"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, March 12, 2016

ஆடுவளர்போர் சங்கம் அதிரடி' - நோட்டாவுக்கு எங்கள் ஒட்டு



வணக்கம். மதுரையில் யாம்/YES(யாதவர் தன்னுரிமைப் பணியகம்) முயற்சியால் "தமிழ்நாடு ஆடுவளர்ப்போர் சங்கம்" கோரிக்கையை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது, கோரிக்கைகளுக்கு நம்பிக்கை வாக்கு அளிப்பவர்களுக்கு நன்றியோடு வாக்களிப்போம்... இல்லையென்றால் "நோட்டா/NOTA" வாக்களிப்போம் என அனைத்து கட்சிக்களுக்கும் ஆடு வளர்ப்போர் சங்கம் எச்சரிக்கை... சமூக நலன் கருதி அனைவருக்கும் தெரியப்படுத்தவும்... நன்றி - யாம்/YES

பசுமை விகடன்

தினமலர்


சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆடு வளர்ப்போருக்கான நலவாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கிறதோ, அக்கட்சிக்கு தான் எங்களது 25 லட்சம் ஓட்டுக்கள். இல்லையென்றால் நோட்டோவுக்கே எங்கள் ஓட்டு,' என தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஏதாவது போராட்டங்கள், அறிவிப்புகள் என வெளியிட்டால் தான் அதற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அ.தி.மு.க.,வின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவடையும் நேரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல போராட்டங்கள் அரங்கேறின. அந்த வழியில் தற்போது தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் சங்கத்தினரும் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கையை முன்வைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அச்சங்க மாநில தலைவர் திருநாகலிங்கம், பொது செயலாளர் குறுந்தாலிங்கம், பொருளாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில் ஆடு வளர்க்கும் தொழிலில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்காக நலவாரியம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தினோம். தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுத்தும் செயல்பாடு இல்லை. நான்கு வழிச்சாலை அருகே உள்ள மேய்ச்சல் நிலங்கள், அழிக்கப்பட்டதால் ஆடு வளர்ப்போர் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.


லாரிகள் மோதி நுாற்றுக்கணக்கான ஆடுகள் ஒரே நேரத்தில் பலியாகின்றன. அதற்காக இன்சூரன்ஸ் பெறவும் வழியில்லை. வனப் பகுதியில் முன் அனுமதி பெற்று, ஆடு மேய்ப்பதற்காக, 3.3.2000ல் அரசு பிறப்பித்த உத்தரவையும் வன அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. வனப்பகுதியில் ஆடு மேய்க்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.


எனவே தமிழகம் முழுவதும் மேய்ச்சல் நிலத்தை கண்டறிந்து ஒதுக்க வேண்டும். முக்கியமாக ஆடு வளர்ப்போருக்கான நலவாரியம் அமைக்க வேண்டும். இதை எந்த கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் எங்களின் 25 லட்சம் ஓட்டுக்கள்.

எந்த கட்சியும் வாக்குறுதி அளிக்கவில்லை என்றால் ஓட்டுக்கள் அனைத்தும் 'நோட்டோ' வுக்கு அளிப்போம் என்றனர்.

2 comments:

  1. நல்ல மனிதரை களத்தில் நிற்க வைத்து வெற்றி பெற செய்யுங்கள் மற்றவர்கள் எதற்கு?கடைசி வரைக்கும் மற்றவர்களை எதிபார்த்து தான் நம் இனம் இருக்க வேண்டுமா?

    ReplyDelete

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar