கிமு. 3ஆம் நூற்றாண்டில் படம் தொடங்குகிறது. முதலில் ஆயர் என்னும் சங்ககால தமிழ் மக்களில் ஒரு குழுவினர் ஆய்க்குடி என்னும் வளமான ஊரில் வாழ்கின்றனர். வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டமொன்று அவ்வூரில் உள்ள ஆயர்களில் பலரைக்கொன்று மீண்டவர்களை ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர். தப்பித்த ஆயர்கள் தங்களுக்கென முல்லைக்கொடி என்ற ஊரை உருவாக்கி வாழ்கின்றனர். அந்த ஊரில் பாலை என்னும் நில வறட்சிக்காலம் வரப்போவதாக அந்த ஊரைச்சேர்ந்த முதியவரும்
கணியருமான பாலை முதுவன் கூறுகிறார். அந்த நில வறட்சிக்காலம் வந்தால் வேட்டையாடுதல், ஆநிரை மேய்த்தல், உழவு செய்தல், மீன் பிடித்தல் என நால்வகை திணைத்தொழில்களையும் செய்யாமல் பாலை நில மக்கள் செய்யும் களவு வேலை செய்தே பிழைக்க வேண்டும் என்று அவ்வூர் மக்களையும் தலைவனையும் எச்சரிக்கிறார் முதுவன். வரட்சி வருமோ என்று பயந்து முல்லைக்கொடி மக்கள் சிலர் ஆயக்குடியில் உள்ள வந்தேறி மக்களின் வணிகச்சாத்தனை கொல்கின்றனர். இது முல்லைக்கொடி தலைவனுக்கு தெரிய வர ஆயக்குடி வந்தேறிகளின் வணிகச்சாத்தனை கொன்றவர்களை கண்டித்ததுடன் வணிகச்சாத்தனின் பிணத்தை ஆயக்குடி வந்தேறிகளின் தலைவனிடம் அனுப்பி மன்னிப்பு கோருகிறார் முல்லைக்கொடித் தலைவன் விருத்திரன். மன்னித்து விட்டதாகக் கூறி நாடகமாடி இணக்கம் பேச வேறொரு இடத்துக்கு வருமாறு அழைத்து வணிகச்சாத்தனின் மீது வேலெறிந்து கொன்றவனை வணிகச்சாத்தனின் இணையாள் மூலமாகவே கொல்கிறான் வந்தேறிகளின் தலைவன் அரிமாவன். அதோடு நில்லாது முல்லைக்கொடியில் முக்கியமானவனான வளன் என்பவனை கடத்திக் கொடுமையும் செய்கிறான். தப்பித்த மற்றவர்கள் முல்லைக்கொடிக்கு செல்கின்றனர். வலனை மீட்பதற்கு விருத்திரன் தம் மக்களிடம் ஆய்க்குடி வந்தேறிகள் மீது போர் தொடுக்குமாறு கூறுகிறார். ஆனால் அவர்களை எதிர்க்க சில சூதான வழிகளை கையாள வேண்டும் என்கிறார் முன்னாள் முல்லைக்கொடி தலைவரும் விருத்திரனின் தந்தையுமான பாலை முதுவன். வலனை அவர்கள் கடத்தியதற்கு விருத்திரனின் கவனக் குறைவு தான் காரணம் என்கிறார் பாலை முதுவன். இதை பொருக்காத விருத்திரனின் துணைவியார் பாலை முதுவனிடம் கேள்வியை கேட்க அப்போது பேசப்படும் வசனம் தான் பின் வருவது.

