Monday, July 28, 2014
Home »
» கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்?
கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்?
மேலும் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது. கோமாதா = கோ” என்றால் பசு, மாதா” என்றால் அன்னை. அன்னைக்கு நிகரான பயன்தருவதால் இந்துக்கள் கோமாதாவை போற்றி வணங்குகிறோம்.
பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது: உறக்கத்தை நிச்சயிப்பது மெலடோனின் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்படும்போது உறக்கம் பாதிக்கப்படும். மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது பசும்பால். தூக்கம் வராமல் சிரமப்பட்டவர்களுக்கு பசும்பால் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கறக்கப்படும் பசும்பாலில் மெலடோனின் அதிகம் இருக்கும். இதை பதப்படுத்தி பாதுகாக்கவும் முடியும். சத்துக்கள் அழியாது. சுகாதாரமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் மாடுகளின் பாலில் மெலடோனின் சத்து அதிகம் இருக்கும்.
இனியாவது இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துவார்களா ? பசுவதையை எதிர்த்து போராடுவார்களா ?
நன்றி
இந்து மதம் - உலக மக்களின் மதம்
0 comments:
Post a Comment