ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Sunday, July 12, 2015
முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை:தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை
மாவீரன் அழகுமுத்துக்கோனின் நினைவு தினம் மற்றும் குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்து கோனின் 256ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நினைவு நாள் நிகழ்ச்சிகள் மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவ சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து துணைத்தலைவர்கள் ர.குணசீலன், சாலமன் மோகன்தாஸ், தேர்தல் பிரிவு செயலாளர் நந்தகுமார், செய்தி தொடர்பாளர் பிரவீன் பிலிப், யாதவ மகாசபை தேசிய பொதுச்செயலாளர் பாசிங்கம், மாநில அமைப்பு செயலாளர் விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சீனிவாசன், அம்பத்தூர் பகுதி செயலாளர் தேவராஜ், இணையதள பொறுப்பாளர் விருகை கண்ணன், புதுச்சேரி மாநில தலைவர் செல்வராஜ், அண்ணாநகர் பகுதி பொறுப்பாளர் பாபு ராஜேந்திரன், திருவொற்றியூர் பகுதி பொறுப்பாளர் உடையார் பாலாஜி மற்றும் ஆயுதம் அமைப்பின் தலைவர் எம்.பி.நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து மதுரை யாதவா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அழகுமுத்துக்கோன் நினைவு நாள் மற்றும் குருபூஜையில் கலந்துகொள்ளும் டாக்டர். தி. தேவநாதன் யாதவ், பின்னர் கட்டாலன்குளம் அழகுமுத்துக்கோன் நினைவு இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதை தொடர்ந்து மாலை 6 மணியளவில் நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டாக்டர். தி. தேவநாதன் யாதவ் உரையாற்றுகிறார்.
இதனிடையே வீரன் அழகுமுத்து கோனின் 256-வது நினைவு நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 5 மணிமுதல் 24 மணிநேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Friday, July 10, 2015
Section 144 to be imposed in Tuticorin district on freedom fighter's memorial day

Veeran Alagumuthu Kone, (1681-1739) was a warrior and also known as one of the earliest freedom fighters in the country.
Members of the yadava community and others visit his memorial in Kattankulam in Tuticorin district every year on July 11 and pay tributes to him.
Tuticorin district collector M Ravikumar has ordered the implementation of the ban order to prevent large crowds from gathering in the district on the memorial day.
Processions and vehicles from outside the district would be screened and monitored during their entry into the district. However, the ban order does not apply to marriage or funeral processions.
வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 256வது ஜெயந்தி விழா இன்று (சனிக்கிழமை) அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.
விழாவானது, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இன்று (சனிக்கிழமை) காலை 5 மணி முதல் 12ந் தேதி காலை 5 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கட்டாலங்குளம் பகுதியிலும் மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் ஜோதி, கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும்,
தூத்துக்குடி மாவட்டத்துக்குள் அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும், விழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Thursday, July 9, 2015
தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்
இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் சமுதாய பணியில்
சதீஸ் யாதவ் பி.ஏ
தமிழ்நாடு வீரயாதவர் இளைஞர் கூட்டமைப்பு
மராட்டிய மாநிலத்தில் மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
சார்பா தேசிய தலைவர் அய்யா டாக்டர் D.தேவநாதன் யாதவ் அவர்களின் ஆணைக்கனங்க . மாவீரன் அழகுமுத்து கோன்
குருபூஜை விழா . தானே மாவட்டம் கல்யாணில் நடைபெற உள்ளது நமது சொந்தபந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அய்யாவின் குருபூஜை விழாவை சிறப்பியுங்கள் . இவ்விழாவில் .
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பாக
10 ஆம் வகுப்பு . 11. ஆம் வகுப்பு 12 ஆம் . வகுப்புகளில் தேர்ச்சி பெற்று முதலாம் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க படுகிறது மற்றும் பாராட்டு சான்றிதழ் பதக்கம் போன்றவைம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க படுகின்றன அனைவரும் வாரீர். வாரீர்
தொடர்புகள் .
கல்யாண் . 9819532767 ... 9819140948.....
அந்தேரி 9619555956.
தாராவி .9930726796 ..
செம்பூர் 9322323598.
மேற்கு ரயில்வே. 9224522500...
நவி மும்பை 9833224481 & 8286204737 .
இவண் என்றும் மக்கள் பணியில் : இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
முதல் சுதந்திர போராட்ட விடுதலை வீரன் அழகு முத்துகோன் குருபூஜை விழா:இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் தலைமையில் முதல் சுதந்திர போராட்ட விடுதலை வீரன் அழகு முத்துகோன்256 வது குருபூஜை விழா !
ஜூலை 11 அன்று காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள மாவீரன் அழகுமுத்து கோன் திருவுருவ சிலைக்கு டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் மரியாதை செலுத்துகிறார் .
பிற்பகல் 12.30 மணிக்கு கட்டாளங்குளம் மாவீரன் மணிமண்டபத்தில் வீரன் அழகு முத்துகோன் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
மாலை 6 மணிக்கு பாளை தெற்குபஜாரில் உள்ள வீரன் அழகு முத்துகோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் .
அனைவரும் வருக !
அன்புடன் ,
ர குணசீலன்
துணைத்தலைவர்
9841157660
வீரன் அழகுமுத்துகோன் 258வது குருபூஜை:கோகுல மக்கள் கட்சி
