Quick Links

Saturday, May 14, 2016

அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் லட்சியம்:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை

மதுரையில் தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘யாதவ மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளின் தலைவர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். இவருக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்காமல் அதிமுக புறக்கணித்துள்ளது. அவரை புறக்கணித்த அதிமுகவை ஒட்டுமொத்த யாதவ சமுதாய மக்களும் புறக்கணிப்போம். ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாதவ சமுதாய வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்து பாடம் புகட்டுவார்கள். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் லட்சியம்,’’ என்றார்.



No comments:

Post a Comment