Monday, January 12, 2015
Home »
» 8 பேருக்கு வாழ்வளித்த கோவை மசக்கோனார்
8 பேருக்கு வாழ்வளித்த கோவை மசக்கோனார்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்
கோவையை அடுத்த வெள்ளலூர் அருகேயுள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் மசக்கோனார்(வயது 75). இவர் கடந்த 8–ந் தேதி அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சாலை விபத்தில் சிக்கிய மசக்கோனாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஸ்ரீஅபிராமி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி மசக்கோனாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மசக்கோனாரின் குடும்பத்தினரிடம் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு ஸ்ரீஅபிராமி ஆஸ்பத்திரியின் டாக்டர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மறுநிமிடமே மசக்கோனாரின் உடல் உறுப்புகளை ஆபரேஷன் செய்து அகற்றும் பணி தொடங்கியது.
டாக்டர்கள் பெரியசாமி, பாலமுருகன், செந்தில்குமார், பாலகிருஷ்ணன் கொண்ட மருத்துவக் குழுவினர் மசக்கோனாரின் உடலில் இருந்து 2 சிறுநீரகம், கல்லீரல், இருதய வால்வு ஆகியவற்றை அகற்றினர்.
2 சிறுநீரகமும் ஸ்ரீஅபிராமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் 2 பேருக்கு வழங்கப்பட்டது.
இருதய வால்வை சென்னையில் உள்ள மெடிக்கல் மிஷன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு மசக்கோனாரின் இருதய வால்வுகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீஅபிராமி ஆஸ்பத்திரியில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் கிளம்பியது.
அந்த ஆம்புலன்ஸ் சென்னைக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் செல்லும் வகையில் வழியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே ஆம்புலன்ஸ் எந்திவித சிரமமும் இல்லாமல் 6 மணி நேரத்தில் சென்னை மெடிக்கல் மிஷன் ஆஸ்பத்திரியை அடைந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கண்ணன், வீரகுமார் மிகவும் சாமர்த்தியமாக ஆம்புலன்சை ஓட்டிச்சென்றனர்.
525 கி.மீ.தூரத்தை 6 மணி நேரத்தில் சென்னைக்கு ஓட்டிச்சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்களை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பாராட்டினார்கள்.
ஆம்புலன்ஸ் சென்னை மெடிக்கல் மிஷன் ஆஸ்பத்திரி சென்றடைந்ததும் மசக்கோனாரின் இருதய வால்வு 4 பேருக்கு பொருத்தப்பட்டது. மசக்கோனாரின் உடல் உறுப்பு தானம் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
Related Posts:
ஜல்லி கட்டு விளையாட்டிற்கு தடை ! யாதவர்கள் கடும் கண்டனம் ! இவ்வுலகில் மிகவும் மூத்தக்குடி தமிழ்க்குடி , இவ்வுலகின் முதல் நாகரிக இனம் தமிழ் இனம் , இவ்வுலகின் முதல் போர் வீரன் தமிழன் மற்றும் கலை இலக்கியம் பண்பாடு அறிவியல் என பல பெருமைமிகு அடையாளங்கள் கொண்டது எமது தமிழ் இனம் .&nbs… Read More
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டை… Read More
தேவகிரியை ஆண்ட யாதவ மன்னர்கள் (கி.பி. 12-14 ஆம் நூற்றாண்டுகள்) தேவகிரியை ஆட்சி செய்த யாதவகள் மகாபாரத நாயகனான கிருஷ்ண பகவானின் வழிவந்தவர்கள். இவர்கள் நாசிக் முதல் தேவகிரி (இன்றைய தௌலதா… Read More
Rao Tula Ram Rao Tula Ram (c. 9 December 1825 – 1863) was one of the key leaders of the Indian rebellion of 1857, in Haryana, where he is considered a state hero. He is credited with temporarily driving all of the Bri… Read More
13-05-2014 அன்று மதுரை யில் கள்ளழகர் எதிர்சேவையின் தமிழ் நாடு யாதவர் ஆடு வளர்ப்போர் சங்கம் நீர் மோர் பந்தல் 13-05-2014 அன்று மதுரை யில் கள்ளழகர் எதிர்சேவையின் தமிழ் நாடு யாதவர் ஆடு வளர்ப்போர் சங்கம் நீர் மோர் பந்தல் … Read More
0 comments:
Post a Comment