மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் மணிமண்டபம் சிலை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2004 திறக்கப்பட்டது..ஆனால் தற்பொழுது அழகுமுத்துக்கோன் சிலை உடையும் தருவாயில் உள்ளது இதை பற்றி பல முறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்களிடம் நேரிலும் மனு மூலமாக தெரிவித்தோம் எந்த பலனும் இல்லை...
வருடா வருடம் ஜூலை 11 ம் தேதி அழகுமுத்துக்கோன் ககுருபூஜை தமிழக அரசால் நடத்த படுகிறது அன்றைய தினம் மட்டும் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் வருவார்கள் அவர்களிடம் பலமுறை தெரிவித்துளோம்...
அடுத்த வருடம் கண்டிப்பா மாற்றுகிறோம் என்று 7 வருடங்களாக தெரிவிகிறார்கள் ஒன்றும் நடக்க இல்லை, இப்படி இருக்க முதலமைச்சர் தனி பிரிவில் மனு கொடுக்க சொன்னார்கள் அதையும் 3 முறை கொடுத்துள்ளோம் எந்த பயனும் இல்லை
புதிய முதல்வர் திரு பழனிசாமி அவர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்தோம் அது மட்டும் இல்லாமல் அவர்கள் தலைமை அலுவலகத்திலும் கடிதம் மூலமாக தெரிவித்தோம்....அழகுமுத்துக்கோன் அவர்களின் சிலையை மற்றமால் என் உயிர் போகாது என்று சபதம் எடுத்துள்ளேன்.
இப்படிக்கு
மூர்த்தி யாதவ்
கோகுலம் அறக்கட்டளை