ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Tuesday, June 9, 2015
Friday, June 5, 2015
காரைக்குடி சுபலட்சுமி மண்டபம் உரிமையாளர் "சுப்பையா யாதவ் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழா"
காரைக்குடி சுபலட்சுமி மண்டபம் உரிமையாளர் உழைப்பால் உயர்ந்த உத்தமர் அய்யா "சுப்பையா யாதவ் மணிமண்டபம் மற்றும் சிலையை" சுப்ரீம் கோர்ட் நீதிபதி "அய்யா AR லக்ஷ்மணன்" அவர்கள் தொடங்கி வைத்தார்கள், அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் தலைமையில் நடைபெற்றது, அய்யா மலேசிய பாண்டியன் குத்துவிளக்கு ஏற்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் 5000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நினைவில் வாழும் "சுப்பையா யாதவ்" அவர்களின் புதல்வர் "சந்திர மோகன்" மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிக சிறப்பாக செய்தனர். நிகழ்ச்சிக்கு தேவையான பணிகளை "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" செய்து கொடுத்தது என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறோம்.
நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை சிறப்பு உணவு வழங்கப்பட்டது, கோடை வெயில் தெரியாதவாறு அரங்கம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்சிகளில் இருந்தும் அனைத்து மதம் மற்றும் சாதியினரை சேர்ந்த பெரியவர்களும், ஏரணிக்கோட்டை கிராமத்தினர் மற்றும் அதனை சுற்றியிருக்கூடிய கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்து நண்பர்களும் உறவினர்களும் வருகை தந்தனர்.
நாகரிகமாக வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் தங்களுடைய அடையாளங்களை தமக்கே தெரியாமல் தொலைத்து செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் நம் சகோதரர் சந்திர மோகன் அவர்கள் தன் தந்தைக்கு அவர் கட்டிய மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழா நிகழ்வு நம் இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை அதற்கு காரணமான சகோதரர் "சந்திர மோகன்" அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம் !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம் - காரைக்குடி மற்றும் மதுரை
Wednesday, May 27, 2015
29ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:மும்பை யாதவ மகா சபை .மற்றும்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.
முன்னேற்றகழகமும ்,மும்பை யாதவ மகா சபையும் , வரும் 29ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், போரட்டம் ,நெல்லை இரயில் நிலையம் முன்பாக 29 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது ஏனென்றால் நமது சமுதாயத்தை சேர்ந்த ரயில்வேதுறையில் பணிபுரிந்த
சங்கரபாண்டி என்பவர் மேலதிகாரியின் சூழ்ச்சியின் சதியால் மின்சாரம்
பாய்த்து படுகொலைசெய்யப்ப ட்டார் .இன்னும் நாம் தூங்கிகிடந்த நிலமை
போதும் பொங்கிஎழுவோம் இதற்க்கு நீதி கிடைக்க வேண்டும். எத்தனை
குருசாமி யாதவ் அய்யப்பன் யாதவ் நயினார் யாதவை, நாம் இழந்தது
போதும் இனியும் இழக்கக்கூடாது, நெல்லையில்அனைத் து ஊர்களில்
இருந்தும் திரளான இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இன ஒற்றுமையை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தில ் கலந்துகொள்ளுங்க ள்,
மும்பை யாதவ மகாசபை
.மற்றும்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.
Tuesday, May 26, 2015
Monday, May 25, 2015
60-வது ஆண்டு "கேரளா யாதவ சபை - வைரவிழா
60-வது ஆண்டு "கேரளா யாதவ சபை - வைரவிழா" நிகழ்ச்சியை அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள் அந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்ப்பாக சொ.நீலகண்டன், பா.வரதராஜன், ப.கந்தவேலு, பெரி.கபிலன் மற்றும் இரா.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
மூன்று நாள் இடைவிடா மழையிலும் வைரவிழாவில் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மற்றும் நம் சமூக உறவுகள் 5000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். வைரவிழாவை இளைஞர்கள் மிகச்சிறப்பாக செய்து முடித்தார்கள்.
நன்றி !!!
Saturday, May 16, 2015
தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு யாதவ மகாசபை நிதி உதவி
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தனது சொந்த நிதியிலிருந்து ஒருலட்சத்து அறுபத்துஓராயிரத்தை (1,61,000) இன்று நெல்லையில் பொன்னையா யாதவ் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார் .திருநெல்வேலி மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் .
Wednesday, April 1, 2015
குழலால் ஈசனை மயக்கிய இடையர்
ஆனாய நாயனார்
(குருபூஜை நட்சத்திரம்: கார்த்திகை – ஹஸ்தம் )
(நவ. 19)
(நவ. 19)
சோழவளநாட்டு மேன்மழநாட்டில் திருமங்கலம் என்ற மூதூரில் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர்.
.
பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற் காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்து வருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம் பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்வர். தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானாரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.
.
இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள் தமது குடுமியிற் கண்ணி செருகி, கண்டோர் மனம் கவர திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும் ஆவினமும் சூழப் பசுக்களைக் காக்கச் சென்றார்.
.
சென்ற அவர் அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார். அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டுருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றவே, அதனை எதிர்நோக்கி நின்று உருகினார். ஒன்றுபட்ட சிந்தையில் ஊன்றிய அன்பு தம்மை உடையவர்பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று. அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத இசைக்குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா உயிர்களும் எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார்.
.
நூல் விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழல் தனித் துறையில், ஆனாயார் மணி அதரம் பொருந்தவைத்து, ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட வேய்ங்குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார். அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.
.
மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்து சேர்ந்தன. ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர்.
.
நலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகி நயத்தலினால், உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின. காற்றும் அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின.
.
ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர்.
.
அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார்.
.
“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் பாடுகிறார் சுந்தரர். இசையால் இறைவனை அடைய முடியும் என்பதற்கான சான்று நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் ஆனாய நாயனார்.