"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, October 10, 2013

ஆநிரை கவர்தல்


பசுக்களை முதன் முதலில் வீட்டுப் பிராணிகளாக வளர்த்தவர்கள், தெற்காசியாவில் உள்ள இந்தியாவில் வாழ்ந்தவர்கள் என்பதே மரபணு ஆராய்ச்சியாளர்கள் கண்ட முடிபு 


பசுக்களை வைத்திருப்பதே செல்வம் என்று நினைத்த மக்கள் வாழ்ந்த நாடு இது.

பசுக்கள்தாம் செல்வத்தைத் தருகின்றன

என்றும் நினைத்த மக்கள் வாழ்ந்த நாடு இது.

பசுக்களைப் பற்றியும்,
பசுக்கள் தரும் செல்வத்தைப் பற்றியும் பேசும்
ரிக் வேதப் பாடல்கள் பல இருக்கின்றன.








பசுக்களை அடைவதற்காக மக்கள் பெரும் பாடுபட்டார்கள்.
பசுக்களை அடைவதை
ஒரு பெரும் பேறாகக் கருதினார்கள்.
ஒரு பசுவுக்காக வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் சண்டையிட்டனர். ஒரு பசுவுக்காக கார்த்த வீர்யார்ஜுனன்,
பரசுராமரது தந்தை ஜமதக்னியுடன் சண்டையிட்டான்.
அதன் காரணமாக பரசுராமரது கோபத்துக்கு ஆளாகி,
க்ஷத்திரிய வம்சமே அழிந்து விடும் நிலைக்கு வந்தது.









அந்தப் பசுக்களைப் போரில் வென்றும் அடைந்தார்கள்.
அவற்றைத் திருடியும் அடைந்தார்கள்.
இதில் உள்ள முக்கிய விவரம் என்னவென்றால்,
பசுக்களை இவ்வாறு அடையும் முறை
வடக்கு, தெற்கு என்ற வித்தியாசம் இல்லாமல்,
பாரதத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருந்தது.




ஆநிரை கவர்தல். ஆநிரை மீட்டல் என்னும்
இரண்டையும் தொல்காப்பியம் உள்ளிட்ட
தமிழ் இலக்கண நூல்கள் கூறுகின்றன.
ஆநிரை கவர்தலை வெட்சித் திணை என்றும்,
ஆநிரை மீட்டலை, கரந்தைத் துறை அல்லது
கரந்தைப் படலம் என்றும் இலக்கண நூல்கள் கூறுகின்றன.
ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் செல்ல
முடிவு செய்தவுடன்,
முதலில் அந்த நாட்டின் பசுக்களைக் கவர்ந்து வருவான்.
இழந்த ஆநிரைகளை மீட்க அந்தப் பகை நாட்டரசன் போருக்கு வருவான்.அதாவது எதிரி நாட்டரசனை போருக்கு வரவழைக்க
ஆநிரை கவர்தல் ஒரு முகாந்திரமாகப் பயன்பட்டது.




அப்படி அவன் போருக்கு வரவில்லை என்றால்,
கிடைத்த ஆநிரைகள் அவர்களுக்குச் செல்வமாயிற்று.
இந்த விவரங்களில் இன்னும் நுட்பமான
உள் விவரங்கள் இருக்கின்றன.
அவற்றைப் பார்ப்பதற்கு முன்னால்,
ஒரு கேள்வியை ஆராய்வோம்.
தமிழ் இலக்கண நூல்களில் சொல்லப்பட்டுள்ள இந்த வழக்கம்
தமிழ் மக்களுக்கு மட்டுமே உரியதா?


இதற்கு இல்லை என்பதே பதிலாகும்.
ஏனெனில் தமிழ் இலக்கண நூல்கள் சொல்லும் விதிகளைக் கொண்ட ஆநிரை கவர்தலும், ஆநிரை மீட்டலும்,
 மஹாபாரதக் காலத்திலேயே வடநாட்டில் நடந்திருக்கிறது.



பாண்டவர்கள் வனவாசத்தின் கடைசியாண்டில்
யாருக்கும் தெரியாத வண்ணம்
மத்ஸ்ய தேசத்தை ஆண்ட விராட அரசனது நாட்டில்
அஞ்ஞாத வாசம் இருந்தார்கள்.
அப்பொழுது மிகவும் வலிமை வாய்ந்த
விராட படைத்தலைவனான கீசகன் என்[பவன்
திரௌபதிக்குத் தொந்திரவு கொடுத்து வந்தான்.
அதனால் அவனை பீமன் கொன்றான்.



                      கீசக வதம்


கீசகன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டான்
ஸுசர்மன் என்னும் அண்டை நாட்டு அரசன்.
அவன் பல முறை விராட நாட்டின் மீது படையெடுத்து,
கீசகனால் தோற்கடிக்கப்பட்டவன்.
கீசகன் இறந்துவிட்டதால் அவனுக்குத் தைரியம் வந்தது.,
தன் நண்பர்களான துரியோதன்ன், கர்ணன் முதலானோருடன் கலந்தாலோசிக்கிறான்.





அப்பொழுது கௌரவர்கள் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள்.பாண்டவர்கள் வனவாசம் முடிந்து வரும் நேரமாதலால்,அவர்களை வெல்ல,தங்கள் செல்வத்தையும், படை பலத்தையும் அதிகரித்துக் கொள்ள வெண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள்.முதலில் அவர்கள் கவனத்துக்கு வந்தது விராட நாடாகும். கீசகன் இல்லாததால், விராட நாட்டை வெல்வது எளிதாகும். அதனால் முதலில் விராட நாட்டின் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து கொண்டு வர வேண்டும். அதைத் தடுக்க விராடன் எப்படிப் போரிடுகிறான் என்பதன் மூலம் அவனது படை பலம் தெரிந்து விடும். கீசகன் இல்லாததால்
விராட மன்ன்ன் பலம் குன்றி இருப்பான். அதனால் தங்களுடன் சமாதானத்துக்கு வருவான். பசுக்களும் தங்களிடம் இருக்கும்,
விராட அரசனும் தங்கள் ஆளுகைக்குக் கீழ் வந்து விடுவான்
என்று திட்டம் தீட்டினார்கள்.
அதன் படி ஒரு தேய்பிறை அஷ்டமியன்று
பசுக்களைக் கவர்ந்து வந்து விடுகிறார்கள் (மஹாபாரதம் – 4-30)



இழந்த பசுக்களை மீட்க விராட அரசன் போருக்குச் செல்கிறான்.
விராட நாட்டில் மறைந்து வாழ்ந்த பாண்டவர்கள்
அந்தப் போரில் ஈடுபட்டார்கள்.
அந்தப் போரில் பீமன் ஸுசர்மனைக் கைப்பற்றி,
அவன் ஓட்டிச் சென்ற பசுக்களை மீட்டு விடுகிறான் என்கிறது மஹாபாரதம்.


மஹாபாரதம் நடந்து 5000 ஆண்டுகள் ஆகி விட்டன.
5000 ஆண்டுகளுக்கு முன்பே
ஆநிரை கவர்தலும்ஆநிரை மீட்டலும்
சரஸ்வதி நதிக்கரையில் நடந்திருக்கிறது.
தமிழ் நாட்டில் ஆநிரை கவர்தலும்ஆநிரை மீட்டலும்
இதே விதமாக நடந்திருக்கவே,
மஹாபாரதத்தில் சொல்லப்பட்ட இந்தப் போர்,
தமிழ் நாட்டுப் பகுதிகளில் நடந்திருக்கலாம்
என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக,
பழனி அருகே தர்மபுரம் என்னும் ஊரில் உள்ள
திரௌபதி கோவிலைக் காட்டுகிறார்கள்.
அது இருந்த இடம் ஒரு காலத்தில் வஞ்சி எனப்பட்டது.


தமிழ் இலக்கணத்தில் வஞ்சித் திணை என்று ஒன்று உண்டு.
ஒரு அரசன் பகைவன் மீது போர் தொடுக்கப்
படையுடன் செல்வது வஞ்சித் திணையில் அடங்கும்.
வஞ்சி என்னும் நகரம் வேறு,
வஞ்சித்திணை வேறு.
வஞ்சித் திணை என்பது போருக்குச் செல்லும்
எந்த அரசனுக்கும் பொருந்தும்.
இந்தப் பெயர் மயக்கத்தாலும்,
அங்கு இருக்கும் திரௌபதி கோவிலாலும்
அந்த இடத்தில்தான் பாண்டவர்கள்
அஞ்ஞாத வாசம் இருந்தனர் என்ற முடிவுக்கு வர இயலாது.



ஏனெனில் விராட மன்னன் ஆண்ட மத்ஸ்ய தேசத்தின் அமைப்பை
மஹாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் காண்கிறோம்.
அவை சொல்லும் விவரத்தின்படி,
அந்த நாடுசரஸ்வதி நதியருகே இருந்தது.
பாண்டவர்கள் அங்கே யாருக்கும் தெரியாமல்
13 ஆம் வருட அஞ்ஞாத வாசத்தைக் கழித்தனர்.
அவர்கள் அதற்கு முன் 12 வருட வன வாசத்தைக்
காம்யகம்த்வைதம் என்னும் காடுகளில் கழித்தனர்.
இவை இன்றைய குருக்ஷேத்திரத்துக்கு அருகே
சரஸ்வதி நதிக் கரையருகே இருக்கின்றன.
அங்கிருந்து அவற்றுக்கருகே இருந்த
விராடன் ஆண்ட மத்ஸ்ய நாட்டில்
ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் புரிந்தனர் என்று
மஹாபாரதம் சந்தேகத்துக்கிடமில்லாமல் சொல்கிறது





விராட நாடு தமிழ்நாட்டுப் பகுதிகளில் இருந்திருக்கலாம்
என்று சொல்பவர்கள் தரும் இன்னொரு விவரம் இருக்கிறது.
பாண்டியர்களைப் பற்றிய சின்னமனூர்ச் செப்பேடுகளைப் பற்றி
முன்பே கண்டோம்.


அதன் ஆரம்பத்தில் பாண்டியர் பெருமையைச் சொல்லுமிடத்தே,
ராமாயணத்துடனும்மஹாபாரதத்துடனும்
தொடர்பு கொண்ட பாண்டியர்களைப் பற்றிச் சொல்கிறார்கள்.

அதில் பத்துத்தலை ராவணனை அடக்கிய பெருமை சொல்லப்படுகிறது.

அதற்கடுத்து,
தார்தராஷ்டிரன் படை முழுதும் களத்து அவிய பாரதத்துப் பகடோட்டியும்
என்று எழுதப்பட்டுள்ளது.


பகடு என்றால் எருது என்று ஒரு பொருள் உண்டு.
அதனால்தார்தராஷ்டிர்ர்களான கௌரவர்களது படை அழித்து,
எருதுகளை ஓட்டி வந்தான் ஒரு பாண்டியன்
என்று பொருள் கொண்டு,
அப்படிச் செய்தவன்விராட மன்னது மகனான உத்தரன்;
ஆநிரைகளை மீட்கச் சென்ற போரில் அர்ஜுனனுக்கு அவன் தேரோட்டினான்.
அதைத்தான் இந்த செப்பேடுகள் தெரிவிக்கின்றன என்பர் சிலர்.


உத்தரனை பாண்டிய மன்ன்னாகச் சித்தரிப்பது முழுத் தவறு.
ஏனெனில் உத்தரனது சகோதரியான உத்தரை என்பவளை
அர்ஜுன்ன் மகனான அபிமன்யு மணக்கிறான்.
அவனுக்கு உத்தரையிடம் பிறந்த மகனே பரீக்ஷித்து என்ப்படுபவன்.
அவன் ஒருவன்தான் பாண்டவ வம்சத்துக்கு ஒரே வாரிசாக உயிர் தப்பியவன்.
பாண்டியர்களுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை.



ஆனால் 18 நாட்கள் நடந்த மஹாபாரதப் போரில்
ஒரு பாண்டிய மன்னன் கலந்து கொண்டு
வீரமாகப் போர் புரிந்தான் என்று
31 இடங்களில் மஹாபாரதம் சொல்கிறது.
அதைதான் இந்தச் செப்பேடுகள் சொல்கின்றன.
பகடு என்றால் ஆண் யானை என்றும் ஒரு பொருள் உண்டு.
பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன்” (பு.வெ. 8-5)
என்னும் இடத்தில் ஆண் யானை என்னும் பொருளில் வந்துள்ளது.
பாரதப் போரில் போரிட்ட பாண்டிய மன்னனான
மலயத்துவஜன் என்னும் சாரங்கத்துவஜ பாண்டியன்,
யானை மீது ஏறிஅஸ்வத்தாமனுடன் போரிடுகிறான்.
அவன் செய்த வீரப்போரை மஹாபாரதத்தின் ஒரு அத்தியாயம் முழுவதும்காணலாம் (8-20)
அந்த அத்தியாயத்தின் ஆங்கில மொழியாக்கம் இங்கே:


அப்படிப் புரிந்த வீரப்போரைத்த்தான் செப்பேடுகளில்
பெருமையாகச் சொல்லியிருக்க முடியும்.
அது மட்டுமல்ல
விராடன் பேரூர் விசயனாம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களைப்
போல மணிமேகலையை மக்கள் சூழ்ந்து கொண்டனர்
என்று மணிமேகலை சொல்லுமிடத்தே (3-146)
அதற்கு உரையெழுதிய பண்டைய நூலார்,
வட நாட்டில் இருந்த விராடன் நகரம் என்றே விளக்கியுள்ளனர்.


இந்த விவரங்களின் மூலம் ஆநிரை கவரப்பட்ட விராட நாடு
வடக்கில் இருந்தது என்று தெளிவாகப் புலனாகிறது.  
எந்த காரணத்துக்காகத் தமிழ் நிலங்களில் இவை நடந்தனவோ
அதே காரணத்துக்காக வட இந்தியாவிலும்,
ஆநிரை கவர்தலும்மீட்டலும் நடந்திருக்கிறது.


அப்படியென்றால் இது ஆரியப் பழக்கமா?

ஆரியர்கள் இந்தப் பழக்கத்தைத் தமிழர் மீது திணித்தார்களா?

அல்லது இந்த சம்பவம் நடந்த இடம்
சிந்து சமவெளிப் பகுதியை ஒட்டி அமையவே,
திராவிடவாதிகள் இதைத் திராவிடப் பழக்கம் என்று சொல்வார்களா?

அல்லது சிந்து சமவெளியில் இருந்த ‘திராவிடர்கள்
தங்கள் பழக்கத்தை ஆரியர்’ மீது திணித்து விட்டார்களா?

அல்லது
திராவிடர்கள் தமிழ் நாட்டில் குடியேறிய பின்பும்
அதைப் பின்பற்றியிருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட ஆரியர்களும்
அதைப் பின் பற்றியிருக்கிறார்கள் என்று திராவிடவாதிகள் சொல்லலாம்.

ஆநிரை குறித்த விவரங்களை நுட்பமாக ஆராய்ந்தால்
அப்படிச் சொல்ல முடியாது.

ஏனெனில் தமிழ் நிலங்களில் நடந்த ஆநிரை கவர்தலிலும்,
சரஸ்வதி தீரத்தில் நடந்த ஆநிரை கவர்தலிலும் சில வேறுபாடுகள் இருக்கின்றன.


தமிழ் நாட்டைப் பொருத்தவரை,
இந்தப் பழக்கம் குறஞ்சிக்குரிய திணையாகும்.
வெட்சி என்னும் ஆநிரை கவர்தல் குறிஞ்சி நிலத்துக்குரியதாகும்.
வெட்சிதானே குறிஞ்சியது புறனே 
என்கிறது தொல்காப்பியம். (தொல்-பொருள்-2-1)
குறிஞ்சி என்பது மலையும் மலையைச் சார்ந்த நிலமுமாகும்.
ஆனால் பசுக் கூட்டங்கள் பொதுவாக
முல்லை நிலத்தில் இருப்பவை.
பசுக்களைக் கவர்தல் என்பது
முல்லை நிலத்தில் நடப்பதாகச் சொல்லப்படவில்லை.
அந்தச் செயலைகுறிஞ்சி நில மக்கள் செய்தனர்.
மஹாபாரதம் சொல்லும் ஆநிரை கவரப்பட்ட விராட நாடு மலைப் பகுதி அல்ல.

ஆனால் கிருஷ்ணன் தோன்றிய யாதவ குல மக்கள்
மலையை முக்கியமாக நினைத்தார்கள்.
அவர்கள் தங்கள் விழாக்களை
மலை மீது கொண்டாடினார்கள்.
கிருஷ்ணன் பிறந்த மதுரா நகரத்தில் இருந்த யாதவர்களுக்கு
கோவர்தன மலை முக்கியமானதாக இருந்தது,
அதன் மேல் சென்று விழாவெடுத்தார்கள்.
கோவர்தன மலையைக் கடவுளாக வழிபடுங்கள்
என்று கிருஷ்ணன் சொன்ன செய்தியைப் பகுதி 20 இல் கண்டோம்.
மதுரையை விட்டு நீங்கி துவாரகை வந்த பிறகு
ரைவதக மலையில் விழாவெடுத்தார்கள்.



         துவாரகை அருகே உள்ள ரைவதக மலை.


மலைகளே உணவையும்செல்வத்தையும் தரும்
என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்த்து.
மேய்ச்சல் நிலம் சமவெளியில் இருக்க,
மலைகளின் மீது ஏன் அவர்களுக்கு ஆர்வம்?


தமிழ் நிலங்களிலும்மலைப் பகுதிகளான
குறிஞ்சி நில மக்களுக்கு ஆநிரைகள் மீது ஏன் ஆர்வம்?
மலைகளின் மீது மாடுகளை ஓட்டிச் சென்றால்,
வற்றுக்குத் தேவையான உணவு கிடைக்குமா?
அல்லது மலைப் பகுதிகளில் உள்ள தட்ப வெப்ப நிலை
மாடு கன்றுகளுக்கு ஏற்றதாக இருக்குமா?


இந்தக் கேள்விகளை எழுப்பும் போது,
கடலில் மூழ்கிய தென்னன் தேசத்தில்
ஆயர் மக்கள் எங்கு வாழ்ந்தனர் என்ற கேள்வி எழுகிறது.


தென்னன் தேசத்தில் ஆயர் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குக்
கலித்தொகைப் பாடல் 104 ஒரு சான்றாக இருக்கிறது.

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட
ப்
புலியொடு வில் நீக்கிப்புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர்

என்னும்   பாடலில்
தொல்குடி மக்களான நல்லினத்து ஆயர் என்று
தங்கள் பூர்வீகத்தைக் கூறுகிறாள் ஒரு ஆயர் மகள்.
ஆம் ஊழிக்கு முன் இருந்த இவர்கள் குடியினர்,
ஊழியின் காரணமாக தங்கள் இருப்பிடங்கள் கடலுக்குள் முழுகி விடவே,
பாண்டிய அரசனைத் தொடர்ந்து
நிலப்பகுதிக்கு வந்தனர் என்பதை
இந்த வரிகள் தெரிவிக்கின்றன.
ஊழிக்கு முன் அவர்கள் வாழ்ந்த பகுதி எப்படிப்பட்ட பகுதி?


ஊழிக்கு முன் இருந்த ஏழேழ் நாற்பத்தொன்பது
நிலங்களைச் சொல்லும் நிலப்பகுதிகளைப் பார்த்தால்
அங்கு ஆயர்களுக்கான முல்லை நிலம் சொல்லப்படவில்லை.

அங்கு கரையோரப் பகுதிகள்,
மலைப் பகுதிகள்,
மருதப் பகுதிகள்,
பாலைப் பகுதிகள் மட்டுமே
ஏழேழ் நாற்பத்தொன்பது நிலங்களாகச் சொல்லப்பட்டுள்ளன.


அப்பொழுதிருந்த குணகரை நாடுகள் ஏழும்,
தெங்க நாடுகள் ஏழும்,
குறும்பனை நாடுகள் ஏழும்
கடலோரப் பகுதிகள் என்று அந்தப் பெயர்கள் மூலமாகத் தெரிகிறது.
ஆம் ஊழிக்குப் பின் செய்யப்பட்ட
ஐந்திணை நிலப்பகுப்பில்
இவை நெய்தல் நிலத்தைச் சேரும்.

முன் பாலை ஏழும்,
பின் பாலை ஏழும்
ஐந்திணையின் பாலை நிலத்தைச் சேரும்.

மதுரை நாடுகள் ஏழும்,
மருத நிலத்தைச் சேரும்.

மீதமிருக்கும் குன்ற நாடுகள் ஏழும்
குறிஞ்சி நிலத்தைச் சேரும்.

இந்த ஏழேழ் நாற்பத்தொன்பது நாடுகளில்
முல்லைக்கான நிலப்பரப்பே சொல்லப்படவில்லை.

முல்லை என்றால் காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும்.
அங்கு வாழ்ந்த மக்கள் ஆயர்கள் ஆவர்.
அவர்கள் ஆநிரை மேய்த்தும்ஏறு தழுவுதலும் செய்து வந்தனர்.


ஆனால் அப்படிப்பட்ட ஒரு நில அமைப்பையும்,
வாழ்க்கை முறையையும்,
ஆம் ஊழிக்கு முன் இருந்த நிலங்களில்
சொல்லப்படவில்லை என்பது கவனத்துக்குரியது.
ஆயினும்அந்த நிலங்களில் ஆயர்கள் இருந்திருக்கின்றனர்
என்று மேலே காட்டியுள்ள கலித்தொகைப் பாடல் சொல்கிறது.

மரபணு ஆராய்ச்சியாளர்கள் ஆய்விலும்,
தெற்காசியாவில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்பே மக்கள் ஆநிரைகளை வளர்த்திருக்கிறார்கள்
என்று தெரிய வருகிறது.
கடலுக்குள் மூழ்கி விட்ட தென்னன் தேசத்தில்
ஆநிரைகள் எங்கே வளர்க்கப்பட்டிருக்கும்?
இதற்கான பதில் தொல்காப்பியத்தில் மறைந்துள்ளது.


கடைச் சங்க நூலான தொல்காப்பியத்தில்
சொல்லப்படும் பல வழக்கங்களும்
‘இவ்வாறு இருந்தது என்று சொல்வார்கள்”
(என்மனார் புலவர்) என்றே குறிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடைச் சங்கம் உண்டாவதற்கு முன்னால்,
அதாவது 3 ஆம் ஊழிக்கு முன்னால் இருந்த
பல வழக்கங்களையும்
3 ஆம் ஊழிக்குப் பிறகு, கடைச் சங்க காலத்தில்
பின் பற்றியிருக்கிறார்கள்.

3 ஆம் ஊழிக்கு முன் இருந்த குன்ற நாடுகளில்
ஆயர்கள் ஆநிரைகளை மேய்த்திருந்தால்,
அந்த வழக்கத்தை
3 ஆம் ஊழிக்குப் பின் உண்டாக்கின
குறிஞ்சி நிலத்துக்கு வைத்திருப்பார்கள்.

3 ஆம் ஊழிக்குப் பின் முல்லை நிலம் என்று
தனியாக ஆயர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும்,
குறிஞ்சி வாழ் மக்களது பூர்வீகத் தொழிலான
ஆநிரையை வளர்த்தலையும் அங்கீகரித்திருக்கிறார்கள்.
அவர்களிடம் ஆநிரை இல்லாவிட்டாலும்,
அவர்கள் அவற்றைக் கவர்ந்தேனும் பெறலாம்
என்ற விதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படிச் சொல்லும் வெட்சித் திணைச் சூத்திரங்கள்
தொல்காப்பியத்திலும்,
பன்னிரு படலத்திலும் உள்ளன.
அவற்றை வாழ்கை முறையாகக் கொண்டவர்களைப் பற்றி
விவரிக்கும் புற நானுற்றுப் பாடல்கள் உள்ளன.
அவை குறித்த விவரங்களை கட்டுரையில் காண்போம்.

இங்கு நாம் சொல்ல வருவது,
3 ஆம் ஊழிக்கு முன்
மலையும் மலை சார்ந்த நாடுகளிலும் இருந்த மக்கள்
பசுக்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதே.
குறிஞ்சிக்கான திணையாக ஆநிரை கவர்தல் சொல்லப்படவே,
ஆம் ஊழிக்கு முன் இருந்த குன்ற நாடுகளிலும்
ஆநிரையை வளர்த்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.  


மேலும்
பஃறுளி ஆற்றுடன் பன் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”  
என்று சிலப்பதிகாரம் (11- 21& 22) சொல்வதாலும்,

அந்தச் சம்பவத்தை
குமரிகொல்லம் முதலிய பன் மலை நாடும்,
காடும்நதியும்பதியும்தட நீர்க் குமரி
வட பெருங்கோட்டின்காறும் கடல் கொண்டு ஒழிதலால்
என்று
அடியார்க்கு நல்லார் அவர்கள்
சிலப்பதிகாரம்வேனில் காதை உரையில் சொல்லியுள்ளதாலும்,
இன்றைய கொல்லத்தை ஒட்டிச் செல்லும்
மலய பர்வதம் என்னும் தொடரின்
பல பகுதிகள் குன்ற மலை நாடுகளாக இருந்திருக்க வேண்டும்.
தென்னிந்தியாவுக்குத் தெற்கே
இன்றைக்குக் கடலில் முழ்கி விட்ட
அந்த மலைத்தொடரின் பகுதியே
அடியார்க்கு நல்லார் சொல்லும் குமரியின்
வட பெருங்கோடாக இருக்க வேண்டும்.
(கோடு என்றால் மலை முகடு, கரை என்று பொருள்படும்)

அந்த மலை
இன்றைய மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக
இந்தியப் பெருங்கடலுக்குள் செல்கிறது.



இந்தப் படத்தில் உள்ள அமைப்புகளைப் பாருங்கள்.


ஊழிகளைக் கண்ட கடல் பகுதி இது.
இந்தியாவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி இருந்த
நிலப்பகுதி கடலுக்குள் முழுகியுள்ள அடையாளம்
வெளிர் நீலநிறமாகத் தெரிகிறது.

அந்தப் பகுதி இன்றைய குஜாரத்துக்கு
எல்லை போலச் செல்வதைக் காணலாம்.
இந்தப் பகுதியில் முழுகினவை போக
மீதி இருப்பவை லட்சத் தீவுகள் என்று சொல்லப்படும்
தீவுக் கூட்டங்களாக உள்ளன.
இந்தத்தீவுகள் கடல் மட்டத்துக்கு மேலே தென்படும் மலை முகடுகளே.


இந்தப் படத்தில் சில கருப்பு நிற அம்புக் குறிகளையும்,
எண்களையும் காணலாம்.
கடைசி ஊழியின் போது,
கவாடம் முழுகிஇன்றைய கொல்லம் வழியாக
ஆயர்கள் நிலப்பகுதிக்கு வந்துள்ளார்கள்.
அவர்கள் வந்து தங்கின ஒரு இடமான
முத்தூர்க் கூற்றத்தை நாம் முன்பே
அடையாளம் கண்டோம்..


முந்தின ஊழிகளின் போது,
ஒவ்வொரு முறையும்,
குடியிருப்பு மலை முகடுகள் கடலுக்குள் முழுகின போது,
தப்பிப் பிழைத்த மக்கள்
சென்றிருக்கூடி வழியை
ருப்பு நிற அம்புக் குறிகள் மூலமாகக் காணலாம்.
அவர்கள் சென்றடைந்த இடங்கள் 2,3 என்று குறிக்கப்பட்டுள்ளன.

4 என்னும் எண் காட்டுவது
13,000 ஆண்டுகளுக்கு முன் சரஸ்வதி நதி கடலில் கலந்த இடம்.
அதுவே முதன் முதலில் இருந்த துவாரகை ஆகும்.

அப்பொழுது ஏற்பட்ட ஊழியின்போது
வைவஸ்வத மனுவும், அவனைச் சேர்ந்தவர்களும்
அந்த்த் துவாரகையின் வழியாக சரஸ்வதி நதிக்குள் நுழைந்து,
உயிர் தப்பினார்கள் என்பதைப் பகுதி 48 இல் விரிவாகக் கண்டோம்.


இனி இந்தக் கட்டுரையில்
நாம் எடுத்துக் கொண்ட பொருளைப் பார்ப்போம்.

3 ஆம் ஊழியின் போது ஆயர்கள் நுழைந்த வழியைக் கொண்டு
அவர்கள் ஊழிக்கு முன்னால் எங்கிருந்திருப்பார்கள்
என்று சொல்ல முடியும்.
அது குமரி மலைத் தொடர் என்று இந்தப் படத்தில் காட்டியுள்ள பகுதியாகும்.
அதே மலைத்தொடருடன் தொடர்பு உடையவர்கள்தான்,
அதற்கு முந்தின ஊழிகளில் மேற்குக் கரையோரமாக
வடக்கு நோக்கி இடம் பெயர்ந்திருக்க முடியும்.


அப்படி ஒரு பொதுத் தொடர்பு கொண்ட மக்களாக இருக்கவே,
வைவஸ்வத மனுவுடன் சென்ற மக்களில்
ஆயர்களும் இருந்திருக்க வேண்டும்.
அவனது ஒரு மகனான ப்ரஸத்ரன் என்பவன்
பசுக்களை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டான்

புது வாழ்வு தொடங்கின உடனேயே
பசுக்கள் பராமரிப்பில் ஈடுபட்டார்கள் என்றால்,
அந்த்த் தொழிலில் மனுவின் மக்கள்
ற்கெனெவே ஈடுபட்டிருக்க வேண்டும்
என்று தெரிகிறது.
அவர்கள் வந்தடைந்த நிலப்பரப்பிலும்
மாடுகள் இருந்திருக்க வேண்டும்,
அவர்களும் பசுக்களைத் தங்களுடன் கொண்டு வந்திருக்க வேண்டும்.


பசுக்களைப் பாரமரித்தவர்கள்,
பூர்வீகத்தில் மலையுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்திருந்தால்,
அவர்கள் வந்தடைந்த புது இடத்திலும்,
மலைத் தொடர்பைத் தேடுவார்கள்.
மனுவைச் சேர்ந்தவர்கள் வந்து சேர்ந்த சரஸ்வதி நதிப் பகுதிகளில்
பெரிய மலைகள் கிடையாது.
ஆயினும் தத்து எடுத்துக் கொள்வது போல
அருகிலுள்ள குன்றுகளை அரவணைத்து
அவற்றுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்தார்கள்?


                   கோவர்தன மலை   


அந்த மலையின் பெயரைப் பாருங்கள்-
கோவர்தனம்.
இது சமஸ்க்ருதப் பெயர்.
கோ என்பது சமஸ்க்ருத்தில் பசு என்று பொருள்.
கோவர்த்தனம் என்றால் பசுக்களைப் பெருக்குவது என்று பொருள்.
அந்த மலையைத் தெய்வமாக நினைக்கவே,
அதன் மூலம் தங்களுடைய பசுச் செல்வம் கொழித்தது என்று
அப்படிப் பெயரிட்டிருக்கிறார்கள்.

யமுனைக் கரையில் இருந்தவரை,
பசுத் தொழில் செய்தவர்கள் கோவர்த்தன மலையைத்
தெய்வமாக நினைத்தார்கள்.
அந்த மலை மீது விழாக்களைச் செய்தார்கள்.
பிறகு கிருஷ்ணனுடன் துவாரகைக்குக் குடி பெயர்ந்தவர்கள்
அதை ஒட்டியிருந்த ரைவதக மலையையும்
ஏன் முக்கியமாக ஆக்கிக் கொண்டார்கள்?

முன்பே ரைவதகம் என்னும் மலையை
சாகத்தீவில் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இடம் என்று காட்டினோம்


அதற்கும்துவாரகைக்கருகே இருக்கும் ஒரு குன்றுக்கும்
ஏன் ஒரு தொடர்பு காட்டினார்கள்?
ரைவதகம் என்றாலே ரேவதி நக்ஷத்திரத்துடன் தொடர்பு கொண்டது
என்று பார்த்தோம்.
அந்த மலைபசுக்கள்மழைசெல்வம் ஆகியவற்றைத் தரவல்லது
என்று சொல்லப்படுகிறது.
ரேவதி நக்ஷத்திர தேவனான பூஷன் இவற்றைத் தரக் கூடியவன்.
அந்த மலைப் பகுதியிலும்,
ஊழிகளுக்கு முன் பசுக்கள் வளர்க்கப்ட்டிருக்க வேண்டும்.
அதுவும் தென்னன் நாட்டின் குன்ற நாடு
என்னும் அமைப்பில் அடங்கும்.
அங்கு ஆரம்பித்த பசுத் தொழில்,
ஏனைய குன்ற நாடுகளிலும் பரவியதா?
ஏனெனில் மொத்தம், எழு குன்ற நாடுகள் இருந்தன
என்கிறார் அடியார்க்கு நல்லார்.


அந்த மலைத்தொடரிலும்,
குமரி மலைத்தொடரிலும்
வாழ்ந்த மக்கள் ஆயர்களாக இருந்திருக்க வேண்டும்.
15,000 ஆண்டுகளுக்கு முன்பே உண்டான ஊழிகள் காரணமாக,
ஆங்காங்கே அவர்கள் பிரிந்திருக்க வேண்டும்,
அதில் ஒரு பிரிவு, 13,000 ஆண்டுகளுக்கு முன்பே
நாம் காட்டினோமே திராவிடம் என்னும் பகுதி 
அங்கு வந்து வாழ்ந்திருக்க வேண்டும்.



அங்கிருந்து சரஸ்வதி நதிக்குள் நுழைந்த மக்கள்,
அந்த பசுத் தொழிலை விடாது பின்பற்றியிருக்கின்றனர்.


மனுவுடன் அங்கு சென்ற மக்களுக்கும்,
இந்தியக் கடலில் இருந்த
ரைவதக மலைகுன்ற நாடுகள் போன்ற
மலை நாடுகளில் இருந்த மக்களுக்கும்  
ஆதியில் ஒரு பொதுத் தொடர்பு இருந்திருந்தால்தான்
ஆநிரை சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களிலும்
ஒரு பொதுத் தன்மையுடன் இருக்க முடியும்.
பசுக்களைப் பற்றிய மரபணு ஆராய்ச்சி
அப்படி ஒரு பொதுத் தன்மை இருந்தது என்கிறது.
இந்தியா முழுவதும் பசு வளர்ப்பு இருந்திருக்கிறது.
இந்தியாவில்தான் பசு வளர்ப்பு ஆரம்பமானது என்கிறது.


ஆநிரை கவர்தலும்,
ஆநிரை மீட்டலும்,
ஆநிரை காத்தலும்,
குன்ற மலைகளுக்குத் தரப்பட்ட முக்கியத்துவமும்,
பழந்தமிழ் ஆயர்கள் மத்தியிலும்,
வட இந்திய யாதவர்கள் மத்தியிலும் ஒரே விதமாக இருப்பதால்,
அவர்களுக்குப் பொதுவான ஆதிக் குடிகள்
இந்தியக் கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும்
அந்த இந்தியக் கடல் பகுதியிலிருந்து
அவர்கள் காலப்போக்கில் பிரிந்து,
இந்திய நிலப்பரப்புக்கு வந்திருக்க வேண்டும்.


இந்திய நிலப்பரப்பில் அவர்கள் எங்கு குடியேறியிருந்தாலும்,
அவர்களது வலுவான பசுத் தொழில் மாறாது இருந்திருக்கிறது.


ஆயர் மக்கள் வாழ்வை ஒட்டியே
பாவை நோன்பு அமைந்திருந்ததைத்
திருப்பாவையின் மூலம் நாம் அறிகிறோம்,
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
என்று திருப்பாவை கூறவே
அது ஆயர்களால் பின்பற்றப்பட்ட ஒரு வழிபாட்டு முறையாக
ஆதியில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.


பசுகன்றுபால்தயிர் இவைதான்
அவர்களுக்கு வாழ்வாதாரம்.
அதற்கான ஒரு வழிபாட்டை
ஒரு பாவை உருவம் செய்து வைகை ஆற்றங்கரையிலும்,
காவிரி ஆற்றங்கரையிலும் செய்தார்கள்.


அதே விதமான வழிபாட்டை,
கார்த்தியாயினி என்னும் பெண் தெய்வப் பாவை வடித்து
யமுனை ஆற்றங்கரையில் செய்தார்கள் என்று
ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது(10-22)
எப்படி இந்த ஒற்றுமை வந்தது?
அது மட்டுமல்ல.

யமுனை ஆறு


தமிழ் நாட்டு இடங்களுக்குத்
தனித் தமிழ் பெயர் இருக்கிறது.
தமிழ்ப் பெயர்கள்
வட இந்தியாவிலும் காணப்படுகின்றன.

ஆனால் வட இந்தியாவில்
சமஸ்க்ருத்த்தில் வழங்கப்படும் இடப்பெயருக்குத்
தனித் தமிழ்ப் பெயர் அமைந்திருப்பது என்பது மிக அரிது.
அப்படி இரண்டு பெயர்கள்தான் உள்ளன.
அதில் ஒன்று ஒரு நதியின் பெயர்.

