"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Friday, July 11, 2014

முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் யாதவ மகாசபை தேசிய தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ்



முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று யாதவ மகாசபை தேசிய தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கேட்டு கொண்டுள்ளார். 1728 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே உள்ள கட்டாளங்குளத்தில் பிறந்த வீரன் அழகு முத்துகோன் மதுரையை ஆண்ட முதலாம் கிருஷ்ணப்பா நாய்க்கர் குமரார் பெரிய வீரப்ப நாய்க்கரிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். வெள்ளையர்களின் கைகூலியாக செயல்பட்ட யூசுப்கான் சாகிக்கை எதிர்த்து பெத்தநாயக்கனுர் கோட்டையில் போரிட்டார். இதில் வெள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட அழகு முத்து கோன் மற்றும் 6 தளபதிகள் பீரங்கி குழாய் முனையில் வைத்து சுடப்பட்டனர். இறுதி வரை கப்பங்கட்ட மறுத்து போரிட்டு உயிர் நீத்த வீரன் அழகு முத்து கோனின் 255 வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள வீரன் அழகு முத்து கோனின் திருஉருவ சிலைக்கு யாதவ மகாசபை தேசிய தலைவரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிருவண தலைவருமான டாக்டர் தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் வரலாற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் அரசு சேர்க்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். இதைதொடர்ந்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் அழகு முத்து கோனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 அப்போது பேசிய அவர் வீரன் அழகு முத்து கோனின் வரலாறு ஆசியர்களுக்கே தெரியவில்லை என்றும் எனவே இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் யாதவ மகாசபை தேசிய அமைப்பு செயலாளர் குணசீலன் மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமாதாஸ், 
வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர் அழகு முத்து வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உடன் இருந்தார்.

Related Posts:

  • பூவளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க முப்பெரும் விழா இன்று பரமக்குடி அருகில் உள்ள பூவளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க முப்பெரும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சியல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இந்த விழாவை மிக சிறப்பா… Read More
  • 2,300 ஆண்டுகளுக்கு முன்பே இயங்கிய இரும்புத் தொழிற்சாலைகள்!- கோவை இடையர்பாளையத்தில் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு கோவை மாவட்டம் இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி கிராமங்களில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு சுடுமண் ஊதுகுழல்கள், பெரிய அளவிலான இரும்பு கசடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன… Read More
  • மகாபாரதம் மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும்… Read More
  • ஐயம்பெருமாள் கோனார்-கோனார் தமிழ் உரை               திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஐயம்பெருமாள்  கோனார் பள்ளிப் பாடநூல்களில் தமிழ் பாடநூல்களுக்கான கையேடுகளை உருவாக்கி வெளியிட்டு வந்தார்.… Read More
  • ஆனந்தரங்கர் பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு அரசியல் ஞானியை ஈன்று உதவியதும் யாதவர்  சமூகம்தான். வரலாறு எழுதுவது என்பது வேறு. வரலாறாக வாழ்வது என்பது வேறு. இந்த இரண்டையுமே செய்தவர்… Read More

1 comment:

  1. முதல் விடுதலை போராட்ட மாவீரன் அழகுமுத்து கோன் பற்றிய செய்தியை படிக்கும் போது யாதவனாக தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன்

    ReplyDelete

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar