Quick Links

Sunday, February 22, 2015

இளையான்குடியில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம்

இளையான்குடி அருகே உள்ளது கொங்காம்பட்டி கிராமம். இங்கு யாதவர் சமுதாயம் சார்பில் ஆடு வளர்ப்போர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் கிங் கருப்பையா தலைமை தாங்கி னார். செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் படி யாதவர் கள் சமுதாயத்தி னரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆடு வளர்ப்போர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். கொங்காம் பட்டி- இளையான் குடி சாலையை சீரமைக்க வேண்டும். யாதவர் சமுதாயத் தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும். வீரன் அழகுமுத்துகோன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என் பது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது .

No comments:

Post a Comment