வைவஸ்வத மனுவைச் சேர்ந்த மக்கள் இருந்த
வட இந்தியப் பகுதியில் உள்ள எல்லா ஆறுகளையும்
ஒரே விதமான பொதுப் பெயரால்தான்
எல்லா மொழிகளிலும் அழைக்கிறார்கள்.
கங்கையைகங்கை என்றுதான் தமிழ் நாட்டவர்களும் குறிப்பிட்டார்கள்,
சமஸ்க்ருத்த்திலும் கூறினார்கள்.
அது போலநர்மதா,
கோதாவரி (இதிலும் கோ என்னும் பசுவின் பெயர் இருக்கிறது)
என்னும் எல்லா முக்கிய நதிகளது பெயர்களையும்
அப்படியேதான் தமிழிலும் கூறினார்கள்.

அல்லது வடமொழிப் பெயர்களது
தமிழ்த் திரிபைப் பயன் படுத்தினார்கள்.
உதாரணமாக
பாடலிபுத்திரத்திற்கு (பாட்னா) அருகே இருக்கும் சோன் நதியை
சோணை ஆறு என்று தமிழில் சொன்னார்கள்.

ஆனால் யாதவர்கள் விளையாடிய,
யாதவப் பெண்கள் பாவை நோன்பு செய்த
யமுனை ஆற்றுக்குத்
தமிழில் தனிப் பெயர் இருக்கிறது.

அது தொழுனை என்பதாகும்.
தொழுனை என்ற சொல்
தொழுவம் என்னும் சொல்லிலிருந்து ஏற்பட்டது.
தொழுவம் என்றால் மாட்டுத் தொழுவம் என்று பொருள்.

தொழு என்னும் சொல்லுக்குசெந்தமிழ் அகராதி தரும் அர்த்தங்களைப் பாருங்கள்.
தொழு என்றால் மாட்டுத்தொழுவம்,
தொழு என்றால் ரேவதி நக்ஷத்திரம்!
தொழு என்றால் உழலை மரம்.
மாடுகளின் கழுத்தில் கட்டும் மரத்துக்கு உழலை மரம் என்று பெயர்.
உழலை என்றால் உழலுதல்சுழலுதல்அலைதல் என்று பொருள்.
நிலத்தை உழலுவதால் உழுதல் என்னும் சொல் உண்டானது,
மாடுகளுக்கும்உழவுக்கும் உள்ள தொடர்பு,
அந்தச் சொல் மூலமாகவே காட்டப்படுகிறது.
வேளாண்மையும்பசுவும் ஒருங்கிணைந்த ஒரு சமுதாயத்தில்
இப்படி ஒரு சொல் உருவாகும்.


இனி தொழுவம் என்பதன் சமஸ்க்ருதச் சொல் என்ன என்று பார்ப்போம்.
அதற்கு கோத்ரம் என்று பெயர்!!
கோ த்ர என்பது கோத்ர.
கோ என்றால் பசு,
த்ர என்றால் பாதுகாப்பது.
பசுக்களைப் பாதுகாக்கும் இடம் கோத்ரம் என்பதாகும்.
அதுவே தமிழில் தொழுனையாகும்.
தொழுனை என்ற சொல் சிலப்பதிகாரத்தில் இருக்கிறது.
அதனால் இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன் வரை
யமுனை ஆற்றைத் தொழுனை என்றே
அழைத்து வந்தார்கள் என்று தெரிகிறது.


மற்ற வட இந்திய நதிகளை அவற்றின் பெயரிலேயே அழைக்கும் போது,
யமுனைக்கு மட்டும் ஏன் இந்த்த் தனித் தமிழ்ப் பெயர்?
அதையும் ஆராய்வோம்.

யமுனை ஆறானது முதலில்
சரஸ்வதி நதியின் கிளை நதியாக இருந்தது என்பதை
அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.


இன்றைக்கு இந்த யமுனை கங்கையில் கலக்கிறது.
ஆனால் வைவஸ்வத மனு இருந்த போது
யமுனை ஆறு சரஸ்வதி நதியில் கலந்தது.
அந்த ஆற்றங்கரையில் மாட்டுத்தொழுவங்கள் அதிகமாக இருந்திருந்தால்,
அதைத் தொழுவம்தொழுனை என்று அழைத்திருக்கலாம்
என்று சொல்லலாம்.
அதற்கான சாத்தியமும் இருக்கிறது.
அன்றைக்கு மனுவுடன் சென்ற ரிஷிகள்.
பசு கன்றுகளுடன் ஆஸ்ரமத்தை அமைத்திருப்பார்கள்.
அவர்களை ‘கோத்ர ரிஷிகள்’ என்று இன்று வரை சொல்லி வருகிறோம்.
ஒருவன் எந்த கோத்ரம் என்பது,
ரிஷிகளிடத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது.
அந்த ரிஷிகள் இருந்த இடமும் பசுத்தொழுவமாக இருந்திருக்கிறது.
பசுக்களைப் பராமரிப்பது போல
அவர்கள் மக்களைப் பராமரிக்கும் தர்மத்தை உபதேசிப்பதால்
அவர்கள் இருந்த இடம் கோத்ரம் என்றாகி இருக்கலாம்.


ஆனால் அதே பொருள் கொண்ட தமிழ்ச் சொல்
அவர்கள் வாழ்ந்த அந்த இடத்துக்கு எப்படி வந்தது?


தை ஆராயும் முன்,
பசுவுக்கும் ரிஷிகளுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும்
சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.


தவமும்ஞானோதயமும் பசுக்களைச் சுற்றியே இருந்தன
என்று சொல்லும் உபநிஷதங்கள் உள்ளன.
சத்யகாம ஜாபாலி என்னும் சிறுவன்
கௌதம மஹரிஷியிடம் ஆத்ம வித்தை கற்றுக் கொள்ள விரும்பினான்.
அவனிடம்
மெலிந்திருந்த 400 பசுக்களைக் கொடுத்து
ஓட்டிக் கொண்டு போகச் சொன்னார் அந்த ரிஷி.
அவன் அவை 1000 பசுக்களான பிறகு திரும்பி வருவதாகச் சொன்னான்.
அப்படி அவை 1000 பசுக்களான பிறகு அவன் திரும்பும் போது
அந்த பசுக் கூட்டத்திலிருந்த ஒரு மாடு
அவனுக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்தது
என்று சாந்தோக்கிய உபநிஷத்து கூறுகிறது.


பிரம்ம ஞானத்துக்கும் பசுக்களுக்கும்
ஒரு தொடர்பை வேத மரபு சொல்கிறது.
ஒரு முறை ஜனகர் என்னும் அரசர்
1000 பசுக்களின் கொம்புகளில்
பத்துப் பத்துப் பொற்காசு கட்டி வைத்து,
பிரம்ம வித்தையில் சிறந்தவர்
அவற்றை ஓட்டிக் கொண்டு போகலாம் என்றார்.
யஞ்ஞவாக்கியர் என்னும் ரிஷி,
தன் சிஷ்யனைக் கூப்பிட்டு,
அவற்றை ஓட்டிக் கொண்டு போகச் சொன்னார்.
உலக வாழ்க்கையைத் துறந்த ரிஷிக்கு
செல்வத்தின் மீது ஆசையா?
அப்படி இல்லை.
பிரம்ம ஞானிக்கு
செல்வத்துள் செல்வமான பிரம்ம ஞானம் என்ற செல்வமே இருக்கிறபோது,
அதன் உருவகமாக
உலகியல் செல்வத்தில் முதன்மையான பசுச் செல்வம் கூடவே இருக்கும்.


பசுவுக்கும்பிரம்ம ஞானத்துக்கும் உள்ள தொடர்பு,
சாதாரண மக்களான நமக்குத் தெரியாது.
ஆனால் பசுவின் பரிபாலனத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு சமுதாயம்,
ரைவதக மலை தொடங்கி,
ஆயர்கள் வாயிலாக தமிழ் நாட்டிலும் இருந்தது.
ரைவதம் என்ற பெயரே
ரேவதி என்னும் நக்ஷத்திரத்தின் பெயரிலிருந்து உண்டானது.
அதே பெயருக்கான தமிழ்ப் பதத்தில்
தொழு என்று
சரஸ்வதி நதியின் கிளையான யமுனையை அழைத்திருக்கிறார்கள்.


தமிழ் தெரிந்தவர்தானே அப்படிப் பெயரிட்டிருக்க முடியும்?
தமிழ் நாட்டில் உட்கார்ந்திருப்பவன்,
எங்கோ உள்ள யமுனைக்கு அப்படி ஒரு பெயர் இட்டிருக்க முடியுமா?
அப்படி அவன் பெயரிட்டிருந்தாலும்,
முக்கிய அர்த்தங்கள் பொதிந்த தொழுனை
என்னும் பெயரை இட்டிருக்க  முடியுமா?
முடியாது.

அது மட்டுமல்ல.
யமுனை ஆற்றங்கரையில் இருந்த
நகரத்தின் பெயரைப் பாருங்கள்.
மதுரா நகரம்!

தென்னன் நாட்டிலும் ஒரு மதுரை,
வடக்கில் தொழுனை ஆற்றங்கரையிலும் ஒரு மதுரை!
தென்னன் நாட்டு மதுரையைத்
தென் மதுரை என்று ஏன் அழைத்தார்கள்?
வடக்கில் ஒரு மதுரை இருந்திருந்தால்தான்,
அதிலிருந்து வேறு படுத்திக் காட்ட,
தென் மதுரை என்றிருப்பார்கள்.


தென்னன் தேசத்தில் ஏழு மதுரை நாடுகள் இருந்தன.
மதுரை நாடுகள்
நகர அந்தஸ்துடன் இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில் அவற்றுள் ஒரு மதுரை,
தென்னனது தலை நகரமாக இருந்த்து.
அந்த பூர்வ தொடர்பு கொண்ட மக்கள்,
மதுர பாஷையில் பேசி வந்த மக்கள்,
பூர்வ தொழிலாக பசுக்களைப் பராமரித்து வந்த மக்கள்,
மலைப் பகுதிகளில் களிப்பான வாழ்வு வாழ்ந்த மக்கள்,
மலையை ரேவதி நக்ஷத்திரத்துடன் தொடர்பு படுத்திய மக்கள்
சரஸ்வதி நதி தீரத்துக்கு வந்திருந்தால்,
நிச்சயம்
பூர்வ நினைவில்
ஒரு தொழுனையைக் கண்டு,
அதனருகே மதுரையை அமைத்து
பழைய வாழ்க்கைச் சுவடுகளை மறக்காமல்
கடைப்பிடித்து வாழ்ந்திருக்க முடியும்.


இந்த ஒப்புமையை
சங்க காலம் வரையில் நம் தமிழ் மக்கள் மறக்காமல் இருந்திருக்க வேண்டும்.
திருவள்ளுவ மாலையில் 21 ஆம் பாடலாகக் காணப்படும்
நல்கூர் வேள்வியார் என்னும் சங்கப் புலவர்
எழுதியுள்ள பாடலைப் பாருங்கள்.

“உப்பக்க நோக்கி உபகேசி தோள்மணந்தான்
உத்தர மாமதுரைக் கச்சென்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில்புலச் செந்நாப்
போதார் புனல்கூடற் கச்சு.” 


இதன் பொருள் :-
மாட்டின் முதுகைப் (உப்பக்கம் = முதுகு) பிடித்து அடக்கி,
உபகேசி (நப்பின்னை) என்பவளை மணந்த கிருஷ்ணன்
வட மதுரைக்கு அச்சு போன்றவன் என்பர்.
இப்பக்கம் (நமது இடத்தில் / நமது ஊரில்)
மாதானுபங்கி எனப்படுகிற (மாதானுபங்கியைக் கொண்ட)
குற்றமற்ற புலமையாகிய (மறுவில் புலம்),
செவ்விய நாவாகிய மலரையுடையவர் (செந்நாப்போதார்),
புனல் கூடல் நகரமாகிய தென் மதுரைக்கு அச்சு போன்றவர்.


இந்த ஒரு பாடலில் மட்டும் பல சரித்திரங்கள் அடங்கியுள்ளன.
அவற்றை உரிய இடத்தில் இந்தத் தொடரில் பார்க்கலாம். 
இங்கு வடமதுரை, தென் மதுரை என்ற ஒப்பீட்டைப் பாருங்கள்.
ஒரே மூலத்தை உடைய மக்களால்தான்
இப்படிப் பெயரிட்டிருக்க முடியும்.
மேலும் இந்தப் பாடலில் சொல்லப்படும்
உப்பக்கம் அடக்கின விவரத்தைப் பாருங்கள்.
யாதவ குலத் தோன்றலான கிருஷ்ணன்
ஏறு தழுவி, உபகேசியை மணந்திருக்கிறான்.


ஏறு தழுவி, அந்த ஏற்றின் சொந்தக்காரியான பெண்ணை
மணம் செய்யும் வழக்கம்
தமிழ் நாட்டின் முல்லை நிலங்களில் இருந்தது.
கலித் தொகையின் முல்லைப் பாடல்களில் பலவும்
அந்த வழக்கத்தைப் பறை சாற்றுகின்றன. 

அந்தப் பாடல்களில் ஏறு தழுவுபவன், கிருஷ்ணனோ
என்று வியக்கும் பாடல்கள் உள்ளன. 

ஏறு தழுவும் வழக்கம்
தமிழ் நாட்டிலிருந்து யமுனைக் கரைக்குச் சென்றதா? 

அல்லது யமுனைக் கரையிலிருந்து
தமிழ் நாட்டுக்கு வந்ததா? 


 thanks to
http://thamizhan-thiravidana.blogspot.in

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின்  அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை  அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.  ஆனால், நாளடைவில் நால்வகை நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அந்த எருது விளையாட்டு பழகிப்போனதுதான் வேடிக்கை. அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை  (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால்  ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சி நிலத்தவரும் நெய்தல் நிலத்தவரும் ஏறு  தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பொதுப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது. 

ஸ்பெயின் உள்ளிட்ட  உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்விய லின் வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு  அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந் தைய பெயர்கள். 

 பறையில் தண்ணுமை முழக்கம் எழுப்பி தொழுவில் அடைபட்ட காளையை திறந்துவிட்டு, மல்லல் மைதானத்தில் காளையர்கள் மோதிப்பிடிப்பது  தான் 
பொதுவான வழக்கம். ஆனால், தமிழகத்தின் தென், மத்திய மாவட்டங்களில் தான் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. வட மாவட்டங்களில் காளையின் கழுத்தில் கயிறு கட்டி இருபுறமும் பலர் நின்று பிடித்துக்கொள்ள அதை அடக்கி கொம்பில் கட்டிய பரிசுப்பணத்தை கவர காளையர்கள் முயல்கின்றனர். 

தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீப காலம் வரை கோயில் காளைகளையும் வீட்டில் வளர்க்கும் காளைகளையும் பரிசுப் பொருட்களை கட்டி தெருவில் விடும் வழக்கம் இருந்தது. ஊரார் வழிநெடுக நின்று  அதை அடக்க முயல்வார்கள். ஈழத்து மக்களிடையே பட்டிப்பிடி  விளையாட்டு வழக்கமுள்ளது. இதன்படி பட்டிகளில் அடைக்கப்பட்ட மாடுகளின் கழுத்தில் வடை, பனியாரம் போன்ற உணவுப்பண்டங்களை ஆரமாக  கட்டிவிடுவர். அவற்றை பட்டிக்கு வெளியே கொழுக்கம்புகளுடன் நிற்கும் இளைஞர்கள் இழுத்துக்கொள்கின்றனர். 

வீரத்தை கூட்டும் குரவை கூத்து

அக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல  ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவர். ஆயர் கன்னியர் பாடும் பாடல் ஏறு தழுவப்போகும் தன் காதலனை உசுப்புவது போலவோ, ஏறு த ழுவி வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.

வீரத்தின் அடையாளம்

இயற்கை இன்னல்கள், கஷ்ட, நஷ்டங்கள், வறுமை, செழிப்பு என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழ வனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கே பறை சாற்றும் மகத்தான திருநாள் தைப்பொங்கல். தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கரும்பு, மஞ்சள் போன்றவைகளைகளுடன் புத்தரிசியில் சர்க்கரை பொங்கல் வைத்து இயற்கையுடன் சூரியனையும் வழிபடுவது வழக்கம். தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழர்களின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டும் முரட்டுக்காளையை  அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு,  வடமாடு விரட்டு போன்ற வீரவிளையாட்டுக்கள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத் தப்படுகிறது. 

Tuesday, September 17, 2013

பாண்டியர்கள் யார்?

பாண்டியர்கள் யார்?

பாண்டியர்கள் யார்?
பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பாண்டியர் எனப் பெயர் பெற்றனர். பாண்டியர் என்ன குலம் என்பது தெளிவாக இருக்கும் பொது அதை மறைத்து ஒவ்வொரு ஜாதியினரும் நாங்கள் தான் பாண்டிய மன்னரின் பரம்பரை என்று புத்தகங்களை எழுதி நூலகத்தை நிரப்பிவிட்டார்கள். அதன்படியே 2001ல் நெல்லையிலிருந்து சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாடார்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. தன்னை பாண்டியன் பரம்பரை என்று சொல்வோர் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால் கோனார்கள் பாண்டியன் சகோதரியான யாதிரையை மணமுடித்து இப்பாண்டிய நாட்டை சீதனமாகக் கொடுத்ததாக இதிகாசம் கூறுகிறது. யாதிரையின் வம்சாவழியினரே பாண்டியர்கள். யாதிரையின்  கதைக்கு முன்பாகவே குமரி கண்டத்தைக் கடல்கோள் அழித்து விட்டது. அப்பொழுது ஒரு சில யாதவர்கள் வட இந்தியாவிற்கு சென்று குடியேறினார்கள். பின் ஆரிய படையெடுப்பின் காரணமாக மறுபடியும் இந்த யாதவர்கள் தெற்கே தள்ளப்படுகின்றனர் என்றும் இதிகாசம் சொல்கிறது. இவர்களின் ஒரு பிரிவினரே பாண்டியர்கள்


முல்லை நிலத்து ஆயர் பாண்டியர்களோடு பிறந்த குடியினர் எனக் கலித்தொகைக் கூறுகின்றது.

"மலிதிரை யூர்ந்து தன் மண்கடல்  வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்
புலியோடு வில் நீக்கிப்  புகழ்  பொறித்த கிளர்க்கெண்டை
வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்
தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்".

ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி 

கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது  தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது "மீன்" கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர் இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும். மேலும் ஒரு வரலாற்று ஆசிரியரின் கூற்றையும் கவனிக்க வேண்டும். மங்கையன் அல்லது ஆதியதுனே என்ற யாதவனே பாண்டிய அரசனை உருவாக்கியவன் என வில்லியம் கோயிலோ என்பவர் கூறுகிறார்.

"The pandiyas built their pedigree much later,for an inscription of A.D. 1141 one of first of it's kind-traces their origin to mangayan or adiyadudevan of the yadava branch from whom sprang pandiyas".
                                                                                                                          
                                                                                        -Prof William Coehlo

மற்றோர் இலக்கியச் சான்று

ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் யாதவர்கள் என்பதனை விளக்குகிறார்.

"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
 வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
 பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்".

பாட்டு விளக்கம்:

பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு  வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். எனவே மன்னனான பிறகும் குட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.

கோ- என்றால் மன்னன், பசு என்ற இரு பொருள் உண்டு. இந்த இரண்டு பொருளிலும் இவர் பயன்படுத்துகிறார்.

மற்றோர் சரித்திர அதாரம் கூறுகின்றது

தமிழகத்தின் மீது சூறாவளி தாக்குதல்கள் நடத்தி வேங்கடம் முதல்  குமரி  வரை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த களப்பிரர் என்பவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உண்டு.

4-ம் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டு வரை தமிழகம் முழுவதும் தடுமாறச் செய்த இக்களப்பிரர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது களப்பிரரது கொடுமைகளிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை  கடுங்கோன் பாண்டியருக்கு உரியது. அவர் 590-620ல் அரசாண்டார். அவர் காலம் பாண்டியர் புத்துயிர் பெற்றனர்.

"All historiyans are agreed on the point that roughly.between the IV and VI centuries the new race of kalabhras took hold of the south throwing all the erstwhile rulership of the region into darkness and disrepute, so that when the velkudi grant of the later day pandya refers to the defeat effected by kadun kone over this race usurpers"

                                                                                                -nilakanta sasthiri.

அனால் கோனார்கள் பாண்டிய மன்னர்களின் வழி வந்தவர்கள் என்று இதுவரையும் சொல்லி கொண்டதுமில்லை. இப்படி தற்பெருமை கொள்வது யாதவர்களின் வழக்கமில்லை இபொழுது அவர்கள் தங்கள் வரலாற்றை மறந்து கொண்டு இருப்பதால் சொல்லி தான் அக வேண்டும். பாண்டிய மன்னர்கள் யாதவ குலத்தவர் இது தான் உண்மை வரலாறு.


நன்றி,

சுபாஷ் சேர்வை யாதவ்.


Monday, September 9, 2013

தமிழக அரசியலில் யாதவ பிரபலங்கள்

சட்டநாத கரையாலர் முன்னாள் சபாநாயகர்-(காங்கிரஸ்)


முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர்  ராதாகிருஷ்ணன் பிள்ளை,-(காங்கிரஸ்)


கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர்                 தலைவர் தமிழ்நாடு யாதவ மகாசபை

மாவீரன் C.குருசாமி யாதவ் முன்னாள் தலைவர் சங்கரன்கோவில் ஒன்றியம்


முன்னாள் அமைச்சர் திரு கண்ணப்பன் (or) ராஜகண்ணப்பன்(மக்கள் தமிழ் தேசம் கட்சி நிறுவனர்),(அ தி மு க)

S.பாலகிருஷ்ணன் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்(1996-2001),முன்னாள் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி-(காங்கிரஸ்)

முன்னாள் அமைச்சர் திரு.தமிழ்குடிமகன்,(தி மு க)

முன்னாள் அமைச்சர் திரு.பெரியகருப்பன்,(தி மு க)

திரு தேவநாதன் யாதவ் யாதவமகாசபை தேசிய தலைவர்

முன்னாள் அமைச்சர் திருமதி.கோகுல இந்திரா(அ தி மு க)


தட்டச்சு வேலை
      தாமோதரன் யாதவ்
அனுப்பியவர்
தாமோதரன் யாதவ்,திருவண்ணாமலை

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar