யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு அளிப்போம் என தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாவீரன் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழாவை 2000ஆம் ஆண்டு வரை மாநில அளவிலான அரசு விழாவாக தமிழக அரசு நடத்தி வந்தது. தற்போது, அது மாவட்ட அளவிலான விழாவாக நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மாவீரன் அழகுமுத்துக்கோனின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு குரு பூஜை விழாவை அரசு விழாவாக தொடர்ந்து நடத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவர்களுக்கு 9 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாவீரன் அழகுமுத்துக்கோனின் சிலையை அனைத்து மாவட்டங்களிலும் நிறுவ வேண்டும். பள்ளி வரலாற்று பாடங்களில் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்குத் தான் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்றார்.
No comments:
Post a Comment