ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Tuesday, July 29, 2014
கோகுலம் அறக்கட்டளை முதலாம் ஆண்டுவிழா பரிசு போட்டி
கோகுலம் அறக்ட்டளை முதலாம் ஆண்டுவிழா வருகின்ற கிருஷ்ணா ஜெயந்தி அன்று நடைபெறுகிறது
அது சமயம் யாதவ இளைஞர் களுக்கு மைபைல் பரிசு வழக்கப்படுகிறது குலுக்கல் நடைபெறும்
இடம் சிங்கப்பூர் நடத்துபவர் இசக்கிமுத்து யாதவ் இவ்வாறு கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர்
திரு ஜெ முர்த்தி யாதவ் கூறினார்
அனைத்து யாதவ இளைஞர்கள் தங்களது பெயர் மைபல் நம்பர் கோகுலம் அறக்கட்டளை யில் பதிவு பண்னவும்
Click Here to Register
இப்படிக்கு
ஜெ முர்த்தி யாதவ்
கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர்
அனைத்து யாதவ இளைஞர்கள் தங்களது பெயர் மைபல் நம்பர் கோகுலம் அறக்கட்டளை யில் பதிவு பண்னவும்
Click Here to Register
இப்படிக்கு
ஜெ முர்த்தி யாதவ்
கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர்
Monday, July 28, 2014
ஆயர்களின் பிரிவுகள்
ஆயர்களின் பிரிவுகள் மூன்று வகைப்படும். அவை
1.பசுவினத்து ஆயர் (கோட்டினத்து
ஆயர்)
2.ஆட்டினத்து ஆயர் (புல்லினத்து ஆயர்)
3.கோவினத்து ஆயர்
பசுவினத்து ஆயர்
இவற்றில் பசுவினத்து ஆயர்கள் பசுக்கூட்டங்களை மிகுதியாக உடையவர்களாக
இருந்துள்ளனர். அவர்கள் பசுக்கள் மூலம் கிடைக்கும் பால், வெண்ணெய் போன்றவற்றை
விற்று வாழ்ந்து வந்துள்ளனர். இதனை,
“............................................................................தொடுதரத்
துன்னி தந்தாங்கே
நகைகுறித்து எம்மைத்
திளைத்தற்கு எளிய
மாக்கண்டை அளைக்கு எளியாள்
வெண்ணைக்கும் அன்னள்
எனக் கொண்டாய்”
(
முல்லைக்கலி.11௦.3-6)
என்ற முல்லைக்கலியின் மூலம் அறியலாம். பசுவினத்து ஆயர் ‘நல்லினத்து
ஆயர்’ எனவும் வழக்கப்பெற்றனர். இதனை
“தொல் இசை நட்ட
இசையோடு தோன்றிய
நல் இனத்து
ஆயர்” (முல்லைக்கலி 4.5-6)
என்ற முல்லைக்கலியின் பாடல்வரிகள் சுட்டுகின்றன.
இவ்ஆயர்களின் தலையாய
பணி ஆநிரைகளை மேய்த்தலும் பால் கறத்தலும் ஆகும். கறந்த பாலினைத் தயிராகவும்,
மோராகவும் பக்கவப்படுத்தி அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று விற்று வருதல் ஆயர்குலப் பெண்களான ஆய்ச்சியரின் வேலையாகக் கருதப்பட்டது.
இதனை இக்குலப் பெண்கள் மனமுவந்து செய்து வந்தனர் என்பதை,
“அஃது அவலம் அன்று
மன்
ஆயர் எமர் ஆனால்,
ஆயர்தியேம் யாம்” (முல்லைக்கலி 8.8-9)
என்ற வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆட்டினத்து ஆயர்:
ஆட்டினத்து ஆயர்கள்
ஆடு மேய்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இதனை,
“தளரியால் என்னறிதல்
வேண்டின் பகையஞ்சாப்
புல்லினத் தாயர்
மகனேன் மற்றியான்” (முல்லைக்கலி.113.6-7)
என்ற முல்லைக்கலியின் வரிகள் உறுதிபடுத்துகின்றன. இவர்களைப்
‘புல்லினத்து ஆயர் என்றும் வழங்குவர். இந்த மாட்டினத்து ஆயர், ஆட்டினத்து ஆயர்
ஆகிய இருவரில் மாட்டினத்து ஆயர்களே உயர்வானவர்களாக மதிக்கப்பட்டுள்ளனர். இதனை,
“புல்லினத் தாயனை
நீயாயிற் குடஞ்சுட்டு
நல்லினத் தாயர்
எமர்” (முல்லைக்கலி 113.6-7)
என்ற வரிகள்மூலம் உறுதிபடுத்த முடிகின்றது.
ஆயர் எனப்படுவர்
தம்குலத்தால் ஒருவரேயெனினும் அவர்கள் வளர்த்துவந்த உயிரினங்களின்பொருட்டு
மேற்காணும் பெயர்களைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
கோவினத்து ஆயர்
கோவினத்து ஆயர்கள் உழவுக்குப் பயன்படும் எருதுகளை அதிகமாக
வைத்திருந்தனர். இக்கோவினத்து ஆயர்களும் பசுக்களை வளர்த்து அதன்மூலம் கிடைக்கும்
பால் முதலிய பொருட்களை விற்று தங்களின் தேவையைப்
பூர்த்தி செய்துகொண்டனர்.
நன்றி
யாதவர் தன்னுரிமை பணியகம்
(YES)
தட்டச்சு வேலை
மணி கோனார்
தமிழ்நாடு கோனார் பேரியக்கம்
கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்?
பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.
மேலும் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது. கோமாதா = கோ” என்றால் பசு, மாதா” என்றால் அன்னை. அன்னைக்கு நிகரான பயன்தருவதால் இந்துக்கள் கோமாதாவை போற்றி வணங்குகிறோம்.
பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது: உறக்கத்தை நிச்சயிப்பது மெலடோனின் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்படும்போது உறக்கம் பாதிக்கப்படும். மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது பசும்பால். தூக்கம் வராமல் சிரமப்பட்டவர்களுக்கு பசும்பால் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கறக்கப்படும் பசும்பாலில் மெலடோனின் அதிகம் இருக்கும். இதை பதப்படுத்தி பாதுகாக்கவும் முடியும். சத்துக்கள் அழியாது. சுகாதாரமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் மாடுகளின் பாலில் மெலடோனின் சத்து அதிகம் இருக்கும்.
இனியாவது இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துவார்களா ? பசுவதையை எதிர்த்து போராடுவார்களா ?
நன்றி
இந்து மதம் - உலக மக்களின் மதம்