Friday, January 30, 2015
Home »
» சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட வலியுறுத்தி தமிழ்நாடு யாதவ சங்கம் ரெயில் மறியல் 58 பேர் கைதாகி விடுதலை
சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட வலியுறுத்தி தமிழ்நாடு யாதவ சங்கம் ரெயில் மறியல் 58 பேர் கைதாகி விடுதலை
சாதி வாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் உடனே நடத்திட பாராளுமன்றத்தில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு யாதவ சங்கத்தினர் ஜனவரி 28,2015 காலை 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த ‘வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்’ (சென்னை–மங்களூர்) ரெயிலை மறித்து கோஷங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு யாதவ சங்க நிறுவனத்தலைவர் சரசுமுத்து யாதவ் தலைமை தாங்கினார். வக்கீல் பிரிவு தலைவர் சந்திரஜித் யாதவ் முன்னிலை வகித்தார். இதுகுறித்து சரசுமுத்து யாதவ் கூறும்போது, ‘தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட பாராளுமன்றத்தில் மத்திய அரசு உடனே சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவ சமுதாயத்தை சேர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபடுகிறோம்’ என்றார்.
ரெயில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு யாதவ சங்கத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 58 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் நேற்று மாலையில் விடுதலை செய்தனர்.
நன்றி:தினதந்தி
0 comments:
Post a Comment