
மதுரையில் நேற்று நடந்த போராட்டத்துக்கு யாதவர் சங்கத் தலைவர் சரசுமுத்து தலைமை வகித்தார். மாநில வக்கீல் அணி தலைவர் சங்கராஜித், மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ், தென் மண்டல அமைப்பாளர் கண்ணன் மற்றும் ஆடு வளர்ப்போர் உரிமையாளர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், அவர்கள் எச்சரிக்கையை மீறி ரயில்வே ஸ்டேஷனுக்குள் சென்று ரயிலை மறிக்க முயன்றனர். இதையடுத்து, 55 பேரை திலகர்திடல் போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment