Quick Links

Friday, January 8, 2016

ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி

ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில் அந்த தடையை தகர்த்தெறியும் விதமாக பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் கடந்த 7-5-2014 அன்று ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்துள்ள மறுசீராய்வு மனுவும் நிலுவையில் உள்ளது. 

பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் மேலோங்கி வந்தது.

இந்நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆயர் குலத்தின் வீர விளைடாட்டு ஜல்லிக்கட்டு நடைபெற முயற்சி எடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

No comments:

Post a Comment