"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Friday, March 4, 2016

ரயில் மறியல் முயற்சி: யாதவர் பேரவையினர் 55 பேர் கைது



யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற யாதவர் தேசிய பேரவையினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது, சாதிவாரிக் கணக்கெடுப்பு பட்டியலை வெளியிடுவது, ஆடு வளர்ப்போருக்குத் தனிவாரியம் அமைப்பது, யாதவர் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு காண்பது, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இப் போராட்டம் நடத்தப்பட்டது.

யாதவர் தேசிய பேரவை மாநிலத் தலைவர் ஏ.கே. பூமிராஜன் தலைமை வகித்தார். இளைஞரணித் தலைவர் பி. வேலுசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் மூவேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ரயில் மறியலுக்கு முயன்ற இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து, ரயில் நிலைய நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்ட யாதவர் தேசிய பேரவையைச் சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar