Quick Links

Tuesday, March 17, 2015

யாதவ இளைஞர்களின் பாதை..........கோகுலம் அறக்கட்டளை

அன்புகொண்ட யாதவ சொந்தங்களே, 

உலகம் முழுதும் இருக்கும் யாதவ இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொணர்ந்து, வலுவான சமூக அடித்தளம் அமைக்கும் செயல்பாட்டை கோகுலம் அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது. அந்த வலுவான சமூக அடித்தளமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை தரும். இன்று யாதவர்களின் எண்ணிக்கை குறித்த பல செய்திகளை / அரசு கொடுத்துள்ள புள்ளிவிபரங்களை தவிர்த்து நேரடியான புள்ளி விபரங்களை சேகரித்து வெளிப்படுத்துவதின் மூலம் நமக்கான விகிதாசார உரிமையை அனைத்து தளங்களிலும் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கோகுலம் அறக்கட்டளை எந்த வித அரசியல் பின்னனியில் இயங்காது அமைப்பு மற்றும் இயக்கத்துடன் செயல்படும் தியாகி அய்யா அழகுமுத்துக்கோன் தியாகம் ,வீரம், செயல்பாடுகளை உலகிற்கு உணர்த்தும் வகையில் நினைவு சின்னம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது நினைவிடம் நாம் அவருக்கு செலுத்தும் நன்றிகடனா?. எவ்வித எதிர்பார்ப்புமின்றி கடல் தாண்டி வேலை செய்யும் யாதவர்கள், தமிழகம் முழுதும் உள்ள இளைஞர்களையும் ஒன்றினைத்து நினைவு தூன் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐயா சுபாஷ் யாதவ் உதவிடன் நினைவுதூன் அமைப்போம் இதில் வேறுபாடு வேண்டாம் அனைவரும் யாதவம் செய்வோம் என் மேல் உங்களுக்கு கோபம் என்றால் அதை பிறகு பார்போம் இப்பொழுது நம் அனைவரும்ஒன்று படுவோம் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்றத்தை மையப்படுத்தி அறிவுசார் தளத்தை உருவாக்கவும் அதன் வழிகாட்டுதலின் படி செயல்திட்டங்களை நடைமுறைபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உறுதியான, திடமான, நேர்மையான, தொடர்ச்சியான செயல்பாட்டில் சமூகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இதில் கோகுலம் அறக்கட்டளை தொடர்ந்து பயனிக்கும் இயன்றதை செய்வோம் நம் இனத்திற்குசெய்வோம் 

என்றும் சமூக உணர்வுடன்
 ஜெ மூர்த்தி யாதவன் 
கோகுலம் அறக்கட்டளை 
00968-91614631 
gokulamarakkattalai@gmail.com

No comments:

Post a Comment