Quick Links

Thursday, March 2, 2017

யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும்: அழகு முத்துகோன் பேரவை

காளையார்கோவில்: யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி அழகு முத்துகோன் பேரவை வலியுறுத்தியுள்ளனர்.காளையார்கோவிலில் நிறுவனத்தலைவர் வேல்ராஜ் கொடியேற்றினார். பேரவை ஆலோசனைக்கூட்டம் யாதவா சங்க ஒன்றியதலைவர் அங்குசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் ராஜன், செயலாளர் சுபாஷ் சேர்வைக்காரர், இளைஞரணி செயலாளர் கோகுல் சத்யா,மகளிரணிதலைவி சுமித்ரா, மாவட்ட செயலாளர் பாலா,பொருளாளர் திரு மூர்த்தி பங்கேற்றனர்.

தீர்மானங்கள்: அரசு யாதவா சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், கால்நடை வளர்ப்புக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், ஆடு, மாடுகள் வாங்கி பராமரிப்பதற்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நன்றி தினமலர்

No comments:

Post a Comment