Quick Links

Sunday, March 1, 2015

ஆட்டோ டிரைவர் கொலையில் அலச்சியம்:யாதவ மகா சபை

ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்:                                                                                              

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு அரசு ரூ. 50 லட்சம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி. தேவநாதன் யாதவ் வலியுறுத்தினார்.
திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டோ ஓட்டுநர் பொன்னையா (24), பிப். 25 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து, 3 தினங்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பொன்னையா குடும்பத்தினரை தேவநாதன் யாதவ் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸார் கவனம் செலுத்தாமல் பிற பணிகளில் ஈடுபடுகின்றனர். தச்சநல்லூரில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பான பிரச்னை குறித்து 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொன்னையா கொலை செய்யப்பட்டார்.

இக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக அங்குள்ள காவல் ஆய்வாளரை சேர்க்க வேண்டும். காவல் ஆய்வாளர், உதவி ஆணையர் இருவர் மீதும் மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்படும்.

உழைக்கும் பருவத்தில் பொன்னையா கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே அவரது குடும்பத்திற்கு அரசு ரூ. 50 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். தச்சநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றார் அவர்.

பேட்டியின்போது, தென்மண்டல அமைப்புச் செயலர் மரியசுந்தரம் யாதவ், திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர் முத்து, மாவட்டச் செயலர் சரவணன், இளைஞரணி நிர்வாகி சுந்தர், மாநில எஸ்.டி, எஸ்.சி செயலர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



No comments:

Post a Comment