"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. (Madhavan Yadav)

யாதவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
யாதவராய் நீங்கள் ஒன்று இணையும் போது இந்தியா முழுவதும் உங்களுக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு வேறு எந்த சமூகத்திற்கும் கிடைக்காது. உங்கள் ஒற்றுமையை பிரிக்கவே சில சிறிய கட்சிகள் முயற்சி செய்து கொண்டு உள்ளது. நேற்று கடவுள் இல்லை என்றவன் இன்று காவடி எடுக்கிறான் அவனை பற்றி சிந்தனை நமக்கு தேவை இல்லை..

நமக்கு தேவை ஒற்றுமையே தவிர சலுகை இல்லை. உங்கள் ஒற்றுமையின் மூலம் உங்கள் வாழ்வாதாரம் பெருக வேண்டும்.. அதாவது ஒவ்வொரு யாதவர்களும் தொழில் மூலம் இணையவேண்டும். நீங்கள் செய்யும் தொழில் மற்றொரு யாதவருக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.


அதாவது சிறிய தொழில் செய்யும் யாதவரும் பெரிய தொழில் செய்யும் யாதவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் சொந்த இனத்திற்குள் தொழில் வளம்பெருகும்.

இன்றைய தேதியில் பணமே ஒரு சமூதாய வளர்ச்சியை தீர்மானிகிறது. நீ முன்னேற உன் உழைப்பையும் ஒற்றுமையையும் பயன்படுத்து.. சலுகையை எதிர்பார்த்து சோம்பேறி ஆகாதே.. மாறாக BC இருந்து MBC யில் சேர்க்க போராடுவதாக கூறி உன் நேரத்தை வீணாக்காதே.. தாழ்த்த ஜாதியில் இருந்து BC க்கு போராடி பெற்ற ஒரு ஜாதி உள்ளது. அவர்கள் ஒற்றுமையால் சிவகாசியில் எந்த தொழிலும் அவர்கள் தான் முன்னிலை.. உழைப்பை நம்பியதால் அந்த சமூகமே முன்னேறியது. அவர்கள் எங்கே நாம் எங்கே..

ஒரு அரசியல் கட்சியாக உன் போராட்டம் இருந்தால் உன் தலைவன் மட்டுமே முன்னேறுவார்.. ஆனால் தொழில் செய்பவர்களாக நீங்கள் ஒன்று இணைந்தால் ஒட்டுமொத்த சமூகமே முன்னேறும்.. கடை கோடி யாதவனும் பயன் அடைய யாதவ தொழிலதிபர்களே ஒன்றிணைவீர். எந்த தொழிலாக இருந்தாலும் அது சம்பந்தமாக தொழில் புரியும் மற்றொரு யாதவருடன் ஒன்று இணைந்தால் முன்னேற போவது நம் சமூகமே..

உழைப்பை நம்பி செல்லும் எந்த சமூகமும் தோற்காது.. நாளைய பாரதத்தை வலிமையானதாக மாற்ற யாதவர்களே ஒன்று இணைந்து உழைப்பீர்..

வாழ்க பாரதம் வளர்க யாதவம்..

இப்படிக்கு
Madhavan Yadav

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar