"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label கோன். Show all posts
Showing posts with label கோன். Show all posts

Saturday, January 4, 2014

குதம்பை சித்தர்

குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை . இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார் . இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார் .

யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது . அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய் . குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான் .

குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார் . வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம்  செய்தார் .
மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் !
என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்துகுதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய் . ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய் . அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்என்றார் .

ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார் . அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார் . தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார் . அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன .
குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன .

ஸ்ரீகுதம்பைச் சித்தரின் பூசை முறைகள் :-

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் குதம்பைச் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும் . முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும் .

பதினாறு போற்றிகள் :
1. சிவனை பூசிப்பவரே போற்றி ! 2. ஹடயோகப் பிரியரே போற்றி ! 3. சூலாயுதம் உடையவரே போற்றி ! 4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி ! 5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி ! 6. ஜோதி சொரூபரே போற்றி ! 7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி ! 8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி ! 9. நாட்டியப்பிரியரே போற்றி ! 10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி ! 11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி ! 12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி ! 13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி ! 14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே போற்றி ! 15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி ! 16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி ! போற்றி!
இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமானஓம் குதம்பைச் சித்தரே போற்றி ! என்று 108 முறை ஜெபிக்க வேண்டும் . நிவேதனமாக பால் , பழம், தண்ணீர் வைக்க வேண்டும் . பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும் . நிறைவாக தீபாராதனை செய்யவும் .

தியானச் செய்யுள் :

சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே அத்திமரம் அமர்ந்து ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன் நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே !

குதம்பை சித்தர் பூஜா பலன்கள் :

இவர் நவக்கிரகங்களில் கேதுபகவானை பிரதிபலிப்பவர் .
இவரை வழிபட்டால் .. 1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும் . 2. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும் . 3. சரியாகப் படித்தாலும் பரீட்சை எழுதும் நேரத்தில் மறந்துபோடும் நிலை மாறும் . 4. மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும் . 5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும் . 6. போதை பொருட்களுக்கு அடிமைஆகுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும் . 7. ஆன்மீகப் பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும் .

இவருக்கு பல வர்ண வஸ்திரம் அணிவிக்கலாம் .
இவரை பூஜிக்க உகந்த நாள் வெள்ளிக்கிழமை .

Thursday, October 10, 2013

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின்  அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை  அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.  ஆனால், நாளடைவில் நால்வகை நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அந்த எருது விளையாட்டு பழகிப்போனதுதான் வேடிக்கை. அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை  (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால்  ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சி நிலத்தவரும் நெய்தல் நிலத்தவரும் ஏறு  தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பொதுப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது. 

ஸ்பெயின் உள்ளிட்ட  உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்விய லின் வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு  அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந் தைய பெயர்கள். 

 பறையில் தண்ணுமை முழக்கம் எழுப்பி தொழுவில் அடைபட்ட காளையை திறந்துவிட்டு, மல்லல் மைதானத்தில் காளையர்கள் மோதிப்பிடிப்பது  தான் 
பொதுவான வழக்கம். ஆனால், தமிழகத்தின் தென், மத்திய மாவட்டங்களில் தான் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. வட மாவட்டங்களில் காளையின் கழுத்தில் கயிறு கட்டி இருபுறமும் பலர் நின்று பிடித்துக்கொள்ள அதை அடக்கி கொம்பில் கட்டிய பரிசுப்பணத்தை கவர காளையர்கள் முயல்கின்றனர். 

தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீப காலம் வரை கோயில் காளைகளையும் வீட்டில் வளர்க்கும் காளைகளையும் பரிசுப் பொருட்களை கட்டி தெருவில் விடும் வழக்கம் இருந்தது. ஊரார் வழிநெடுக நின்று  அதை அடக்க முயல்வார்கள். ஈழத்து மக்களிடையே பட்டிப்பிடி  விளையாட்டு வழக்கமுள்ளது. இதன்படி பட்டிகளில் அடைக்கப்பட்ட மாடுகளின் கழுத்தில் வடை, பனியாரம் போன்ற உணவுப்பண்டங்களை ஆரமாக  கட்டிவிடுவர். அவற்றை பட்டிக்கு வெளியே கொழுக்கம்புகளுடன் நிற்கும் இளைஞர்கள் இழுத்துக்கொள்கின்றனர். 

வீரத்தை கூட்டும் குரவை கூத்து

அக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல  ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவர். ஆயர் கன்னியர் பாடும் பாடல் ஏறு தழுவப்போகும் தன் காதலனை உசுப்புவது போலவோ, ஏறு த ழுவி வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.

வீரத்தின் அடையாளம்

இயற்கை இன்னல்கள், கஷ்ட, நஷ்டங்கள், வறுமை, செழிப்பு என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழ வனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கே பறை சாற்றும் மகத்தான திருநாள் தைப்பொங்கல். தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கரும்பு, மஞ்சள் போன்றவைகளைகளுடன் புத்தரிசியில் சர்க்கரை பொங்கல் வைத்து இயற்கையுடன் சூரியனையும் வழிபடுவது வழக்கம். தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழர்களின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டும் முரட்டுக்காளையை  அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு,  வடமாடு விரட்டு போன்ற வீரவிளையாட்டுக்கள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத் தப்படுகிறது. 

Monday, August 26, 2013

யாதவ மகாசபை

யாதவ மகாசபை என்பது உலக அளவில் தமிழ் பேசும் யாதவர்களின்(கோனார) சமுதாய அமைப்பாக உள்ளது.இந்த அமைப்பின் தலைவராக திரு.தி தேவநாதன் யாதவ் உள்ளார்.இந்த அமைப்பின் முதல் மாநாடு நெல்லையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை திறப்புடன் தொடங்கியது.
                 நெல்லையில் திறக்கப்பட்ட வீரன் அழகுமுத்து கோன் சிலை






இந்த அமைப்பின் இரண்டாவது மாநாடு சென்னையில் 30-01-2011 அன்று
  யாதவர் வாழ்வுரிமை மீட்பு என்ற பெயரில் நடைபெற்றது.
யாதவ மகாசபையில் பிரதான கோரிக்கைகளாக அரசியல் அதிகாரம் யாதவர்களுக்கு மிகவும் பிற்படுத்த பட்டியலில் இடம்(MBC)இதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு முன் நின்று நடத்தி வருகிறது
இந்த மாநாட்டில் உலக முழுவதும் இருந்து பல லட்சம் யாதவர்கள் சொந்தங்கள் கலந்து கொண்டார்கள்

  யாதவ மகாசபை சார்பிதுல் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மாவட்டம், நகரம்,ஓன்றியம், கிளை என பட்டி, தொட்டியெல்லாம் யாதவர்களை  யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பல்வேறு மாநாடு, பேரணி, கூட்டங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சென்னை மன்ரோ சிலை அருகிலிருந்து பேரணியும், 25.04.2010 நெல்லையில் மாநில மாநாடும், 21.08.2010 சென்னையில் பேரணியும், 30.01.2011 சென்னை ராயபேட்டையில் மாநில மாநாடும், 25.04.2012  சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியது

Saturday, December 22, 2012

வீரன் அழகு முத்துக்கோன் (veeran alagumuthu kone)

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய
மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். ``எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்' என்றால் பீரங்கிகள் முழங்கும்.
அழகுமுத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது. ``மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும் என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ``தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்ற அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.

பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை. இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன். தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, யாதவ சமூகம் பெருமை தேடிக் கொண்டது.
 
மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு வெளிவந்த தகவல்

மாவீரன் அழகுமுத்துக்கோன் பற்றிய வரலாறு உலகறிய பல்வேறு தரப்பினர் உதவி இருக்கின்றார்கள். அதைப்பற்றி கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1959ஆம் ஆண்டு பந்துலு இயக்கிய வீபாண்டிய கட்டபொம்மன் என்கிற திரைப்படம் வெளிவந்தது. அப்போது இந்த திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்த பாத்திரமான எட்டப்பன் பிறந்த கிராமமான எட்டயபுரம் பற்றி மிகவும் இழிவாக காட்டப்பட்டது. இதை கண்டு மனம் வருந்திய எட்டயபுரம் அரசன் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து எட்டயபுரம் சமஸ்தானம் அந்த படத்தில் மிகவும் கேவலமாக சித்தரிக்கப்பட்டதாகவும் அதை சீர் செய்யும் வகையில் தமிழறிஞர் அனைவரும் அந்த களங்கத்தை நீக்க உதவுமாறு கோரினார். இதனையடுத்து தமிழறிஞர்கள் எட்டயபுரம் சமஸ்தான புத்தக சாலையை படித்து ஆராய தங்களுக்கு அனுமதி அளிக்கும்படி கோரினர். இதை ஏற்ற அரசர், புத்தக சாலையை ஆராய அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து, பல நாட்கள் நடந்த ஆராய்ச்சியில் சாமி தீட்சிதர் என்பவர் 1878ஆம் ஆண்டு எழுதி வம்சிமணி தீபிகை என்கிற புத்தகமும் டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and present என்கிற புக்கங்களில் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற அரசனுக்கு மாவீரன் அழகுமுத்துக்கோன் தளபதியாக இருந்ததாகவும் அழகுமுத்துக்கோன் இல்லை என்றால் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் இல்லை என்று அந்த புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் நடந்த கால கட்டம் 1750என்று கருதப்படுகிறது. இந்த குறிப்புகள் பின்னர் தினமனி நாளிதழில் கண்ணீர் விட்டா வளர்த்தோம் என்ற பகுதியில் வெளி வந்தது. இதேபோல்,1976 ஆம் ஆண்டு எட்டயபுரம் வரலாறு என்கிற புத்தகத்தில் 65 பக்கம் வீரன் அழகுமுத்துக்கோன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை யாதவா கல்லூரி பேராசிரியர் ‎ஷாஜகான் கனி எட்டயபுரம் அரண்மனைக்கு சென்றிருந்தபோது, அங்கு குழந்தைகளுக்கு ஆங்கில பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர், கட்டாலங்குளம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அதை கேட்ட பேராசிரியர், வீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பிடமான கட்டாலங்குளம் பற்றி விசாரித்தார். அப்போது, இந்த ஆசிரியர் இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் வம்சம் இருப்பதாகவும் அவர் வாரிசாக திரு.சிவத்தசாமி என்பவர் அங்கு வசித்து வருவதாகவும் கூறினார். இத்தகைவலை அறிந்த பேராசிரியர் உடனே கட்டாலங்குளம் சென்று திரு. சிவத்தசாமியை சந்தித்து அழகுமுத்துக்கோன் வரலாறை அறிந்து கொண்டார்.
அழகுமுத்து கோன் நேரடி
 வாரிசு திரு செவத்தச்சாமி 
அவர்கள்

இச்சமயத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் புகழ் பல இடங்களில் பரவத் தொடங்கியது. இந்நிலையில், பல ஜாதியினர் அவரை சொந்தம் கொண்டாட தொடங்கினர். மாவீரன் அழகுமுத்துக்கோன் பெயரில், சில இடங்களில் சேர்வைக்காரன் என்கிற அடைமொழி குறிப்பிடப்படுவதால் அவர் தங்கள் இனத்தை சேர்ந்தவர் என்று ஓர் இனத்தவர் சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். வேர்வைக்காரன் என்பது ஜாதி பெயர் இல்லை என்றும் சேர்வைக்கான என்ற பெயர் ஜாதி பட்டியலில் குறிப்பிடப்படவில்லை.சேர்வைக்காரன் என்பது ஒரு பட்டம். திறமையான படைத் தளபதிகளுக்கு கொடுக்கப்படுவது சேர்வை என்கிற பட்டம் என்று வரலாற்று பேராசிரியர் தேவஆசிர்வாதம் ஓர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். படையில், சேர்மானம்மான திட்டம் வகுப்பவன் சேர்வைக்காரன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேர்வைக்காரன் பட்டம் பெற போட்டிகள் உள்ளன. அவற்றில் வாள்வீச்சு, காளை அடக்குதல் ,மல்யுத்தம் போன்ற பல போட்டிகள் உள்ளன. இவற்றில் வெற்றி பெற்றால்தான் சேர்வைக்காரன் என்ற பட்டம் வழங்கப்படும். இதுபோல் பல போட்டிகளில் கலந்து கொண்டு வீரன் அழகுமுத்துக்கோன் வெற்றி பெற்று திருமலைநாயக்கர் அரசரிடம் சேர்வை என்கிற பட்டம் பெற்றார்.

அதேபோல், மாவீரன் அழகுமுத்துக்கோன் வம்சாவழியினர் வைத்துள்ள செப்பு பட்டையத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அவர் கிருஷ்ணகோத்ரம் கோபால வம்சத்தில் பிறந்துள்ளார் என்று தெரியவருகிறது. இதுவே அவர் யாதவ குலத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் என்று குறிப்பிடலாம். ஏனெனறால், ஐயங்கார்கள், மாதுவர்கள், நாயுடுகள், யாதவர்கள் மட்டுமே தங்கள் பெயரிலும் கோத்தரத்திலும் வைணவ சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பார்கள். ஆகையால், மாவீரன் அழகுமுத்துக்கோன், யாதவர் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

அழகுமுத்து கோன் சிலை:

அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் அவர்களின் முயர்ச்சியில் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் முன்பு 1996 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் வீரன் அழ்குமுத்து கோன் சிலையை திறந்துவைத்தார்.கட்டாலங்ககுளத்தில் அழகுமுத்துகோன் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும் தமிழக அரசு புதுக்கோட்டை கோட்ட பேருந்துகளை வீரன் அழகுமுத்துகோன் பெயரில் இயக்கியது (Veeran Alagumuthu Kone Transport Corporation).

மதுரை யாதவர் கல்லூரியில் வீரன் அழகுமுத்து கோன் சிலையை அப்போதய பீகார் முதலமைச்சர் திரு லாலு பிரசாத் யாதவ் திறந்துவைத்தார்.

வீரன் அழகுமுத்து கோன் தேனி  மாவட்டம்
பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரித்து வீரன் அழகுமுத்து கோன் தேனி மாவட்டத்தை உருவாக்கியது.










 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar