Quick Links

Saturday, February 6, 2016

யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் கூட்டம்

யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தென்மண்டல யாதவர் சங்கத்தின் தலைவர் ராணி ராமகிருஷ்ணன், செயலர் ஏ. ஆவுடையப்பன், யாதவர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் கே. தங்கவேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், "யாதவர் பண்பாட்டுக் கழக பொன்விழாவை ஆகஸ்ட் மாதம் நடத்துவது. பொன்விழா சிறப்பு மலர் வெளியிடுவது. 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற சமுதாய மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், முக்கிய பிரமுகர்கள் அ. முத்துக்கிருஷ்ணன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், காந்திராஜன், வேலுதாஸ், வேல்தாஸ், முத்துசாமி, வெங்கடேஷ், துணைச் செயலர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் சுப்பையா வரவேற்றார். பொருளாளர் கே. பாவநாசம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment