Friday, July 4, 2014
Home »
» நம்மாழ்வார்
நம்மாழ்வார்
திருநெல்வேலிக்கருகில் உள்ள திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில் கி.பி.9ம் நூற்றாண்டில் பிரமாதி வருடம், வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். பிறந்து பல நாட்களுக்குப் பிறகும் கண்கள் மூடிய நிலையில் தாய்ப்பால் கூட அருந்தாமல் இருந்தார். ஆனால் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். வாயிலிருந்து ஒரு சொல் கூட வரவில்லை. சடகோபன் என்றும் அழைக்கப்பட்ட இக்குழந்தை இவ்வுலக ஆசா பாசங்களிலிருந்து விலகி இருந்தான். வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணனின் அன்புக்குப் பாத்திரமான விஷ்வக்ஸேனனின் அம்சமாக நம்மாழ்வார் கருதப்படுகிறார். திருவரங்கனே தன் அன்பன் சடகோபனை `நம்மாழ்வார்‘ என்று அழைத்ததாக வரலாறு கூறுகிறது.
இடைப்பட்ட 600 ஆண்டு காலத்தில் பல ஆழ்வார்களால் இயற்றப்பட்ட திவ்யப் ப்ரபந்தங்கள் வழக்கிலில்லாமல் போனதாகவும், திருநாத முனிகள் தம் தவமுயற்சியால் நம்மாழ்வாரை யோகநிலையில் தொடர்பு கொண்டு பாசுரங்களுக்குப் புத்துயிர் அளித்துப் பெருமாள் கோயில்களில் இசைக்க வைத்ததாகவும் கூறுவர்.
திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி, எனும் நான்கு தமிழ் மறைகளை வழங்கினார் நம்மாழ்வார். இவற்றில் வைணவத்தின் பொக்கிஷமாகக் கருதப்படும் திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் கொண்டது.
0 comments:
Post a Comment