எருமை, பசு, ஆடு ஆகிய மூவினத்தை வளர்த்து அவற்றின் பயன்களால் வாழ்க்கை நடத்தும் ஆயர் மூவகைப் படுவர்.
போரிடும் காளையின் கழுத்தில் பாய்ந்து மாலையாய் அதனைத் தழுவியவன் எருமைக் கூட்டத்தை உடைய ஆயர்மகன் அல்லவா ? காளையின் வலிமையை அடக்காமல் அவன் மீளான் என்பது இதன் பொருள்.· பால், மோர் - விற்றல்
- கோட்டினத்து ஆயர் - எருமைக் கூட்டத்தை உடையவர்.
- கோவினத்து ஆயர் - பசுக் கூட்டத்தை உடையவர்.
- புல்லினத்து ஆயர் - ஆடுகளை உடையவர்.
மறப்பண்பில் பசுவின ஆயரை விட எருமை இன ஆயரே சிறந்தவர் என்ற கொள்கை ஆயருக்கு உண்டு.
இஃதுஒத்தன்
கோட்டினத்து ஆயர்மகன் அன்றே மீட்டுஒரான்
போர்புகல் ஏற்றுப் பிணர்எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன்.
(கலித்தொகை- 103 : 32-35)
(கோட்டினத்து = எருமை இனம்; ஒத்தன் = ஒருவன்; பிணர்எருத்து = சொரசொரப்பு உடைய கழுத்து; தார் = மாலை)

ஆவினத்தை வளர்த்து ஆவின் பயனான பால், மோர், வெண்ணெய் விற்று வருகிறாள் ஆயர் குலப் பெண் ஒருத்தி. தலையில் மோர்ப் பானை ஏந்திப் பெரிய ஊர்களையும், சிறிய ஊர்களையும் கடந்து செல்கிறாள் அவள். அழகும் இளமையும் நிறைய, மோருடன் வந்தவளைக் கண்டபோது ஊர் முழுவதும் ஆரவாரம் உண்டாகிறது.
காமக் கடவுள் பாலுடன் செல்லும் அழகிய ஆயர் குலப் பெண்ணைக் கண்டால் அம்புகள் பயனற்றன என்று அவற்றைக் கீழே இட்டு விடுவான் என்கின்றனர்.
இவ்வாறு பிறர் ஏவப் பால், மோர், வெண்ணெய் விற்போர் ‘வினைவல பாங்கர்’ எனக் குறிக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment