"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, January 29, 2015

மறைக்கபடும் வரலாறு பகுதி 1

நம் சமுகம் அனைத்து அடையாளங்களையும் உரிமைகளையும் இழந்து வருகிறது  நம் சமுகத்தில்  இது பற்றி பேச ஆட்கள் இல்லை.

ஒரு நடிகன் நடிகை போட்டவை முக நூல்களில் போடவும் அல்லது தன் போட்டவை போடவும் தான்  இன்றைய இளம் இடையர்கள் முட்படுகிறார்கள்.
ஆனால் தன் சமுகத்தின் வரலாறு மறைக்கபடுவதை பற்றி ஒருவர் கூட பேச முயல்வதில்லை.

மறைக்கபடும் வரலாறு 1:

தமிழின மூத்த குடி யார் என்ற ஆய்வும், உண்மை பின்னணியும்



முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

மனித தோற்றம் பற்றிய கோட்பாடுகள்

 உலகில் மாந்தன் தோன்றினான் என்று சொல்லப்படும் முக்கிய தியரி
  •  'ஆப்பிரிக்காவில் தோன்றி பரவினான்'
  • 'லெமூரியாவில் (குமரித்தீவு) தோன்றி பரவினான்'

மனிதன் ஆப்பிக்காவில் தோன்றின்னான அல்லது குமரியில் தோன்றினான என்பது நமக்கு இப்போழுது தேவையில்லை.

M130 - என்பது உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணு. உலகளவில் மரபணு ஆராய்ச்சிகள் மிக தீவிரமாக நடந்துவரும் நிலையில்  பேராசிரியர் பச்சையப்பன் (மதுரை காமராஜர் பல்கலைகழகம்). மதுரை அருகிலுள்ள உசிலம்ப்பட்டி கல்லூரி மாணவர்களிடம் இந்த மரபணு சோதனையை மேற்கொண்டார். அந்த மரபணு ஆராய்ச்சியில் ஒரு உண்மையை பேராசிரியர் அறிந்தார். M130 எனும் முதல் மனிதன் மரபணு வகை ஆண்டித்தேவரின் மகன் விருமாண்டியின் மரபணுவோடு ஒத்திருந்தது. 

2010 ஜூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

இதில் என்ன வரலாறு மறைவு என்று நீங்கள் என்னிடம் கேக்கலாம்

அந்த ஆராய்ச்சியில் M130 மரபணு கோனார்களுக்கு உண்டு என்பதை
கண்டறிந்தார்கள் ஆனால் அறிவிக்கவில்லை.


ஒரு நபரை காட்டும் ஆராய்ச்சியாளர்கள் ஏன் M130 மரபணு  உள்ள யாதவரை காட்டவில்லை அவரது புகைபடத்தை வெளியிடவில்லை.

மதுரை சுற்றி உள்ள கள்ளர்களுக்கும் மதுரை யாதவர்களுக்கும் சௌரஷ்டினருக்கும் தான் அந்த M130 DNA உள்ளதாக பிச்சப்பன் தெரிவித்தார்.
ஆனால் நபர்களை அறிவிக்கவில்லை.

இதுவரை யாதவ சமுகத்தை சேர்ந்த ஒருவர் கூட ஒது பற்றி பேசியதாக தெரியவில்லை.இன்னும் திருந்தாத இடையர்குலம் என்று தான் திருந்த போகின்றதோ தெரியவில்லை.

நன்றி
பெ.தாமோதரன் கோனார் 
திருவண்ணாமலை


Monday, January 12, 2015

8 பேருக்கு வாழ்வளித்த கோவை மசக்கோனார்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்
கோவையை அடுத்த வெள்ளலூர் அருகேயுள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் மசக்கோனார்(வயது 75). இவர் கடந்த 8–ந் தேதி அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சாலை விபத்தில் சிக்கிய மசக்கோனாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஸ்ரீஅபிராமி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.


இருப்பினும் சிகிச்சை பலனின்றி மசக்கோனாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மசக்கோனாரின் குடும்பத்தினரிடம் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு ஸ்ரீஅபிராமி ஆஸ்பத்திரியின் டாக்டர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மறுநிமிடமே மசக்கோனாரின் உடல் உறுப்புகளை ஆபரேஷன் செய்து அகற்றும் பணி தொடங்கியது.

டாக்டர்கள் பெரியசாமி, பாலமுருகன், செந்தில்குமார், பாலகிருஷ்ணன் கொண்ட மருத்துவக் குழுவினர் மசக்கோனாரின் உடலில் இருந்து 2 சிறுநீரகம், கல்லீரல், இருதய வால்வு ஆகியவற்றை அகற்றினர்.

2 சிறுநீரகமும் ஸ்ரீஅபிராமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் 2 பேருக்கு வழங்கப்பட்டது.

இருதய வால்வை சென்னையில் உள்ள மெடிக்கல் மிஷன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு மசக்கோனாரின் இருதய வால்வுகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீஅபிராமி ஆஸ்பத்திரியில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் கிளம்பியது.

அந்த ஆம்புலன்ஸ் சென்னைக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் செல்லும் வகையில் வழியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே ஆம்புலன்ஸ் எந்திவித சிரமமும் இல்லாமல் 6 மணி நேரத்தில் சென்னை மெடிக்கல் மிஷன் ஆஸ்பத்திரியை அடைந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கண்ணன், வீரகுமார் மிகவும் சாமர்த்தியமாக ஆம்புலன்சை ஓட்டிச்சென்றனர்.

525 கி.மீ.தூரத்தை 6 மணி நேரத்தில் சென்னைக்கு ஓட்டிச்சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்களை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பாராட்டினார்கள்.

ஆம்புலன்ஸ் சென்னை மெடிக்கல் மிஷன் ஆஸ்பத்திரி சென்றடைந்ததும் மசக்கோனாரின் இருதய வால்வு 4 பேருக்கு பொருத்தப்பட்டது. மசக்கோனாரின் உடல் உறுப்பு தானம் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Sunday, January 11, 2015

அழகுமுத்துக் கோன் நாடகம்" - மதுரையில்

பெருமைமிகு உறவுகளுக்கு வணக்கம்

விரைவில் "அழகுமுத்துக் கோன் நாடகம்" - மதுரையில்

மதுரையில் முதல் விடுதலை வீரர் "அழகுமுத்துக் கோன்" அவர்களின் வரலாற்றை நாடகமாக எளிமையான முறையில் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு "யாதவர் பண்பாட்டு கழகம்" மற்றும் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" ஆகியவை இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது, அதற்காக குழு ஒன்றை உருவாக்கி அந்த குழுவினர்களின் கலந்துரையாடல் கூட்டம் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.


நன்றி !!!




திருப்பதி கோவிலில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் குடும்பத்துடன் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று காலை குடும்பத்துடன் சென்று வழிபட்டார்.

உத்தரபிரதேச முதல்– மந்திரி அகிலேஷ் யாதவ் தனது மனைவியும், எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் மற்றும் குழந்தையுடன் நேற்று திருமலை வந்தார். அவரை தேவஸ்தான இணை அதிகாரி ஸ்ரீனிவாசராவ் வரவேற்றார்.
இரவு ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் லட்டு பிரசாதம், தீர்த்த பிரசாதம் வழங்


கப்பட்டது.
முன்னதாக அகிலேஷ் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:–
நான் மாணவனாக இருந்த போது திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசித்தேன். அதன்பின் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. பின்னர் எனது தந்தை முதல்–மந்திரியாக இருந்த போது ஒருமுறை வந்தேன்.

இப்போது மீண்டும் வந்து உள்ளேன். நாடு முழுவதும் மக்கள் சுபிட்சமாக இருக்க ஏழுமலையானை வேண்டுகிறேன்.



Wednesday, January 7, 2015

சாதிவாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: யாதவர் எழுச்சி மாநாட்டில் தீர்மானம்



சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய யாதவர் எழுச்சி மண்டல மாநாடு (5/1/2015) மாநாடு நடந்தது.

தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் எம். கோபால கிருஷ்ணன் யாதவ் தலைமை தாங்கினார். பூவை பா.சேகர் வரவேற்றார்.


மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தமிழக மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிக குறைவாக இருந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக சிறுபான்மையினை மக்களுக்கு 7 சதவீதம், அருந்ததியருக்கு 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 20 சதவீதத்தில் 140 சாதிகளுக்கு மேல் உள்ள மக்கள் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பது தமிழக மக்கள் தொகையில் 70 சதவீதமாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
தமிழகத்தில் உண்மையான சமூக நீதி நிலை நாட்டிட சாதிவாரியாக கணக்கெடுத்து விகிதாசார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி சமநீதி கிடைத்திட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தமிழக அரசின் காவல் துறை, உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பதவிகளான அட்வகேட் ஜெனரல் பப்ளிக் பிராசிகயூட்டர் ஆகியவற்றில் தற்போது யாதவ இன மக்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால் மற்ற இனமக்களுக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தை போல் எங்கள் யாதவ் இனத்தை சார்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து உரிய பிரதிநித்துவம் வழங்கிட வேண்டும்.
இந்திய சுதந்திரத்திற்கு முதல் குரல் கொடுத்தும் தன் இன்னுயிரையும் ஈந்த மாவீரன் அழகுமுத்துக்கோன் வாழ்ந்த இடமான தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் கட்டிய கோட்டை சிதறுண்டுள்ளதை புதுப்பித்து வரலாற்றை போற்றி பாதுகாக்கும் வரலாற்று பெட்டமாக மாற்றி அமைத்து சுற்றுலாத்தலமாக உருவாக்கிட வேண்டும்.

தமிழக அரசு ஆண்டு தோறும் நடத்தும் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள்விழாவில் நெல்லை, தூத்துக்குடி பகுதியை சார்ந்த, அமைச்சர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோரை பங்கு பெற வாய்ப்பளிக்குமாறு தமிழக முதல்வரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
அழகு முத்துக்கோன் தபால் தலை வெளியிடுமாறு மத்திய அரசை விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசியலில நாடாளுமன்ற, சட்டமன்ற, மாநகராட்சி மேயர் போன்ற பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் யாதவ இனத்தவருக்கு முக்கியம் அளித்து உரிய பங்கினை அளிக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஆடு, மாடு வளர்ப்போர் நலவாரியம் அமைத்து அதற்கு யாதவர் ஒருவரை தலைவராக நியமனம் செய்து யாதவர்கள் பயன்பெற ஆவண செய்யுமாறு தமிழக முதல்வரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசு போதுமான விளைச்சல் நிலங்களை ஒதுக்கீடு செய்யும், வனத்துறை அதிகாரிகளின் கெடுபிடியை தவிர்க்கவும் ஆவண செய்ய வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாநாட்டில் முன்னாள் அமைச்சர்

பெரியகருப்பன், முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன், வைத்தியலிங்கம், குழந்தைவேலு, நந்த கோபால், சுப.சீத்தாராமன், மலேசியா பாண்டியன், நாசே.ஜே.ராமச்சந்திரன், முன்னாள் துணை வேந்தர் திருவாசகம், கவிஞர் விவேகா . ஒருங்கிணைப்பாளர் எத்திராஜ் மாநாட்டு ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர்கள் பூவை மாதவன், கே.எத்திராஜ், சங்கர், ராஜீ, கே.கே.நகர் கே.ஜோதிலிங்கம், கி.கோபி, பி.ராமதாஸ், ஆறுமுகம், பஞ்சாட்சரம், என்.தேவதாஸ், கே.சேகர், புண்ணியசேகர், பழனி யாதவ், மெய்யப்பன், கைலாசம் அசோக்குமார், செல்வன் யாதவ், ஆத்மசுப்பு, அரங்கநாதன், கே.நாராயண மூர்த்தி, செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, வீரன் அழகுமுத்துக்கோன், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை, ராவ் பிரேந்திர சிங் உள்ளிட்ட 54 பேரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன

Tuesday, January 6, 2015

முல்லை நில கடவுளை ஏற்க மாட்டார்களாலாம்,முல்லை நில தந்த ஜல்லிகட்டு ஏற்றுகொள்வார்களாம்

முல்லை நில கடவுளை ஏற்க மாட்டார்களாலாம் ,,முல்லை நில தந்த ஜல்லிகட்டு ஏற்றுகொள்வார்களாம்அது இவர்களின் கொள்கையாம்
மாயோன்(கிருஷ்ணன்)முல்லை நில கடவுள் அவனும் தமிழனே குமரிகண்டம் கடலில் மூழ்குவதற்ககு முன் அங்கே தமிழ்சங்கத்தை நடத்தியவர்கள் ஆயர்களே என்பதை தெளிவாக கூறுகிறது அதன் பின்னரே வேறு இடம் நோக்கி பயனிக்கின்றனர் ஆயர்களாகிய யாதவர்கள்
கலித்தொகை-104
"மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய 
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்"
தமிழர்கள் என்று நாங்கள் கொடுத்த ஏறுதழுலல்(ஜல்லிகட்டு)அனைத்தையும் ஏற்க முடியும் உங்களால் முல்லை நில கடவுள் மாயோன் அருளிய கீதை ஏற்க முடியாது புனித நுலாக இவர்களால்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar