"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts
Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts

Tuesday, January 12, 2016

ஜல்லிக்கட்டு” தமிழர்களின் விளையாட்டே கிடையாது – சொல்கிறார் மேனகா காந்தி

ஜல்லிக்கட்டு

ஏம்மா நீ பிறந்த சீக்கிய கலச்சாரம் இனத்தின் வரலாறு சில நூறு வருடம்தாம்மா ஆனால் தமிழனின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. 
ஜல்லிகட்டு எனும் ஏறுதழுவல் இங்கிருந்து வேண்டுமென்றால் வெளிநாட்டிற்க்கு சென்றிருக்கலாமே தவிர அங்கிருந்து இங்கே வரவில்லை ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலேயே ஏறுதழுவதுல் பற்றி பாடலே உள்ளது. வரலாறு இருக்கும் போதே தமிழனை, தமிழ் பண்பாட்டை சிதைக்க நினைக்கிறீர்களே வரலாற்று ஆதாரம் இல்லையென்றால் இன்னும் என்னவெல்லாம் செய்வீர்கள்!?

கொஞ்சம் விசயம் தெரிந்து பேசு இல்லைன்னா இங்கிருக்கும் பிஜேபி காரனாவது தமிழர் வரலாறை சொல்லி கொடுங்கப்பா.

ஏறுதழுவல் விளையாட்டு
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு . தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு கோனார்கள் எனப்படும் ஆயர்கள் அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகின்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலுமர்.அன்று முதல் காளையை அடக்கும் மாவீரனுக்கே, அந்த பெண்ணிற்கு பிடிக்கும் பட்சத்தில் ஆயர் குலத்தினர் தங்கள் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

சங்க இலக்கியமான கலித்தொகை

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்"

என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும்.

பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர்/யாதவர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல வாலிபர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள்.

இது ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு அழைக்கப்பெறுகிறது. இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. 

முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது. பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம். 

பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை, 'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும். 


ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர். வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம், 'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) என்று குறிப்பிடும். கலித்தொகை கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.


 பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர். ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது. பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான். ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது. எனவே நம் முன்னோர்கள் பல் உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர். 

'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே,ஆயமகள்' (கலி.முல்லை.103 63-64) என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது. கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் பண்டைக்கால ஆயமகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம். காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

AR.Kannan Dcse.,
Keeranur-622502
Pudukkottai(D.t),
Tamilnadu(state), South india,
Mob: +9199430- 55190,,
           +6584232446
Email Id : arkannan99@gmail.com



Friday, January 8, 2016

ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி

ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில் அந்த தடையை தகர்த்தெறியும் விதமாக பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் கடந்த 7-5-2014 அன்று ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்துள்ள மறுசீராய்வு மனுவும் நிலுவையில் உள்ளது. 

பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் மேலோங்கி வந்தது.

இந்நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆயர் குலத்தின் வீர விளைடாட்டு ஜல்லிக்கட்டு நடைபெற முயற்சி எடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!

Tuesday, December 29, 2015

விலங்குகள் காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்கினால் ஜல்லிக்கட்டை நடத்தலாம்: சட்ட நிபுணர்கள் ஆலோசனை

ஜல்லிக்கட்டு
தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது.

கடந்த 2011–ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு காளையை காட்சிப் பொருளாக பயன்படுத்த தடை விதித்தது.

காளைகள், எருதுகளை துன்புறுத்துவதற்கு உட்படுத்தும் எந்த போட்டியும் நடைபெறாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் விலங்குகள் நலவாரியம் இதை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதுபோல மராட்டியத்தில் எருது வண்டி பந்தயம், பஞ்சாபில் எருது பந்தயம், கர்நாடகாவில் கம்பளா பந்தயம் ஆகியவற்றை நடத்த முடியவில்லை.

தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "ஜல்லிக்கட்டு மற்றும் எருது பந்தயங்களை நடத்த அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 1–ந்தேதி வெளியாகும்" என்றார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க கூடும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வர தேவை இல்லை. அரசாணையே போதும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு வெளியிட்ட அரசாணை மூலம்தான் 2011–ம் ஆண்டு விலங்குகள் காட்சிப் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. அந்த ஆணையின் காரணமாகவே காளைகளை காட்சிப் பொருளாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமானால் காட்சி பட்டியலில் காளையை சேர்த்து மத்திய அரசு கொண்டு வந்த விதியை நீக்கினால் போதும் என்று கூறப்படுகிறது.

அதாவது எப்படி அரசாணை மூலம் விலங்குகள் காட்சிப் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டதோ, அதே அரசாணை மூலம் காட்சி பட்டியலில் இருந்து காளை, எருதுவை நீக்க முடியும் என்கிறார்கள்.

அவசர சட்டத்தை பயன்படுத்தாமல் ஒரு அரசாணையாலே இதை செய்து விடமுடியும் என்று கருதப்படுவதால்தான் மத்திய மந்திரிகள் அடுத்தடுத்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி உறுதியாக நடைபெறும் என்று நம்பிக்கையோடு கூறி வருகிறார்கள். வரும் 1–ந்தேதி புத்தாண்டு பரிசாக இதை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கு மத்திய அரசு அரசாணையை பயன்படுத்தினால் அதை எதிர்ப்போம் என்று பீட்டா விலங்குகள் நல அமைப்பு கூறியுள்ளது. அந்த அரசாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

அதுபோல விலங்குகள் நல ஆர்வலர்களும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில் மத்திய அரசு எந்த அரசாணையையும் திருத்தக்கூடாது என்று கூறியுள்ளது. விலங்குகள் தொடர்பாக எந்த அறிவிப்பு வெளியிடுவதாக இருந்ததாலும் விலங்குகள் நலவாரியத்திடம் முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

காட்சி பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம் என்று விலங்குகள் நலஆர்வலர் நந்திதா கிருஷ்ணா, பீட்டா விலங்குகள் நல அமைப்பு பிரதிநிதி நிகுஞ்ச் சர்மா கூறியுள்ளனர்.

இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில் மத்திய அரசு எத்தகைய அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar