பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆண்ட துவாரைகயும் சுனாமி வந்து கபளீகரம் செய்து விட்டது இதைத்
தெரிவிப்பவர்கள் இந்திய தேசிய கடலாராய்ச்சிக்கழகம் இவர்கள் பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு பின் ஆராய்ச்சியின் குழுவின் தலைவர் எஸ் ஆர் ராவ் என்வர் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் "The lost city of dwaraka " இதில் மஹாபாரதப்போரும் துவாரகை இருந்ததையும்
உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது
துவாரைகயின் நிர்மாணம் மிகப் பிரமிப்பைக் கொடுக்கிறது மிகவும் திட்டமிட்டுக் கட்டய நகரமாம் கோமதி நதி ஓடுகிறது ..துவாரகைக்கு த்வாரமதி, த்வாரவதி என்றப் பெயர்களும்
இருந்தனவாம்
துவாரகை கட்டியது எப்போது என்றால் கம்சனை வதைத்ப்பிறகு கிருஷ்ணனும் பலராமனும்
ஸ்ரீ உக்ரசேனனை அரசனாக்கினார்கள் இதனால் கமசனின் மாமனார் ஜராசந்தன் மிகுந்தக்
கோபம் கொண்டு பலமுறை மதுராவின் மேல் போர் தொடுத்தார் ,ஆரம்பத்தில் யாதவ சேனை
தெம்பாக போரிட்டனர் ஆனல் பலமுறை அடுதடுத்து போர் வரும் போது பலம் குன்றினர்
இனி போர் செய்து பலனில்லல என்று ஸ்ரீகிருஷ்ணர் மீதி இருக்கும் யாதவர்களை அழைத்துக்
கொண்டு போனார் மேற்குக்கடறகரைப் பக்கம் 12 யோஜனை நிலத்தைக் கடல் அரசனிடமிருந்துப் பெற்றார் இதனால் கடல் 12 யோஜனைதூரம் உள் வாங்கியது இந்த
இடத்தில் தான் துவாரகா நிர்மாணம் ஆயிற்று மஹாபாரத யுத்தம் பின் 36 ஆண்டுகள் கழித்து சுனாமி போல் துவாரகையை கடல் மூடியது இது நடக்க்ப்போவதை அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை ஒரு உயரமான மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்றார் அதன் பெயர் பிரபாஸ் ,,இப்போது சோம்னாத் ,,அங்கு யாதவர்கள் ஒற்றுமை இல்லாமல் தனக்குத்தானே சண்டை இட்டு மாய்ந்துப் போனார்கள் கிருஷ்ணரும் வேடன் எய்த அம்பினால் அவதாரத்தை முடித்தார்
ஹைதரபாத்தின் பொருட்காட்சிசாலையில் {பிர்லா மியூசியம் }துவாரகாவின் மாடல் இருக்கிறது மத்தியபிரதேசத்திலும் விதிஷா என்ற இடத்தில் பெட்ஸா என்ற பகுதியில்
மிகப் பழையக்கோயில் தென்பட்டுள்ளது அதில் கிடைத்த விக்கிரகங்கள் ஸ்ரீ கிருஷ்ணர்
பலராமர் ,,கண்ணனின் மகன் பிரத்யும்னன் பேரன் அநிருத்தா ,என்று கண்டுப்பிடித்துள்ளார்கள்
கடல் கீழே முழுகிய துவாரகாவைக் காண நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஏற்பாடு நட்க்கிறதாம்
அது நிறைவேறினால் கடலுக்கடியில் இருக்கும் பொருட்க்காட்சியை நாம் காணமுடியும்
கிருஷணர் ஆண்ட இடமாயிற்றே,,,