Quick Links

Sunday, January 11, 2015

திருப்பதி கோவிலில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் குடும்பத்துடன் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று காலை குடும்பத்துடன் சென்று வழிபட்டார்.

உத்தரபிரதேச முதல்– மந்திரி அகிலேஷ் யாதவ் தனது மனைவியும், எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் மற்றும் குழந்தையுடன் நேற்று திருமலை வந்தார். அவரை தேவஸ்தான இணை அதிகாரி ஸ்ரீனிவாசராவ் வரவேற்றார்.
இரவு ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் லட்டு பிரசாதம், தீர்த்த பிரசாதம் வழங்


கப்பட்டது.
முன்னதாக அகிலேஷ் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:–
நான் மாணவனாக இருந்த போது திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசித்தேன். அதன்பின் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. பின்னர் எனது தந்தை முதல்–மந்திரியாக இருந்த போது ஒருமுறை வந்தேன்.

இப்போது மீண்டும் வந்து உள்ளேன். நாடு முழுவதும் மக்கள் சுபிட்சமாக இருக்க ஏழுமலையானை வேண்டுகிறேன்.



No comments:

Post a Comment