ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label யாதவர் தன்னுரிமைப் பணியகம்(YES). Show all posts
Showing posts with label யாதவர் தன்னுரிமைப் பணியகம்(YES). Show all posts
Saturday, December 10, 2016
Monday, March 14, 2016
யாதவர் தன்னுரிமைப் பணியகம்/Yadava Empowerment Services
உறவுகளுக்கு, வணக்கம்.
யாதவர் தன்னுரிமைப் பணியகம்/Yadava Empowerment Services
நாம் நமது உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ, நமக்குள் இணைப்பை ஏற்படுத்தி வாழ்வில் முன்னேற, ஒத்த கருத்துள்ளவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க 'யாதவர் தன்னுரிமைப் பணியகம்' முயன்று வருகிறது. இதன் அலகுகளாக யாதவர் தொழில் வணிகக் கூடம், ஆயர் கருவூலம், முல்லைத்தாயம் கலைக்குழு ஆகியவை சமூக மக்களின் "வாழ்வை மேன்மைப்படுத்துதல்" எனும் உயரிய நோக்கோடு பணியாற்றுகின்றன.
YES is functioning with the soul aim of leading a pleasant life with our relatives, to improve the standard of our life having a bond among ourselves and to unite the people, who are with same attitude, under a safe roof. With those aspects Yadava Chamber of Commerce, Yadava Treasury, Mullaithayam are rendering their valuable service successfully.
'யாம்/YES' உறுப்பினராக இணைத்து கொள்ள தொடர்புக்கு: 0452 4354343www.yadavachamber.com
சமூக நலன் கருதி அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
செந்நாப்புலவர் பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் நினைவகம் மிக விரைவில் திறக்கப்பட உள்ளது - யாம்/YES
உறவுகளுக்கு வணக்கம்.
செந்நாப்புலவர் பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் நினைவகம் குடும்பத்தாரின் முயற்சியாலும் சமூகப் பெரியவர்கள் உதவியுடனும் மிக விரைவில் இராமநாதபுரம், அபிராமம் - அகத்தாரிருப்பு கிராமத்தில் திறக்கப்பட உள்ளது, இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நன்றி.
இனஉணர்வின் நெகிழ்வில் - யாம்/YES
Saturday, March 12, 2016
ஆடுவளர்போர் சங்கம் அதிரடி' - நோட்டாவுக்கு எங்கள் ஒட்டு
வணக்கம். மதுரையில் யாம்/YES(யாதவர் தன்னுரிமைப் பணியகம்) முயற்சியால் "தமிழ்நாடு ஆடுவளர்ப்போர் சங்கம்" கோரிக்கையை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது, கோரிக்கைகளுக்கு நம்பிக்கை வாக்கு அளிப்பவர்களுக்கு நன்றியோடு வாக்களிப்போம்... இல்லையென்றால் "நோட்டா/NOTA" வாக்களிப்போம் என அனைத்து கட்சிக்களுக்கும் ஆடு வளர்ப்போர் சங்கம் எச்சரிக்கை... சமூக நலன் கருதி அனைவருக்கும் தெரியப்படுத்தவும்... நன்றி - யாம்/YES
பசுமை விகடன் |
தினமலர் |
சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆடு வளர்ப்போருக்கான நலவாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கிறதோ, அக்கட்சிக்கு தான் எங்களது 25 லட்சம் ஓட்டுக்கள். இல்லையென்றால் நோட்டோவுக்கே எங்கள் ஓட்டு,' என தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஏதாவது போராட்டங்கள், அறிவிப்புகள் என வெளியிட்டால் தான் அதற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அ.தி.மு.க.,வின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவடையும் நேரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல போராட்டங்கள் அரங்கேறின. அந்த வழியில் தற்போது தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் சங்கத்தினரும் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கையை முன்வைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அச்சங்க மாநில தலைவர் திருநாகலிங்கம், பொது செயலாளர் குறுந்தாலிங்கம், பொருளாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில் ஆடு வளர்க்கும் தொழிலில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்காக நலவாரியம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தினோம். தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுத்தும் செயல்பாடு இல்லை. நான்கு வழிச்சாலை அருகே உள்ள மேய்ச்சல் நிலங்கள், அழிக்கப்பட்டதால் ஆடு வளர்ப்போர் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.
லாரிகள் மோதி நுாற்றுக்கணக்கான ஆடுகள் ஒரே நேரத்தில் பலியாகின்றன. அதற்காக இன்சூரன்ஸ் பெறவும் வழியில்லை. வனப் பகுதியில் முன் அனுமதி பெற்று, ஆடு மேய்ப்பதற்காக, 3.3.2000ல் அரசு பிறப்பித்த உத்தரவையும் வன அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. வனப்பகுதியில் ஆடு மேய்க்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் மேய்ச்சல் நிலத்தை கண்டறிந்து ஒதுக்க வேண்டும். முக்கியமாக ஆடு வளர்ப்போருக்கான நலவாரியம் அமைக்க வேண்டும். இதை எந்த கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் எங்களின் 25 லட்சம் ஓட்டுக்கள்.
எந்த கட்சியும் வாக்குறுதி அளிக்கவில்லை என்றால் ஓட்டுக்கள் அனைத்தும் 'நோட்டோ' வுக்கு அளிப்போம் என்றனர்.
Wednesday, August 12, 2015
விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி
விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி
விடுதலைக்கான போரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சார்ந்த மாவீரர் அழகுமுத்து கோன் அவர்களின் நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என்று 12/08/2015, பிற்பகல் 1.30 மணியளவில் தில்லி பாராளுமன்ற செயலக கட்டித்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்தித்து அழகுமுத்து கோன் அவர்களின் வரலாற்றை எடுத்துரைத்து, சுமார் 256 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் விடுதலைக்கு முதல் குரல் கொடுத்ததற்காக ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் இரவு நேரத்தில் கைது செய்து பீரங்கி வாயில் கட்டி, சுதந்திர போராட்ட வரலாற்றில் முதல் களப்பலியான அழகுமுத்து கோன் அவர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களை மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய அமைச்சரிடம் எடுத்து கூறினார், அவருடன் யாதவர் தன்னுரிமைப் பணியகத்தை சார்ந்த பேராசிரியர் பெரி கபிலன் மற்றும் எ.சுகுமார் ஆகியோர் சந்தித்து தமிழகத்தில் உள்ள யாதவர் சமுகத்தின் 19 ஆண்டு கால கனவாக இருப்பதாகவும் தெரிவித்தனர், இதை ஆர்வமுடன் கேட்டுவிட்டு கண்டிப்பாக உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்றும் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களின் வரிசையில் மிக விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதியளித்தார்.
நன்றி - யாதவர் தன்னுரிமைப் பணியகம் - தில்லி
Monday, March 30, 2015
இன்று அரசியல் அறிஞர் ஆனந்தரெங்கம்பிள்ளை (யாதவர்) (1709-1761) அவர்களின் பிறந்தநாள்
யாதவர் தன்னுரிமைப் பணியகம் மூலமாக வருடம் தோறும் வழங்கும் ஆயர் விருதுகளில் "ஆனந்தரெங்கம்பிள்ளை - பொற்கிழி விருது" வழங்கி வருவதை அனைவரும் அறிவோம்.
ஏப்ரல் 3-ம் தேதி மதுரையில் நடைபெறும் "யாதவர் தொழில் வணிகக் கூடம்" கருத்தரங்கில் "அரசியல் அறிஞர் ஆனந்தரெங்கம்பிள்ளை" அவர்களின் "உருவப்படம்" 306 -வது பிறந்தநாளை வெளிப்படுத்தும் விதமாக திறக்கப்பட உள்ளது என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறோம். நன்றி!!!
இன்று தி இந்து தமிழ் நாளிதழ் - நன்றி!!!
நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்த ரங்கம் பிள்ளை (Ananda Ranga Pillai) பிறந்த தினம் இன்று (மார்ச் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
- சென்னை பெரம்பூரில் (1709) பிறந்தவர். பாண்டிச்சேரியில் குடியேறிய தந்தை, அரசுப் பணியில் சேர்ந்து, திவானாகப் பதவி உயர்வு பெற்றார். எம்பார் என்பவரிடம் கல்வி பயின்ற ஆனந்த ரங்க பிள்ளை, அரசுப் பணிகளில் அப்பாவுக்கு உதவி யாக இருந்தார். பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளக்ஸின் மொழி பெயர்ப்பாளராக 1747-ல் நியமிக்கப்பட்டார்.
- பல தொழில்கள் செய்தார். சொந்தமாக கப்பல் வைத்திருந்தார். தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர்.
- பன்மொழிப் புலமை படைத்த இவர் இந்திய மன்னர்கள் பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார். முசபர்சங் என்ற மன்னர் இவருக்கு 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி, மன்சுபேதார் பட்டத்தையும் வழங்கினார். செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாக, ஜாகீர்தாராகவும் நியமிக்கப்பட்டார்.
- மக்கள் மத்தியில் மன்னருக்கு நிகரான செல்வாக்கு பெற்றிருந்தார். 1749-ல் ‘துபாஷி’ பட்டத்தை ஆளுநர் இவருக்கு வழங்கினார்.
- ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 18-ம் நூற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்றுப் பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.
- மன்னர்களின் குணங்கள், ஆங்கிலேயரின் போக்கு, மக்கள் பட்ட அவதி, வெளிநாட்டினர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆற்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சி, ஹைதராபாத், டெல்லியில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், நீதியுரைகள், ஜோதிடக் குறிப்புகள்கூட நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
- இவை அனைத்தும் எளிய தமிழில் உள்ளன. இவரது நாட்குறிப்புகளின் பெரும் பகுதி வணிகச் செய்திகளை உள்ளடக்கியவை. பேச்சுத் தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளையும் இவரது குறிப்புகள் எடுத்துக்கூறுகின்றன.
- உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியாகப் புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸுடன் (Samuel Pepys) இவரை ஒப்பிட்டு, ‘இந்தியாவின் பெப்பீஸ்’ எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகிறார்.
- இவரைப் பற்றி பல பாடல்கள், புத்தகங்கள் எழுதப்பட்டுள் ளன. இவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன. பிரெஞ்சு அரசாங்கம் இவற்றை பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து 8 தொகுதிகளாக வெளியிட்டது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.
- 1736 முதல் 1753 ஆண்டு காலம் வரையிலான நாட்குறிப்புகள், தமிழில் 8 தொகுதிகளாக வந்தன. அதன் பிறகு அவர் எழுதிய நாட்குறிப்புகள் இன்னமும் தமிழில் வெளிவரவில்லை. தமிழ் எழுத்துலகின் ஒரு புது இலக்கிய வடிவத்துக்கு முன்னோடியான ஆனந்த ரங்கம் பிள்ளை 51 வயதில் (1761) மறைந்தார்.
- "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" மற்றும் "யாதவர் தொழில் வணிகக் கூடம்"
Thursday, March 12, 2015
Wednesday, March 4, 2015
சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளத்தில் இரத்த தான முகாமிற்கு காவல் காவல்துறை அனுமதி மறுப்பு
6:06 PM
தாமோதரன் கோனார்
blood donation camp, Gurusamy yadav, Gurusamy yadav birthday, யாதவர் தன்னுரிமைப் பணியகம்(YES)
No comments
பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்
"சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" இளைஞர்கள் அழைப்பின் பேரில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" சார்பாக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அதிகாரிகளுடன் காலை 7.45 மணியளவில் புறப்பட்டு சங்கரன்கோவிலுக்கு 11 மணிக்கு சென்று அடைந்தனர் ஆனால் அப்பொழுது காவல்துறை வழிமறித்து உங்களுக்கு அனுமதியில்லை என்று கூறினார், எவ்வளவோ பேசியும் பயன் இல்லாமல் நிகழ்ச்சி ரத்தானது.
இரத்த தானம் செய்ய காவல்துறை அனுமதி தராததால், , அங்கிருந்த இளைஞர்கள் வருத்தத்துடன் திரும்பி சென்றனர் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன் !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம்