"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label பாரத முன்னேற்றக்கழகம். Show all posts
Showing posts with label பாரத முன்னேற்றக்கழகம். Show all posts

Monday, July 13, 2015

பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் மாவீரர் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா

இளைஞர் படையை உருவாக்கி ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டி இந்திய விடுதலைக்காக போராடியவர் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன். 
தூத்துக்குடி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட அவருக்கு அவர் வசித்த கட்டாலங்குளத்தில் அரசு சார்பில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு ஆண்டு தோறும் விழா எடுக்கப்பட்டு வருகிறது, 
இந்தாண்டும் வழக்கம்போல் உற்சாகம் பொங்க அழகு முத்துக்கோன் குருபூஜை விழா கட்டாலங்குளத்தில் நடைபெற்றது. அங்குள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
அதன்பின்னர் திருச்சியில் இருந்து பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் 500-க்கும் மேற்பட்டவர்களுடன் கட்டாலங்குளம் சென்ற பாரத ராஜா யாதவ் வீரன் அழகு முத்துக்கோனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அழகு முத்துக்கோனின் வாரிசுகளை சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தினார். 
தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை 7 மணியளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மஹாலில் வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை விழாவினை தலைமையேற்று நடத்தினார். 
இந்நிகழ்ச்சியில் திருச்சி, சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், கோவை, அறந்தாங்கி பகுதிகளை சேர்ந்த யாதவ பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் திரளாக வந்து திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் நிறுவனரும் அதன் தலைவருமான பாரதராஜா யாதவ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று யாதவர்கள் வரலாற்றை பகிர்ந்துக்கொண்டார். பின்னர் சிறப்பு அழப்பாளர்களாக வந்திருந்த திருச்சி அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். 
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, பாஜகவை சேர்ந்த பார்த்திபன், இந்துமஹா சபையை சேர்ந்த ராஜசேகர், புதிய தமிழகம் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆகியோர் அழகு முத்துக்கோனின் வீர தீர செயல்களை நினைவு கூர்ந்து பாராட்டி பேசினர். 
நிகழ்ச்சிக்கு ஸ்ரீவிநாயகா அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணன், பாரத முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார், கட்சியின் துணைத்தலைவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆறுமுகசாமி, கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.பி.யாதவ், ஸ்ரீரங்கம் அதிமுக பிரமுகர் திருவேங்கடம் யாதவ், அரசியல் உளவாளியின் ஆசிரியர் சேதுராமன், ஆட்டுக்காரத்தெரு யாதவர் அமைப்பின் இளைஞரணி செயலாளர் ரூபன், விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆர்.கே.ராஜா மற்றும் இளைஞரணி தலைவர் பிரசன்ன வெங்கடேஷ், அரவிந்த், வினோத்குமார், சூப்பர் சின்னையா, அலுவலக நிர்வாகி தாமஸ், ராமு, எடத்தெரு ராசு, பார்த்திபன், ராமு, நந்தகுமார், உதயகுமார், ரத்தினக்குமார், சரவணன், செல்வம் உள்பட பலரும் பங்கேற்று விழாவினை சிறப்புரச்செய்தனர். 
விழாவின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் அருசுவை உணவு பரிமாறப்பட்டது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar