பாண்டியர்கள் யார்?
"மலிதிரை யூர்ந்து தன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்
புலியோடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர்க்கெண்டை
வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்
தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்".
ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி
கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது "மீன்" கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர் இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும். மேலும் ஒரு வரலாற்று ஆசிரியரின் கூற்றையும் கவனிக்க வேண்டும். மங்கையன் அல்லது ஆதியதுனே என்ற யாதவனே பாண்டிய அரசனை உருவாக்கியவன் என வில்லியம் கோயிலோ என்பவர் கூறுகிறார்.
"The pandiyas built their pedigree much later,for an inscription of A.D. 1141 one of first of it's kind-traces their origin to mangayan or adiyadudevan of the yadava branch from whom sprang pandiyas".
-Prof William Coehlo
மற்றோர் இலக்கியச் சான்று
ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் யாதவர்கள் என்பதனை விளக்குகிறார்.
"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்".
பாட்டு விளக்கம்:
பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். எனவே மன்னனான பிறகும் குட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.
கோ- என்றால் மன்னன், பசு என்ற இரு பொருள் உண்டு. இந்த இரண்டு பொருளிலும் இவர் பயன்படுத்துகிறார்.
மற்றோர் சரித்திர அதாரம் கூறுகின்றது
தமிழகத்தின் மீது சூறாவளி தாக்குதல்கள் நடத்தி வேங்கடம் முதல் குமரி வரை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த களப்பிரர் என்பவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உண்டு.
4-ம் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டு வரை தமிழகம் முழுவதும் தடுமாறச் செய்த இக்களப்பிரர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது களப்பிரரது கொடுமைகளிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உரியது. அவர் 590-620ல் அரசாண்டார். அவர் காலம் பாண்டியர் புத்துயிர் பெற்றனர்.
"All historiyans are agreed on the point that roughly.between the IV and VI centuries the new race of kalabhras took hold of the south throwing all the erstwhile rulership of the region into darkness and disrepute, so that when the velkudi grant of the later day pandya refers to the defeat effected by kadun kone over this race usurpers"
-nilakanta sasthiri.
அனால் கோனார்கள் பாண்டிய மன்னர்களின் வழி வந்தவர்கள் என்று இதுவரையும் சொல்லி கொண்டதுமில்லை. இப்படி தற்பெருமை கொள்வது யாதவர்களின் வழக்கமில்லை இபொழுது அவர்கள் தங்கள் வரலாற்றை மறந்து கொண்டு இருப்பதால் சொல்லி தான் அக வேண்டும். பாண்டிய மன்னர்கள் யாதவ குலத்தவர் இது தான் உண்மை வரலாறு.
நன்றி,
சுபாஷ் சேர்வை யாதவ்.