ஏறு தழுவுதல் என்றால் என்ன என்று கூட பலருக்கு தெரியாது.ஏறுதழுவுதல் தான் இன்றைய ஜல்லிகட்டு பழந்தமிழ் நூல்களில் ஏறு தழுவுதல் காணப்படும் ஜல்லிகட்டு காணப்படாது.
கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது.
ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலுக்கு சொந்தகாரர்கள்.
தமிழ் ஆயர்களுக்கு மட்டும் சொந்தமான ஜல்லிகட்டு ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் விளையாட்டாக முன்னிருத்துவது ஏற்புடையதா?
சினிமாக்களிலும் இணையதலத்திலும் தாம் மற்றவர்களால் ஜல்லிகட்டின் வரலாற்றை மறைக்க இயலும் வரலாற்றில் மறைக்க இயலாது.
இந்த விக்கிபீடியாவில்(
http://en.wikipedia.org/wiki/Jallikattu) முல்லை நிலம் என்று குறிப்பிட்டவர். ஏன் இடையர்கள்(ஆயர்) என்று குறிப்பிடவில்லை, திட்டமிட்டு சாமர்த்தயமாக மறைக்க முயல்கிறார்.
தமிழ் சினிமா துறையில் ஆயர்களின் ஆதிக்கம் இல்லை.
மற்ற சமுகத்தினரின் ஆதிக்கமே அதிக அளவில் உள்ளது. இதை பயன் படுத்தி மற்ற சமுகத்தினர் ஜல்லிகட்டை தங்களுடையதாக்க பலர் பலவிதமாக முயல்கின்றனர்.ஒரு சில குறிப்பிட்ட சமுகங்கள் சினிமா துறையில் வளர்ந்து மற்ற சமுகங்களின் வரலாற்றை தன்னுடையதாக்கும் முயர்ச்சியில் ஈடுபடுகின்றன.
"இன்னும் கொஞ்ச காலம் போனால் அந்த சில சமுகங்கள் தங்களை ஆயர்கள் என்றும் முல்லை நிலத்தவர்கள் என்றும் கூட கூற வாய்ப்புகள் உள்ளது"
கடந்த காலங்களில் கல்வெட்டு அல்லது பண்டைய நூல்களில் அவர் அவர் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் தேடுவார்கள்.ஆனால் எதிர் வரும் சந்ததியர்கள் திரைப்படத்திலும் இணையத்திலும் தான் தன் முன்னோர்களின் வரலாற்றை தேடுவார்கள் அல்லது பார்க்க இயலும். யாரும் கல்வெட்டுகளை தேடி போக போவதில்லை.
நான் இதுவரை பார்த்த எந்த ஜல்லிகட்டு தொடர்பான எந்த திரைப்படங்களிலும் நம் சமுகத்தை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.அவர்கள் அவர்களின் சமுகம் ஜல்லிகட்டு விளையாடியதாக தான் கூற முயல்கின்றனர்.
நாங்கள் தமிழ் சமுகத்தின் வீரமாக முன்னிருத்துவதை எதிர்க்கவில்லை.
நீங்கள் என் இனத்தின் வரலாற்றை மறைத்து என் இனத்தின் வீரத்தை உங்களுடையதாக்க முயல்வதை தான் நாங்கள் நாங்கள் எதிர்க்கிறோம்.
பல்வேறு சமுக இணையதலங்களில் பல்வேறு சமுகத்தினர் ஜல்லிகட்டு தன் சமுக விளையாட்டாக போடுகின்றனர். அவர்களால் ஒரே ஒரு வரி வரலாற்றில் தன் சமுகம் ஜல்லிகட்டு விளையாடியதாக காட்டமுடியுமா?
என் சமுகத்தின் வரலாற்றை உங்களுடையதாக்க முயலும் அனைவரும் முதலில் தங்கள் முன்னோர்கள் ஜல்லிகட்டை விளையாடியதை நிருபிக்க முயடியுமா?
தமிழர்களின் வீரமாக முன்னிருத்தும் சில மீடியாக்கள் ஒட்டுமொத்த தமிழ்சமுகமும் ஜல்லிகட்டு விளையாட்டை விளையாடியதாக நிருபிக்க இயலுமா?
மற்ற சமுகத்தின் அடையாளத்தை அவர் அவர் சமுகத்தினர் அடையாளமாக முன்னிருத்துபவர்கள் ஏன் இடையர்களின் வீரத்தை மட்டும் இடையர்களின் வீரமாக முன்னிருத்த தயங்குவது ஏன்?
என்றாவது யாதவர்கள் மற்ற சமுகத்தின் அடையாளத்தை தனதாக்க முயர்ச்சி செய்தார்களா?
இனியாவது தமிழ் ஆயர்களின் விளையாட்டு என முன்னிருத்துங்கள்.
எது எப்படியோ எக்குலத்தவரும் போற்றும் ஆயர் குலத்தின் வீரம்.
எக்குலத்தவரும் போற்றும் அளவுக்கு ஆயர்குலத்தின் விரம் உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது
எங்கள் சமுகத்தினர் தான் ஜல்லிகட்டு விளையாடினார்கள் என்பதற்க்கு ஒரு சிரு ஆதாரம்.
ஜல்லிகட்டு பற்றி கலித்தொகையில் உள்ள சிறு வரிகள்
ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்பதை,
ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்.2
என்னும் வரிகள் விளக்குகின்றன. பசுத்திரளை உடைய ஆயர் மகனுக்கு தலைவியை மணம் முடிக்க பெற்றோர் எண்ணினர். தான் விரும்பிய தலைவனோ செங்காhpக் கொம்பிடையில் புகுந்து தழுவி வெற்றி கொண்டுவிட்டான். தலைவியின் மணம் உறுதியாகிவிட்டதை,
இன்று எவன், என்னை எமர் கொடுப்பது-அன்று, அவன்
மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு!.3
என்ற பாடல் வரிகள் உணா;த்துகின்றன. ‘ஏறுகொள்ள வல்லார் என்னைப் போன்றவர் எவரும் இலர் என வீரம் பேசும் பொதுவன் தலைவிக்கு ஒருநாள் உறவினன் ஆகாமற் போவதில்லை. அத்தலைவனைக் கண்டு கண்களும் காதற் பயிhpனை வளர்க்கிறதாம் தலைவிக்கு. இதை,
‘கோளாளா என்ஒப்பார் இல்’ என நம்மானுள்,
தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள்,
கோளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்இ4
என்னும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.
மெல்லிணா;க் கொன்றையூம், மென்மலர்க் காயாவூம்,
புல்லிலை வெட்சியூம், பிடவூம், தளவூம்,
குல்லையூம், குருந்தும், கோடலும், பாங்கரும்-
கல்லவூம், கடத்தவூம்- கமழ் கண்ணி மலைந்தனர்.5
இவ்வாறு பல மலர்களைச் சூடி ஆயா; இளைஞர்கள் விரைந்து வந்து ஏறு தழுவூதலைக் காண விரும்பிய ஆயமகளிர் பலரும் பரண்களில் முற்படவே வந்து அமர்ந்தனர்.
முல்லை முகையூம் முருந்தும் நிறைத்தன்ன
பல்லா, பெருமழைக் கண்ணா, மடம் சேர்ந்த
சொல்லா, சுடரும் கனங்குழைக் காதினர்.6
இவ்வாறு ஆய மகளிரும் ஏறுதழுவலைக் காண ஆர்வம் காட்டியூள்ளனர். ஏறுதழுவி வென்ற வீரனையே மணக்கவூம் விரும்பினர்.கெல்லேற்றுக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள் தழுவ விரும்பவில்லை உயிருக்குப் பயந்து ஏறுதழுவாதிருக்கும் ஆயர் இளைஞரை யாரும் விரும்புவதில்லை. தாம் காதலிக்கும் பெண்ணின் முலையிடை போலக் கருதி, ஆர்வமுடன் வீழ்ந்து தழுவி வெற்றியடைபவர்களையே பெற்றோர் தம் மகளுக்கு ஏற்றவனகாக் கருதுவார்கள் என்பதை,
கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்
முல்லையிடைப் போலப், புகின்.
ஆங்கு:
குரவை தழீ, யாம், மரபுளி பாடி, 7
என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
சான்றெண் குறிப்புகள்
1. கலித்தொகைஇ பா. 148-149.
2. மேலது. பா. 101 :9-12.
3. மேலது பா. 105:66-68.
4. மேலது பா. 101:43-46.
5. மேலது பா. 103:1-4.
6. மேலது பா. 103:6-8.
7. மேலது பா. 103:63-74.