக சீரும் சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்றும் பேசினார் அதனை தொடர்ந்து  கூட்டத்திற்கு வந்த அணைத்து உறுப்பினர்களுக்கும் அந்த கிளையின் ஆலோசகர் திரு.முத்துகுமார் யாதவ் அவர்கள் நன்றி  தேரிவித்தார்  பின்னர் அந்தேரி யாதவ மகாசபை சார்பாக அந்த ஏரியா சிவசேன பிரமுகர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் அணைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
நன்றி
   S P Das, Mumbai

No comments:

Post a Comment