ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Thursday, August 20, 2015
உறுப்பினர்களுக்கு உதவும் மதுரை ஆட்டிறைச்சி சங்கம்
ஆட்டிறைச்சி தொழிலில் ஏற்பட்ட இன்னல்களை தவிர்க்க, எதிர்காலத்தில் உரிமையாளர்களும், உழைப்பாளர்களும் ஒற்றுமையுடன் இருக்க, தொலைநோக்கு பார்வையுடன் 1944 ஏப்.,21ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் மதுரை ஆட்டிறைச்சி சில்லரை விற்பனையாளர் சங்கம்.மதுரை நாயக்கர் புதுத்தெருவில், 137 உறுப்பினர்களுடன் இச்சங்கத்தை ஆரம்பித்தவர் சி.பிரவிக்கக்கோனார். தற்போது கீழமாசிவீதி துலக்கர் பூக்கார சந்தில் செயல்படுகிறது. ""இன்றைய சங்ககட்டடம், 1966-67ல் சங்க பொறுப்பாளர்கள் வாலகுருக்கோனார், நல்லதம்பி கோனார், சுப்பிரமணிய கோனார், தலைமை கணக்கர் தனுஷ்கோடியா பிள்ளை முயற்சியால் வாங்கப் பட்டது,'' என்கிறார் சங்க செயல்பாடுகளை அறிந்த வரதராஜன்.மதுரை ஆட்டிறைச்சி சங்கம், தமிழகத்தில் உள்ள இறைச்சி வணிக சங்கங்களில் மிகப்பெரியதும், தென்னகத்தில் பெயர் பெற்றதுமாகும். 1953-54ல் ஆட்டிறைச்சிக்கு அரசு விதித்த வரியை விலக்க,திருப்பூரில் அமைச்சர் ரோச்விக்டோரியா தலைமையில் மாநாடு நடத்தி, சாதித்து காட்டி சாதனை படைத்தது இச்சங்கம்.சங்க உறுப்பினர்களுக்கு இலவச தராசு, படிக்கற்கள், வட்டியில்லா கடன், உறுப்பினர்கள் மறைவிற்கு இறுதிச்சடங்கு செலவு பல உதவிகளை சங்கம் பார்த்துக் கொள்கிறது. ஆடறுக்கும் போது சிந்தும் ரத்தத்தை சேகரித்து, விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு, வடக்குமாசி வீதி நவநீதகிருஷ்ண சுவாமி திருவிழாவில், பிரசாதம் வழங்குகின்றனர். ஜாதி, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, கோனார்கள், பிரமலைக் கள்ளர்கள், முஸ்லிம்கள் இணைந்து சங்க பொறுப்புகளை கவனிக்கின்றனர். இன்று 450 உறுப்பினர்களுடன் வளர்ந்து நிற்கும் இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக ந.முத்துராமலிங்கம், செயலாளராக ரா.நவநீதனும் உள்ளனர்.
நெல்லையப்பரும் ராமு கோனாரும்
திருநெல்வேலியின் புராதனப் பெயர் வேணுவனம் என்பதாகும். பாண்டிய மன்னன் ராமபாண்டியன் ஆட்சிக் காலத்தில் மன்னனுக்குத் தினமும் ராமக் கோனார் என்பவர் பால் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். தினமும் அவர் காலில் வழியிலிருந்த கல் ஒன்று இடறும். பால் கொட்டும். ஆனால் கையில் கொண்டு வரும் பானைக்கு எந்தச் சேதமும் ஏற்படாது. இப்படித் தினமும் தொடர்ந்து நடக்க மன்னனுக்குச் சந்தேகம் தலை தூக்கியது. இவர் நிஜமாகவே பால் கொண்டுவருகிறாரா என சந்தேகப் பட்டான். மறுநாளும் மன்னனின் ஆட்கள் தொடரப் பால் கொண்டு வந்த கோனாரின் கையில் இருந்து பானையில் இருந்த பால் முழுதும் இடறிய கல்லின் மேலேயே கொட்ட மீண்டும் அனைவரும் மன்னனிடம் சென்று முறையிட்டனர். மன்னனும் தன் வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கே வந்து பார்த்தான்.
கல் கண்களில் பட அந்தக் கல்லை அகற்ற முயன்றார்கள் அனைவரும். கோடாரியால் ஓங்கி ஒரு போடு போட அந்தக் கல்லில் பட்டு உடனே ரத்தம் பீறிட ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்க விண்ணில் இருந்து அசரீரி கேட்டு அந்தக் கல்லைத் தோண்டிப் பார்த்தால் அது சிவலிங்கம். அப்போது போட்ட கோடரி அடி லிங்கத்தின் இடப்பக்கம் பட்டு ரத்தக் காயம் தெரிந்தது. மன்னன் கையை வைக்க ரத்தம் வருவது நின்றது. சுயம்புவாய்த் தோன்றிய அந்த லிங்கத்தை வைத்துக் கோயில் உருவானது. இப்போதும் மூலவரின் தலையில் வெட்டுக் காயம் இருப்பதாய்ச் சொல்கின்றனர்
Wednesday, August 19, 2015
பண்டமாற்று (வணிகத்தை) முறையை தோற்றுவித்த ஆயர்கள்
4:00 PM
தாமோதரன் கோனார்
ஆயர்கள், இடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள், இடையன், பண்டமாற்று முறை
No comments
சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக் கெள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசு கொடுத்து வாங்கினர்கள். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்திலே எல்லா நாடு களிலும் பழங்காலத்தில் பண்டமாற்றுதான் நடந்து வந்தது. மற்ற நாடு களில் இருந்தது போலவே தமிழகத் திலும் பழங்காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. சங்க நூல்களிலிருந்து இதை அறிகிறோம்.
இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை முதுகூத்தனார் கூறுகிறார். ‘பாலோடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று குறு. (221.3-4) அவர் கூறுகிறார் (கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலான தானியங்கள்)
ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள். தயிரையும் மோரையும் மாறித் தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்:
‘நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நல்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருத்தி’
என்று (பெரும்பாண். 155-163) அவர் கூறுகிறார்.
Monday, August 17, 2015
69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை
69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டது மற்றும் புகைபடங்கள் யோகா மற்றும் சிலம்பத்தில் வெற்றி அடைந்தவர்களுக்கு கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் வெங்கி யாதவ் மற்றும் சகோதரன் சதிஷ்யாதவ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் குமார் யாதவ் நமது மாஸ்டர் ஜீ மாரிச்சாமி யாதவ் நிர்வாகம் தூத்துக்குடி தெற்குமாவட்ட தலைவர் மாரிக்கோனார் தலைமையில் விழா சிறப்புடன் நடைபெற்றது இந்த நிகழச்சி கோகுலம் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திரு மூர்த்தி யாதவன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
அந்தணர் வளர்த்த யாதவப்பெண்
அந்தணர் வளர்த்த யாதவப்பெண்:
ஸ்ரீ வில்லிபுத்தூர் துளசி தோட்டத்தில் அவதாரம் எடுத்தாள் பூமா தேவி. அவளை கண்டெடுத்த ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் கோதை என்ற பெயரில் வளர்த்து வந்தார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட கோதை கண்ணன் மீது காதல் கொண்டு அவனை அடைந்தாள்.
கோதை இறைவனையே ஆண்டதால் ஆண்டாள் என்று அழைக்கப்பட்டாள். ஆண்டாள் தெய்வமாகவும் ஆழ்வார்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். தமிழ் வேதம் என்று அழைக்கப்படும் திருப்பாவை அருளினார்.
தான் அருளிய திருப்பாவை மூலம் தன்னை ஒரு யாதவ பெண்ணாக உணர்த்துகிறாள்.
ஆயர் குல பெருமக்கள் அனைவராலும் பூஜிக்கப்பட தெய்வம் ஆண்டாள்
எழும்பூரில் வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவிப்பு
எழும்பூரில், சுதந்திர போராட்ட மாவீரர், வீரன் அழகு முத்து கோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் நிர்வாகிகள் என்.சுப்பிரமணியம் யாதவ், ஆர்.பி.தர்மலிங்கம் யாதவ், கே.ஜோதிலிங்கம் யாதவ், கே.எம்.ராஜன் யாதவ், எம்.வி.சேகர் யாதவ், பூவை சுந்தர், போரூர் முருகா தாமோதரன், கே.எத்திராஜ், கேப்டன் ராஜன், பி.வி.சேகர், எம்.ஆர்.கே.மெய்யப்பன், ஓ.எம்.பி.ராமதாஸ், என்.தேவதாஸ், ஏ.எஸ்.பழனியாதவ், பி.தங்கராஜ், எம்.வி.புண்ணிய சேகர், எம்.சங்கர், எஸ்.செல்வம், வி.ராஜீ, மயிலை கிருஷ்ணன், பி.ஆர்.முத்து, காளிதாஸ் யாதவ், வேல் தளபதி, பி.மகாலிங்கம், சி.எஸ்.தனசேகரன், எஸ்.பாலுச்சாமி உள்பட ஏராளமானோர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தென்சென்னை மாவட்டம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய 37 யாதவர் நலச்சங்க நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றிருந்தனர்.
மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.