Quick Links

Thursday, March 5, 2015

மருது பாண்டியர் வாழ்வின் நிகழ்வுகள்-ராமுக்கோன்,ஆட்டு மந்தையின் காவல்

மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட காளையார்கோவிலில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாவில் யாதவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. அன்றைய நாள் முழுவதும் கோவில் யாதவர்களின் கட்டுபாட்டில் இருக்கும். மாட்டுவண்டி பந்தயம் குதிரை பந்தயம் நடக்கும். இரவு முழுவதும் கலை நிகழ்ச்சி நடக்கும். அன்றைய நாள் சிவகங்கை மாவட்ட யாதவர்கள் அனைவரும் அங்கு கூடியிருப்பார்கள்.
சிவகங்கை சீமையின் பாளையக்காரர் மருதுபாண்டியர்களின் படையில் வீரனாக இருந்தவர் ராமுக்கோன். உருவாட்டி அருகே அம்பலார் ஒருவர் ஆட்டு மந்தை வைத்துளார்.
அவரின் மந்தையில் தினமும் ஒரு ஆடு காணாமல் போய்விடுமாம் அம்பலாரால் எப்படி காணாமல் போகிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் அவர் மருதுபாண்டியரை சந்தித்து முறையிட்டார்.மருதுபாண்டியர் உடனே அம்பலாரே கவலைவேண்டாம் கோனாரை அனுப்புகிறேன் போய்வாருங்கள் என்றார். அன்று இரவு கோனார் அவர்கள் ஆட்டு மந்தையில் காவலில் இருந்தார். திடீரென்று ஒரு கரடி ஆட்டை தாக்கியது உடனே கோனார் சீறி பாய்ந்து கரடியிடம் சண்டையிட்டு அதனின் தலையை வெட்டி எடுத்தார். மருதுபாண்டியரிடம் சென்று இந்த மிருகம்தான் ஆட்டை பிடித்து உண்கிறது என்றார். மருதுபாண்டியர் மிரன்டு போனார். கரடியின் தலையை வெட்டி எடுத்து வந்து சாதாரணமாக சொல்கிறாரே என்று கோனாரை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் கட்டிய காளையார்கோயிலில் இராஜகோபுரத்துக்கு முன்பு கரடி தலையுடன் கூடிய ராமுக்கோன் சிலையை நிருவினார். அந்த சிலை இன்றும் உள்ளது

No comments:

Post a Comment