உரையாடல்
விருத்திரனின் தலைவி - புடுங்கி வாழாம உழைத்து வாழ வேண்டும் என என் தலைவர் சொல்றார். அதில் என்ன குத்தத்த கண்டீங்க.
பாலை முதுவன் - என் பெயர் வெறும் முதுவன் அல்ல. பாலை முதுவன். பாலை முதுவன். ஏனென்றால் நான் பலையப் பார்த்தவன். நானும் என் தலைவி ஆதிமந்தியும் கூடிச் சிரித்து உடன்போக்கு சென்று கற்பு மணம் பூண்டு பிள்ளையை பெற்ற போது இதே முல்லை நிலத்தில் பாலை வந்தது. பாலை வந்தது.
வெப்பம் சுட்டெறிச்சுது. புல் பூண்டுகள் கருகிப் போச்சு. ஆநிரைகள் நாவிழந்து மடிஞ்சி போச்சு. என்ற புள்ளைங்க பாலுக்கு ஏங்கி அழும். அவ தாய் முலவத்தி சுருண்டு கிடக்கும். என்ற புள்ள அவ தாய் முலய போயி சவச்சுப் பாப்பான். அங்க ஒன்னும் வராது. ஒன்னும் வராது.

நானும் துவண்டு போகல. ஆநிரை மேய்த்த ஆயன் ஆரலைக் கள்வனானேன். பாலை மறவன் ஆனேன். ஒரு வண்டியும் விடல. மறிச்சேன். பறிச்சேன். குடிகளுக்கு கொடுத்தேன். மறு மழை வர ஏழு ஆண்டுகள் ஆச்சு. அதுவர பாலை நிலத்துல மறவனா வாழ்ந்தேன். பாலை நிலத்துல மறவனா வாழ்ந்தேன். விருத்திரனும் தான்
குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடனும். முல்லை நிலத்தில் ஆநிரை மேய்க்கனும். மருத நிலத்தில் உழவு செய்யனும். நெய்தல் நிலத்தில் மீன் பிடிக்கனும். பாலை நிலத்தில் கொள்ளை தானய்யா அடிக்கோனும்.
முன்கதைச் சுருக்கம்

உரையாடல்
- விருத்திரன் - அரிமாவன் என்றால் என்ன? (வந்தேரிகளின் தலைவன் அரிமாவன். அவர்களின் கொடி சிங்கம்)
விருத்திரன் - சிங்கம் நம் நாட்டு விலங்கல்ல. அது எங்கிருந்தோ வந்தது. ஆனால் வந்த இடத்த புடிச்சி வைக்குற வெறி அதிகம். புலி... இங்க புறந்தது தான். ஆனா அதுக்கு கவனக் குறைவு அதிகம். அதனால இருந்த இடத்த எல்லாத்தயும் விட்டிருச்சி.
ஆனால் சிங்கம் சுகமா வாழப் பழகுனது. கூட்டமா தான் வாழும். நிறைய இறை வேனும். பசி பொறுக்காது.
புலி துன்பங்கள் தாங்கும். தனியா வேட்டையாடும். பசி பொறுக்கும். ஆகையால போரில் சிங்கம் முதலில் வெல்லும். இறுதிக்கும் இறுதியாக புலி தான் வெல்லும்.
விருத்திரன் - நீ புலி என்றால் தனிச்சும் போர் செய்யனும். எதிரி கூட்டமாத்தான் வருவான். நாம தனித்து நிக்கனும். ஆளு இருந்தாலும் அடிக்கனும். இல்லனாலும் அடிக்கனும். எதிரி பலத்தோட வந்தால் பதுங்கு. எத்தன காலமானாலும் பதுங்கியே இரு. அவன் என்னக்காவது சோர்வடையும் போது ஒரே அடியில வீழ்த்து.
நான் போர்ல காணாம போயிட்டாலோ செத்துப் போயிட்டாலோ தலைவன் எங்க இருக்கான் தலைவன் எங்க இருக்கான்னு என்னத் தேடாத. எதிரி எங்க இருக்கான் எதிரி எங்க இருக்கான்னு அவனத் தேடு. இதெல்லாம் செஞ்சா மட்டும் தான் நீ புலி.
No comments:
Post a Comment