ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Thursday, July 9, 2015
தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்
இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் சமுதாய பணியில்
சதீஸ் யாதவ் பி.ஏ
தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பு
மராட்டிய மாநிலத்தில் மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
சார்பா தேசிய தலைவர் அய்யா டாக்டர் D.தேவநாதன் யாதவ் அவர்களின் ஆணைக்கனங்க . மாவீரன் அழகுமுத்து கோன்
குருபூஜை விழா . தானே மாவட்டம் கல்யாணில் நடைபெற உள்ளது நமது சொந்தபந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அய்யாவின் குருபூஜை விழாவை சிறப்பியுங்கள் . இவ்விழாவில் .
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பாக
10 ஆம் வகுப்பு . 11. ஆம் வகுப்பு 12 ஆம் . வகுப்புகளில் தேர்ச்சி பெற்று முதலாம் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க படுகிறது மற்றும் பாராட்டு சான்றிதழ் பதக்கம் போன்றவைம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க படுகின்றன அனைவரும் வாரீர். வாரீர்
தொடர்புகள் .
கல்யாண் . 9819532767 ... 9819140948.....
அந்தேரி 9619555956.
தாராவி .9930726796 ..
செம்பூர் 9322323598.
மேற்கு ரயில்வே. 9224522500...
நவி மும்பை 9833224481 & 8286204737 .
இவண் என்றும் மக்கள் பணியில் : இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
முதல் சுதந்திர போராட்ட விடுதலை வீரன் அழகு முத்துகோன் குருபூஜை விழா:இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் தலைமையில் முதல் சுதந்திர போராட்ட விடுதலை வீரன் அழகு முத்துகோன்256 வது குருபூஜை விழா !
ஜூலை 11 அன்று காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள மாவீரன் அழகுமுத்து கோன் திருவுருவ சிலைக்கு டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் மரியாதை செலுத்துகிறார் .
பிற்பகல் 12.30 மணிக்கு கட்டாளங்குளம் மாவீரன் மணிமண்டபத்தில் வீரன் அழகு முத்துகோன் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
மாலை 6 மணிக்கு பாளை தெற்குபஜாரில் உள்ள வீரன் அழகு முத்துகோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் .
அனைவரும் வருக !
அன்புடன் ,
ர குணசீலன்
துணைத்தலைவர்
9841157660
வீரன் அழகுமுத்துகோன் 258வது குருபூஜை:கோகுல மக்கள் கட்சி
சென்னை: வீரன் அழகுமுத்துகோன் 258வது குருபூஜையை முன்னிட்டு, எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு கோகுல மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.வீரன் அழகுமுத்துகோனின் 258வது குருபூஜையை முன்னிட்டு நாளை மறுதினம் கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், சென்னை எழும்பூரில் உள்ள அவருடைய சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். விழாவில் பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு யாதவ மகா சபை பொதுச்செயலாளர் என்.சுப்பிரமணியன், கொங்கு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜன், நடிகர் கே.ராஜன், தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி தலைவர் ராஜ்குமார், கோகுல மக்கள் கட்சி நிர்வாகிகள், எல்.வி.ஆதவன், பி.சுரேந்திரபாபு, கோதண்டராமன், மயிலை எம்.கிருஷ்ணன், சைதை மனோகரன், வடசென்னை குணசேகரன், ஆலந்தூர் ராஜேந்திரன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்
Wednesday, July 8, 2015
Scholarship for New Entrants -2015 - IIT's IIM's and M.S./ M.D
It is a pleasure to inform all that "Shri Krishna Charitable Trust" under the aegis of All India Yadav Mahasabha has started eleven Scholarships each of Rs. 11,000 p.a. for those students who are studying in IIT's, IIM's and M.S./M.D. all over India.
Applicants for scholarship should apply with admission card as proof of admission along with application and photographs duly attested and forwarded by their Dean/Director. Readers of 'Yadavon Ki Awaz' are requested to propagate this scheme in our community.
The Scholarships are strictly on merit and first-come-first-serve basis. Students may apply to the President of the Mahasabha: Shri. Udai Pratap Singh, Shri Krishna Bhawan, Sec.-IV, Vaishali, Ghaziabad (U.P).
Source:http://yadavsmovement.in/
Tuesday, July 7, 2015
Civil services Examination - 2014
Vandana Rao attained this 4th rank without help of any coaching From a rural family background She focussed so much so that stop going outside home.
List of others who passed and their rank inCivil services Examinaion 2014
012187 - Abhishek Yadav - Rank - 699
006898- Amit Yadav - Rank - 1014
353221 - Anshu Yadav - Rank - 947
028104 - Anjali Yadav - Rank - 443
603167 - Arnika Yadav - Rank - 855
004366 - Alok Yadav - Rank - 347
292354 - Atul Yadav - Rank - 974
013454 - Deepak Yadav - Rank - 569
376348 - Deepak Yadav - Rank - 800
429634 - G Vijaya Krishna Yadav - Rank - 666
730054 - Hemant Yadav - Rank - 1041
027790 - Inderjeet Yadav - Rank - 242
126927 - Jitendra Kumar Yadav - Rank - 349
442234 - Kavitha Yadav - Rank - 663
168820 - Khushaal Yadav - Rank - 28
007183 - Mridul Yadav - Rank - 831
715686 - Nisheeth Yadav - Rank - 927
096742 - Neha Yadav - Rank - 499
078449 - Ramesh Yadav - Rank - 1227
196103 - Rahul Yadav - Rank - 1043
520089 - Ravi Prakash Yadav - Rank - 1017
471197 - Rahul Yadav - Rank - 969
028264 - Rohit Yadav - Rank - 780
021312 - Rohit Yadav - Rank - 592
629730 - Ramniwas Yadav - Rank - 394
241336 - Saurabh Yadav - Rank - 826
513184 - Sudhanshu Yadav - Rank - 1058
458285 - Saurabh SumanYadav - Rank - 1068
804250 - Vikas Yadav - Rank - 1052
456021 - Vinod Kumar Yadav - Rank - 1015
284735 - Yadav Ravikanth Vinayak - Rank - 1160
Heartly congraulations by president Guru Ji - Shri. Uday Pratap Singh and Secretary General Shri. Satya Prakash Singh.
வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபம் புதுப்பொலிவு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் மடம் போல் காட்சியளிக்கும் வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்திற்கு புதுப்பொலிவு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபம் கோவில்பட்டியிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கட்டாலங்குளத்தில் 08-12-2004 அன்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது.
கோவில்பட்டியிலிருந்து வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபம் செல்லும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மேலும் இந்த சாலையில் மின்விளக்குகள் ஏதும் இல்லை. கட்டாலங்குளத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் முழு உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த மண்டபத்தின் உள்ளே சென்றால் மடம் போல் காட்சிளிக்கிறது. நினைவு மண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்புகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய உபகரணங்கள் இடம்பெற வேண்டும்.
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் படங்கள் அமைக்கப்பட்டது போன்று கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்திலும் வரலாற்றுச் செய்திகளை படங்களாக வரைந்து பார்வைக்கு வைக்க வேண்டும்.
மேலும் அவர் வைத்திருந்த வாள், திருவிளக்கு, வெண்சாமக்கொடை போன்ற அன்றைய காலத்துப் பொருள்களை மண்டபத்தினுள் காட்சிக்கு வைக்கலாம்.
அல்லது அவற்றின் புகைப்படங்களை அங்கு வைக்கலாம். நினைவு மண்டபத்தினைப் பார்க்க சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில், கோவில்பட்டியிலிருந்து கட்டாலங்குளத்திற்கு சென்று வர பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், மண்டபம் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும். மண்டபத்திற்கு மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி அழகு சேர்க்க வேண்டும்.
மேலும், மண்டபத்தின் முன்பகுதியில் காட்சிப் பொருளாக இருக்கும் நீரூற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் அவர் நடத்திய போரை விளக்கி சித்திரங்கள், படங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும்.