ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label கோனார். Show all posts
Showing posts with label கோனார். Show all posts
Tuesday, December 15, 2015
சுப்பையா சுவாமிகள்
திருநெல்வேலி அருகில் உள்ள கடையனோடை என்னும் கிராமத்தில்வில்லிமுத்துக் கோனார்-நாராயணவடிவு தம்பதியருக்கு 23.11.1908 ஆம் ஆண்டுபிறந்தவர் மகான் சுப்பையா சுவாமிகள். ஒரே ஆண் வாரிசான இவர், படிப்பில்அதிக ஆர்வம் கொண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்டமுடையவராகவும் இருந்தார். அப்போது இருந்தே நண்பர்களுடன் சேர்ந்து பல கோயில்கள், சமாதிகளை சுற்றி வருவார்.
ஐந்தாம் வகுப்பு வரை கடையனோடையில் படித்த இவர், இப்படி கோயில், சமாதி என்று சுற்றி திரிந்ததால் அவரது பெற்றோர், மூத்த மகள் இருக்கும் குலசேகரபட்டினத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள பெரிய பள்ளியில் சேர்ந்தார்.
ஆனால் அங்கு சுப்பையா சுவாமிக்கு நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை. வார விடுமுறை நாட்களில் அருகில் உள்ள திருச்செந்தூர் சென்று அங்குள்ள வள்ளிக்குகை, மூவர் சமாதி போன்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து கொள்வார். அப்போது அங்கு வரும் சாதுக்களுடன் சித்த வைத்தியம், யோகம் போன்றவற்றை கற்றுக் கொண்டார். பின்னர் மூலிகை மருந்துகள் தயாரித்து பலருக்கு சிகிச்சை செய்தார். 7ஆம் வகுப்பு வரை குலசேகரபட்டினத்தில் படித்த அவர், மீண்டும்கடையனோடைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர். பின்னர் ஆழ்வார்திருநகரிலுள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பும், திருவைகுண்டம் காரனேஷன் உயர் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பும், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். இதையடுத்து மதுரைக்கு சென்று பி.ஏ(hons) படித்து முடித்தார்.
கல்லூரி பேராசிரியராக இருந்த கல்யாணம் ராமசாமி என்பவருடன் தங்கி சித்துகளிலும், மருத்துவத்திலும், ஆராய்ச்சியிலும் பயிற்சி பெற்றார். மேலும் மூலிகை, வைத்தியம், உடற்கூறு, சித்துகள், உறங்காமை, உண்ணாமை போன்ற பயிற்சி பெற்றார். ஆனால் அதில் நாட்டமில்லை.
தன் நிலங்களை விற்று ஏழை அன்னதானம் வழங்கினார். பின்னர் கணபதிமூலமந்திரம், ஸ்ரீராம ஜெயம் போன்ற மந்திரங்களை பலருக்கு உபதேசித்தார்.
மீண்டும் குற்றாலம், வள்ளிக் குகை, திருச்செந்தூர் சென்றார். அதுவும் சரிப்படவில்லை. பின்னர் திருப்பதி சென்றார். பிறகு விருத்தாசலம் சென்றார். அங்கிருந்து வடலூரை அடைந்தார். அங்கு சில மாதங்கள் தங்கினார். பின்னர் அங்கிருந்து திருக்கழுக்குன்றம் வந்தடைந்தார். சுப்பையா சுவாமிகள் கடைசியாகப்பேசியது திருக்கழுக் குன்ற மலையிலமர்ந்த ஓராண்டு வரைதான் (1951)
1951ஆம் ஆண்டு அங்கு வந்த சுப்பையா சுவாமிகள், அங்குள்ள மலையின் மீது அமர்ந்து யோக பயிற்சி செய்வார். அப்போது அவருக்கு பால், பழம் கொடுத்து உபசரித்தனர். இரவில் விஷ ஜந்துக்கள், புலி, சிறுத்தை எல்லாம் நடமாடும் இடத்தில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். சுவாமி புன்முறுவலுடன் இரண்டொரு வார்த்ததை கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் மரணத்திற்கு மூலங்களை நசிக்கும் உபாயத்துடன் தவம் மேற்கொண்டதால் பேசுவதைநிறுத்திக் கொண்டார். தனக்கு முன்பாக திருவருட்பா என்ற நூலை மட்டும் எப்போதும் வைத்திருப்பார். பின்னர் அங்குள்ள மக்களால் கடையனோடை சுவாமி என்றும், பி.ஏ. சுவாமி என்றும், திருக்கழுக்குன்றம் சுவாமி என்றும் அழைக்கப்பட்டார்
சுப்பையா சுவாமிகள் கடையனோடையில் அவதாரம் செய்தது முதல் திருக்கழுக்குன்றத்தில் முக்தியடைந்தது வரை அவருக்கு இவ்வுலக உயிர்கள்,சடமாயிருந்த கோயில்கள், சமாதிகள் முதலியவற்றுடன் நிறையத் தொடர்புகள் உண்டு. எவ்வுயிருக்கும் தீங்கு நினைக்காதவனே வைஷ்ணவன் என்பர். அவ்வழி வந்தவர் எவ்வுயிருக்கும் எவராலும் தீங்கு வரக்கூடாது என எண்ணுபவன் சன்மார்க்கி என வைஷ்ணவத்தில் இருந்து சம்மார்க்கம் வரை அவர் வந்த பாதையை பார்க்கும் போது அவரின் உயிர் எத்தகைய உறவை ஒவ்வொன்றிலும் நிலை நாட்டியிருக்கிறது எனப் பார்த்தால் தெளிவு ஏற்படும்.
1961 ம் ஆண்டு அவர் தன்னுடன் தொடர்புடைய அன்பர்களிடம் தனது உடலில்
நாடி அடங்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தார்.அப்போது அவர் திருகழ்குகுன்ர மலை குகையில் இருந்தார். நாடி அடங்கியவுடன் அவரது உடல் கீழே கொண்டுவரப்பட்டது. அவர் விருப்பப்படி சமாதி கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. மேலெ திறக்கும் வகையில் பலகைக் கல் வைத்து மூடப்பட்டது. 40 நாட்களுக்கு பூஜை செய்யப் பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் முன்னிலையில் சமாதியின் மூடி திறக்கப் பட்டது.
அவரது உடல் கெடாமல் அமர்ந்த நிலையில் அப்படியே இருக்கக் கண்டனர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். THE BODY IS INTACT என்று அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டது.
சமாதியின் மேல் மூடி மூடப்பட்டது. மீண்டும் பத்து மாதங்களுக்கு பூசை செய்யப்பட்டது.அதன் பிறகு மீண்டும் சமாதியின் மூடி திறக்கப் பட்டது. உடல் கெடவில்லை. பின்னர் சமாதியின்மீது கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.
சமாதியில் தினசரி அன்னதானம் நடக்கிறது.தியான மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டு மலர் வெளியிடப்பட்டுள்ளது.