வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவருடைய திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
Friday, July 11, 2014
Home »
» வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்தார்
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்தார்
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவருடைய திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.முத்து முன்னிலை வகித்தார். வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு ஆட்சியர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.84,000/- உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு தேய்ப்பு பெட்டியும், 6 நபர்களுக்கு தையல் இயந்திரமும் ஆட்சியர் வழங்கினார். பின்னர் ஆட்சியர் பேசும் போது தெரிவித்தாவது: தென் இந்தியாவில் தூத்துக்குடி மாவட்டம், வீரன் அழகுமுத்துக்கோன், மகாகவி பாரதியார், அமுதகவி உமறுப்புலவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., வீரன் சுந்தரலிங்கம், வீரன் வெள்ளையத்தேவன், வாஞ்சிநாதன் போன்ற வரலாற்று தலைவர்களை அதிகமாக கொண்டுள்ளது.
சுதந்திரப்போருக்கு முதல் வித்திட்ட மாமனிதர் வீரன் அழகுமுத்துக்கோன் ஆவார். அவருடைய சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்களால் 2004 ஆண்டு அவர் பிறந்த கட்டாலங்குளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டு ரூ35 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.
மேலும், வீரன் அழகுமுத்துக்கோன் பெருமை சேர்க்கும் விதமாக ஆண்டுதோறும் அரசு விழா நடத்த உத்தரவிட்டு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. இளைய சமூதாயத்தினர் கடந்த கால வீர வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு சுதந்திரப்போராட்ட வீரர்களில் வாழ்க்கை வரலாறுகளை தெரிந்து கொள்கின்ற விழிப்புணர்வு வேண்டும். இங்கு சமூதாய மக்கள் பல்வேறு கோரிக்கைகளை கொடுத்து உள்ளனர்.
அதை தமிழக முதலமைச்சரிடம் கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும். தற்போது ரூ.1.50 லட்சம் செலவில் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் முன்புற தோரணையில் சீரமைக்கப்படவுள்ளது. வருகின்ற சுற்றுலாப் பயனிகளுக்கு குடிநீர் வழங்க அமைக்க தேவையான நடவடிக்கையை செய்தி துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்று பேசினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் வி.பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி வட்டாட்சியர் எஸ்முத்துராமலிங்கம், சமூகபாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வே.மோகன், மா.திருக்கம்மாள், கட்டலாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் சரோஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சி.குமார் நன்றியுரையாற்றினார். விழா ஏற்பாடுகளை செய்தித்துறை பணியாளர்கள் செய்து இருந்தனர்.
0 comments:
Post a Comment