ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Sunday, November 22, 2015
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவில் உருவான வரலாறு
ஆங்கிலேயர்களுக்கும் சிவகங்கைசீமையின் ராணி வேலுநாச்சியாருக்கும் இடையே சண்டை நடக்கும் போது ஒரு கட்டத்தில் வேலுநாச்சியார் கொல்லங்குடி காட்டு பகுதிக்குள் தஞ்சம் அடைகிறாள்.
வேலுநாச்சியார் குதிரையில் வருகிறாள் அப்போது வெள்ளைக்காரன் தன்னை நெருங்கியவுடன் குதிரையிலுரு
ந்து இறங்கி முட்புதர் ஒன்றில் மறைந்து கொள்கிறார்
அந்த இடத்தில் மாடுமேய்க்கும் யாதவகுல சமுதாயத்தை சேர்ந்த உடையாள் என்கிற இளம் பெண்ணை பிடித்துவைத்து இந்த குதிரையில் வந்த பெண் எங்கே என்று கேட்கிறான் ஒரு வெள்ளைக்காரன்.
அதற்கு அந்த இளம்பெண் சொல்லமுடியாது என்று பதில் சொல்கிறாள்அப்போது வெள்ளையர்கள் நீசொல்லவில்லையென்றால் உன்னை கொன்றுவிடுவோம் என்று சொல்கிறான்.
இதை புதரில் ஒளிந்து இருக்கும் வேலுநாச்சியார் பார்த்துக்கொண்டு இருக்கிறார் இப்படி வாதம் நடந்து கொண்டு இருக்கிறது. இறுதியாக மறைந்து இருக்கும் இடத்தை கூற மறுத்தவுடன் வெள்ளைக்காரன் உடையாளை வெட்டிசாய்க்கிறான் திருமணமாகாத 17வயது இளம் பெண் உடையாள் துடிதுடித்து சாகிறாள்
இதை மனதில்கொண்டு தமது உயிரை கொடுத்து என்உயிரை காப்பாற்றிய உடையாளே என்தெய்வம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல்
அந்த இடத்தில் அவளுக்ககு மிகப்பெரிய கோயிலை கட்டி அந்த கோயிலுக்காக பதினெட்டு ஊரையும் நிலத்தையும் எழுதி வைத்து உயிருள்ளவரை தெய்வமாக உடையாளை வணங்கினார் வேலுநாச்சியார்.
இன்று கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவிலாக அது இன்று காட்சி தருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் குறிப்பிடக்கூடிய முக்கியமான வழிபாட்டு தலங்களுள் ஒன்றாக இன்று அது புகழ்பெற்று திகழ்கிறது.
Regards,
ALEX PANDIAN.P
முனைவர் மு.தமிழ்க்குடிமகன்
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களின் இயற்பெயர் மு.சாத்தையா ஆகும். 26.06.1939 இல் இன்றைய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாத்தனூரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் முத்தையா, குப்பம்மாள் ஆவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியைச் சாத்தனூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வியைச் செங்குடி உரோமன் கத்தோலிக்க(R.C) நடுநிலைப் பள்ளியிலும்,ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான கல்வியைத் தேவகோட்டை, தேபிரித்தோ உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றவர். இளம் அறிவியல்(கணக்கு) பட்டப்படிப்பைத் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரியில் முடித்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துத் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
1963-1964 ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூர் தூய வளனார் உயர்நிலைப்பள்ளிக் கணக்கு ஆசிரியராகவும், தென்மொழி துணையாசிரியராகவும் பணியாற்றியவர். அடுத்த இரண்டு ஆண்டுகள் பறம்புக்குடி ஆ.வை. உயர்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியராகவும் பின் மூன்றாண்டுகள் நேரடி அரசியல் வாழ்க்கையிலும் இருந்தவர்.
1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றியவர். 1979 முதல் 1988 வரை கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்.1989 முதல் நேரடியாக அரசியலில் இயங்கியவர். 1989 முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பணியாற்றியும், 1996 முதல் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவர்.
எழுதிய நூல்கள்: 1. அந்தமானைப் பாருங்கள் 2. பாவேந்தர் கனவு 3. வாழ்ந்து காட்டுங்கள் 4. காலம் எனும் காட்டாறு 5. பாவேந்தரின் மனிதநேயம் 6. ஐரோப்பியப் பயணம் 7. மனம் கவர்ந்த மலேசியா 8. கலைஞரும் பாவேந்தரும் 9. தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு? 10. சீன நாடும் சின்ன நாடும் 11. மலேசிய முழக்கம் 12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்)
எழுதிய நூல்கள்: 1. அந்தமானைப் பாருங்கள் 2. பாவேந்தர் கனவு 3. வாழ்ந்து காட்டுங்கள் 4. காலம் எனும் காட்டாறு 5. பாவேந்தரின் மனிதநேயம் 6. ஐரோப்பியப் பயணம் 7. மனம் கவர்ந்த மலேசியா 8. கலைஞரும் பாவேந்தரும் 9. தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு? 10. சீன நாடும் சின்ன நாடும் 11. மலேசிய முழக்கம் 12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்)
இதழ்ப்பணி:
துணை ஆசிரியர்- தென்மொழி(1963-1966)
ஆசிரியர்- அறிவு(1970-1971)
ஆசிரியர்- கைகாட்டி (1971-1974)
சமுதாயப்பணிகள்:
பரிசுச்சீட்டு, திரைப்படக்கீழ்மை, வரதட்சணை முதலியவற்றால் விளையும் சமுதாயத் தீங்குகளைக் களையும் நோக்கில் மதுரை முத்துவுடன் இணைந்து சமுதாயச் சீர்திருத்தப் பேரவையின் பொதுச்செயலாளராக இருந்தவர். மதுரை நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்
அரசியல் பணி:
அரசியல் பணி:
1989 இல் இளையான்குடித் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர்.
1989 பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள் முதல் 1991 ஆம் ஆண்டுவரை தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும்,
பின்னர் 1996 முதல் தமிழ் வளர்ச்சிப் பண்ப்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து பணிபுரிந்தவர்.
தமிழ்க்குடிமகன் கடந்த 1989,1996ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டபேரவை உறுப்பினர் ஆனார்.
1989 முதல் 1991 வரை தமிழக சட்டபேரவை தலைவராக பணியாற்றினார்.
1996 முதல் 2001 வரை தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார்.
சோழர் காலத்துக்கோயிலும் சமூகமும்'' நூல் ஆய்வு(கோயிலும் இடையர் சமூகமும்)
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை முதுநிலை விரிவுரையாளராகிய முனைவர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் கோயிற்கலை, பண்பாடு, கல்வெட்டு, நாட்டாரியல் ஆகிய துறைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டின் பிரதிபலிப்பாக ஐம்பதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பல ஆய்வுத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்நூலாசிரியரின் ஆய்வு முறையில் தமிழாய்வு, வரலாற்றாய்வு என்பதனை விடவும் சமூகவியல், நாட்டாரியல் ஆய்வுக்கூறுகள் ஆங்காங்கே மேலெழுந்துள்ளன. இத்தகைய துறைகளின் பால் புலமைத்துவம் பெற்றவராகிய முனைவர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் ""சோழர் காலத்துக்கோயிலும் சமூகமும்'' என்னும் நூலைத் தந்துள்ளார்.
கோயில்கள் பற்றிய ஆய்வுகள் நிறைய இதுவரை செய்யப்பட்டுள்ளன ஆயினும் பெரும்பாலும் அவ்வாய்வுகள் கோயில்களை ஒரு சமய நிறுவனம் அல்லது கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் நிலைக்களம் என்றே நோக்கியுள்ளன. அதற்கு மாறாக வ. மகேஸ்வரன் கோயிலை ஒரு சமூக நிறுவனம் என்ற நோக்கில் ஆராய்ந்து பல புதிய உண்மைகளை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கோயிலுக்கும் அரசுக்கும் இருந்த தொடர்பு கோயில் நடவடிக்கைகளில் இடையர் மற்றும் பெண்களின் பங்களிப்பு மற்றும் கோயில் நிருவாகத்தில் உள்ளூர் சமூகத்தின் பங்கு ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார் என்று நூலுக்கு அணிந்துரை நல்கிய தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு நிலைப்பேராசிரியர் ஏ.சுப்பராயலு தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகத்தில் கோயில் உருவாக்கம், சோழர் காலத்தில் கோயில்கள், கோயிலும் பெண்களும், கோயிலும் இடையர் சமூகமும், கோயிலும் நிருவாக மாற்றங்களும் ஆகிய ஐந்து இயல்களில் தமது ஆய்வினை மேற்கொண்டு இந்நூலை ஆசிரியர் யாத்துள்ளார். காவிரியின் வளமை கொழிக்கும் திருவாரூர், திருவையாறு,திருவிசலூர், வேதாரண்யம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளிலிருந்து கல்வெட்டுத் தரவுகளை ஆராய்ந்து சில முடிகளை இந்நூலில் முன்வைத்துள்ளார். தமிழகத்தில் கோயில் கட்டட மரபின் வரலாற்றை இலக்கியத் தரவுகளோடு தொல்லியல் தரும் செய்திகளையும் பயன்படுத்தி நிரல்படச் சொல்லியுள்ளார்.மக்கள் பரவலாகப் போற்றிவந்த கிராமத் தெய்வங்கள், குறிப்பாக பிடாரிபோன்ற பெண் தெய்வங்கள் நாளடைவில் பல்லவ, சோழ அரச குலங்களால் போற்றப்பட்ட பெருந்தெய்வக் கோயில்களால் பின்தள்ளப்பட்டன என்பதையும் இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நோக்கில் பெருந்தெய்வக்கோயில்களின் அதிகாரமும் செல்வாக்கும் புலப்படுகிறது.தமிழர் சமூகத்தில் கோயில் என்ற அமைப்பின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் என்ற கருத்தியலை முறைப்படுத்துவதாகவே முதலாவது இயல் அமைகின்றது.
வழிபாடுகள் எவ்வெவ் வகையில் உருவாகி வளர்ந்தன என்பதும், கோயில் என்ற அமைப்பு அவ்வழிபாட்டின் தொடர் விளைவாக எவ்வாறு ஏற்பட்டது என்பதும் தொல்லியல் இலக்கியச் சான்றுகளால் விளக்கப்படுகின்றது. இவ்வியலில் பக்தி இயக்கச் செயற்பாடுளால் கோயில் முறைமை வளர்ச்சியடைந்ததும், கோயில் கட்டுமானங்கள் தொடர்பான கருத்து நிலைகள் பெறும் செல்வாக்கும் விவரிக்கப்படுகின்றது.
வரலாற்றுக்காலம் முதல் பல்லவ, பாண்டிய இறுதிக்காலம் வரை வளர்ந்து வந்த கோயில் முறைமை எவ்வாறான பின்புலங்களினூடாக சோழர் காலத்தில் வளர்ச்சி பெற்றதென்பது இரண்டாம் இயலில் ஆராயப்படுகின்றது. தொன்று தொட்டு நிலவி வந்த மரபும், பக்தி இயக்கமும் வளர்த்தெடுத்த பின்புலத்தினூடாக சோழர் காலக்கோயில் கட்டுமானப்பனிகள் அரசகுலத்தவராலும், ஏனையோராலும் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டன என்பதும் அதன் ஆரம்ப இடைக்கால வேகமும் பிற்காலத்தில் ஏற்பட்ட தேக்கநிலையும் அதற்கான காரணங்களும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. மேலும் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசுக் கோயில்கள் என்பவற்றின் கருத்தியல் அவற்றின் இயங்குதளம், செயற்பாடுகள் என்பனவற்றிலும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இவ்வியலின் இன்னோர் பகுதியாக அக்காலத்தில் நிலவிய கிராமியக் கடவுள் கோயில்கள் பற்றி ஆங்காங்கே தெரியவரும் செய்திகள் தொகுத்து ஆராயப்படுகின்றன.
கோயில் என்ற நிறுவனத்தில் பெண்கள் எல்லாவற்றிலும் கொண்டிருந்த தொடர்புகள் பற்றியதான செய்திகள் மூன்றாம் இயலில் கூறப்பட்டுள்ளது. அரசியல், குறுநிலமன்னர்களது மனைவியர், பிராமணப்பெண்டிர், வேளத்துப்பெண்டிர், வெள்ளாட்டிகள், தேவரடியார் என அவர்களை இனப்பிரித்து இவ்வியலில் ஆராயப்படுகின்றது. இத்தகைய பெண்களது கோயிலுடனான தொடர்பை அரசியல்பலம், அரசியல் உறவு, பொருளாதார பலம், சமூகமேன்மை முதலானவை எவ்வாறு கட்டமைந்தன என்பது பற்றி நோக்குவதாகவும் இவ்வியல் அமைந்துள்ளது. தேவரடியார் சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி என்பன வெட்டுமுகப் பார்வையினடியாக நோக்கப்பட்டு இவர்கள் கலையின் பிரதிநிதிகளாகக் கோயிலினுள் சேர்க்கப்பட்டார்களா, அல்லது அரச நிர்வாகம் அதனைத் தீர்மானித்ததா என்பது பற்றிய நோக்கும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மொத்தக் கோயிற் கொடைகளில் பெண் பரவலும் அதற்கான செயல்முறைக்காரணிகளும் இவ்வியலின் கண் நூலாசிரியரின் தெளிவான பார்வை விழுந்துள்ளமை புலனாகின்றது.
கோயில்களில் அன்றாடம் விளக்கெரிப்பதற்குத் தேவையான நெய்யை வழங்குவதற்கான பண்டமாற்றுச் சேவை ஒன்றை அவர்கள் நிகழ்த்தி வந்துள்ளனர். அவ்வாறான சேவை பற்றியும், அதை நிகழ்த்திய இடையர் சமூகம் பற்றியுமே இவ்வியலில் ஆராயப்படுகின்றது. கோயில்களில் விளக்கேற்றுதல் அத்தியாவசியமான மரபாக வளர்ச்சி பெற்றது. கோயில் கட்டுமானங்கள் நிலையானவையாக உருவானபோது வழிபாட்டின் சின்னமாகவும்,கோயிலின் அக இருளை நீக்கும் கருவியாகவும் இது விளங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இடையர்கள் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்பட்டபோதும் அவர்களின் வாழிடங்கள் பற்றிய செய்திகள் அரிதாகவே கிடைத்துள்ளன. எனினும் இடையர் பற்றிய தஞ்சாவூர்க் கல்வெட்டின் மூலம் சோழமண்டலத்தின் பல பகுதிகளிலும் அவர்கள் பரந்து வாழ்ந்த செய்தியினை அறிய முடிகின்றது.
நாகரிக வளர்ச்சி காரணமாகவும் அரசுகளின் தோற்றங்களாலும் அவ்வரசுகளின் சமயஞ்சார்ந்த செயற்பாடுகளினாலும் ஒருங்கிணைந்த அமைப்பாகக் கோயில் என மாறியபோது அது சமூக நிறுவனமாகவும் உருவானது. இவ்வாறான உருமாற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனங்களாக இடைக்காலத் தமிழகத்துக் கோயில்கள் விளங்கின. கோயில் நிருவாகிகளைத் தனத்தார் என்று குறிப்பிடும் வழக்கம் சோழர் காலத்தின் இறுதிப்பகுதியிலேதான் ஏற்பட்டுள்ளது. கோயில் நிவந்தங்களுக்கு என்று அமர்த்தப்பட்டவர்கள் பல பணி நிவந்தரக்காரர் ஆவர். தேவர் இடைச்சான்றார் ஆடுகளைப் பெற்று அவற்றிற்காக நெய்யால் விளக்கெரிக்கும் கடமையைச் செய்தனர். பிரõமணக்குழுக்களுக்குப் புறம்மாக வணிகர் முதலான பிறசாதியினரும் கோயிற் நிருவாகப் பணிக்குழுக்களாக இயங்கியதற்கு இவை சான்றுகளாகும்.காலநிதி, வல்லிபுரம் மகேஸ்வரனால் எழுதப்பட்ட இந்த நூல் சமூகம் பற்றிச் செல்லும் நிலைப்பாட்டைப் பார்க்கும்போது சாதிய வித்தியாசங்கள், ஏற்றத்தாழ்வுகள், புறக்கணிப்புக்கள் என்பன இருந்துள்ளமை வெளிப்படை. கோயில் நிர்வாகிகளாகிய தனத்தார் மற்றும் கோயில் பூசகர்களாகிய பிராமணர்கள் மற்றைய சாதிப்பிரிவுகளுக்குள் உள்பட்ட மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்பதை இந்நூல் நேரடியாகச் சுட்டிக்காட்டாவிட்டாலும் மறைமுகமாக அவர்களின் தொழில்சார்ந்த முறையில் பின்தள்ளப்பட்டிருப்பதை இயம்பியுள்ளது.சோழர் காலத்தில் மட்டுமல்ல இந்தியõவைப் பொறுத்தளவில் இது நீண்ட தொடராகவே இன்றும் இருந்து வருகின்றது.
இந்நூலை பல ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் பயனுள்ள கருத்தக்கருவூலமாகக்கொண்டு வந்த கலாநிதி வ. மகேஸ்வரனுக்கு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சிமையம் அண்மையில் சிறந்த நூல் பரிசினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. இது அவரது ஆராய்ச்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பது புலனாகின்றது. ஈழத்து ஆராய்ச்சியாளர்கள் வரிசையிலே இன்றைய காலகட்டத்தில், தமிழ்துறை விரிவுரையாளர் கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் முன்நிற்கிறார்கள்.
க. உயிரவன்
அறிவே ஆண்டவன்
thamilaali@gmail.com
Tuesday, November 17, 2015
அமீரக மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளையின் ஆலோசனைக்கூட்டம்
அமீரக மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளையின் சார்பாக ஆம்புலன்ஸ் சேவைக்காக இரண்டாம் கட்ட விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் வரும் 02.12.2015.புதன்கிழமை சரியாக காலை 11:00 மணிக்கு துபாயின் தலைநகரமான அபுதாபியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது அதனால் அமீரக தலைவா் திரு.K.G.கண்ணன் யாதவ் அவா்கள் அழைக்கிறார்
....அதனால் நமது அறக்கட்டளையின் போர்படைதளபதிகளே
..யாதவ சொந்தங்களே அணிதிரள்வோம் அபுதாபி சீமையை நோக்கி......
விழா ஏற்பாடு;
T.கோவிந்தராஜ் யாதவ்
கிளை தலைவா் அபுதாபி...
மற்றும் அபுதாபி அறக்கட்டளை சொந்தங்கள் .......
மேலும் தொடர்புக்கு;
055-7970793,052-6686941,
050-4659010,055-7868751..
இவண்:அமீரக மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை.....
துபாய்-UAE
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்(யாதவ சமுதாயம்) அருள்பாளிக்க காத்திருக்கும் ஸ்ரீகண்ணன் ஆலயத்தின் கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெருகிறது அதற்க்கான நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்(யாதவ சமுதாயம்) அருள்பாளிக்க காத்திருக்கும் ஸ்ரீகண்ணன் ஆலயத்தின் கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெருகிறது அதற்க்கான நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
நன்கொடை தரவிரும்பியவர்கள் கிழே கொடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கவும்...
என்றும் சமுதாய பணியில்...
ம.மோகன்ஜீ யாதவ்(நரிவிழா)
இனையதள பொருப்பாளர் கோகுலம்
அறக்கட்டளை-தமிழ்நாடு
மற்றும்
கோகுலம் இளம் உள்ளங்கள்-நரிவிழா.
நன்கொடை தரவிரும்பியவர்கள் கிழே கொடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கவும்...
என்றும் சமுதாய பணியில்...
ம.மோகன்ஜீ யாதவ்(நரிவிழா)
இனையதள பொருப்பாளர் கோகுலம்
அறக்கட்டளை-தமிழ்நாடு
மற்றும்
கோகுலம் இளம் உள்ளங்கள்-நரிவிழா.
Monday, November 2, 2015
பாலை - தேசிய இனத்தைக் கருவாகக் கொண்ட முதல் திரைப்படம் ! - கவிஞர் காசி ஆனந்தன்
வழமையான தமிழ்த்திரைப்படப் போக்கிலிருந்து வழி விலகி 'பாலை' திரைப்படத்தை வரைந்திருக்கிறார் இயக்குநர் ம.செந்தமிழன்.
முல்லை- குறிஞ்சி- மருதம்- நெய்தல்-பாலை எனும் ஐந்திணை நிலமாய்த் திகழ்ந்த தமிழ்நாட்டில் முல்லை மண்ணின் ''ஆயர் குடி'' வாழ்க்கை திரைப்படமாகி இருக்கிறது.
தமிழினம் பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையோடும் எதிரியோடும் மோதி மோதித் தன்னை எதிர்கொண்ட பேரழிவுகளைத் தடுத்து நிறுத்திய தமிழினத் தற்காப்பு வரலாறுதான் செந்தமிழனின் ''பாலை''.
இயற்கை கொதித்தாலும் முல்லை பாலையாகி விடுகிறது; எதிரி மிதித்தாலும் முல்லை பாலை யாகிவிடுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மண்ணைச் செந்தமிழன் உயிர்த்துடிப்போடு பதிவு செய்திருக்கிறார்.
அம்மணமாய் உலக மக்கள் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த காலத்தில் ஆடை கட்டி, வீடமைத்து வாழ்ந்த அற்றைத் தமிழினத்தின் கதை.
தலைவன் ஒருவனைக் கொண்டு, மண்ணும் மொழியும் இனமும் காத்து வாழ்ந்த தமிழினத்தின் பண்டை வரலாறு.
உடன் போக்கு,- ஆநிரை கவர்தல், - மழைக்குறி பார்த்தல், - மீன்வேட்டை,- கவண் எறிதல் போன்ற முந்தையத் தமிழர் பழக்க வழக்கங்கள் பற்றிய உயிர்ப்பான பதிவு.
முற்றிலும் வேறுபட்ட ஒரு திரை இலக்கியத்தைப் படைக்கும் முயற்சியில் செந்தமிழன் முழுமையாய் வெற்றி பெற்றிருக்கிறார்.
உயர்ந்த தொழில் நுட்பத்தின் துணை கொண்டு மேனாட்டார் உருவாக்கும் திரைப் படங்களைக்கூட 'பாலை'யின் உயிர்த்துடிப்பான சில காட்சிகள் மிஞ்சி நம் நெஞ்சங்களை அசைப்பதை உணர்கிறோம்.
காயாம்பூ பண்டைத் தமிழர் காதலுக்கு இலக்கணமாய்க் காட்சி தருகிறார். முல்லை மண்ணின் ஆயர்குடி வரலாற்றை அவளே பனை ஓலையில் பதிவு செய்வதாய்ச் செந்தமிழன் காட்டுவது- பண்டைத் தமிழ்ப்பெண் தமிழ் மண் மீது கொண்டிருந்த காதலையே பறை சாற்றுகிறது.
தமிழ்த் திரைப்படங்களில் வரும் குத்துப் பாட்டுகள் - உடன் வெறிக் கூத்துகள்- கொச்சை இரட்டைப்பொருள் உரையாடல்கள் - அருவருப்பான கட்டிப் புரள்தல்கள் 'பாலை' யில் முற்று முழுதாய்த் தவிர்க்கப்பட்டுள்ளன.
வஞ்சகன், கொடியவன், கயவன், முரடன் என்று எப்படி அழைத்தாலும் ''வில்லன்'' என்று திரைப்படத்தில் வருகிறானே.. பாலையில் அவன் யார்? என்றால்- 'வந்தேறி' தான் அவன் என்கிறார் செந்தமிழன். வந்தேறிகள் நேற்றும் இன்றும் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பகைவர்கள்;அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையே ' பாலை' வலியுறுத்துகிறது.
'பாலை' திரைப்படம் பார்ப்பவர்கள் ஒளிப்பதிவாளர் அபி நந்தனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பல இடங்களில்- உலகத் தரத்துக்கு அவர் ஒளிப்பதிவு கருவியின் வெளிச்சம் பாய்ந்திருக்கிறது. என் இனிய நண்பர் பாலு மகேந்திராவே மெய்சிலிர்த்துப் பாராட்டியதாகச் சொன்னார்கள். உண்மை. அபி நந்தனைத் திரை உலகில் இனி அடிக்கடி பார்க்கலாம்.
இயல்பாக எல்லாத் திரைப் படங்களிலும் இருப்பதைப் போலவே பாலையிலும் குறைகள் இல்லாமல் இல்லை.
ஆயர் குடிக்கும் வந்தேறிகளுக்கும் இடையிலான போர் பத்து- இருபது பேர்களுக்கு இடையிலான சண்டையாகக் காட்டுவது ஆழமான ஒரு திரைப்படத்தில் குறையே ஆகும். இரண்டு குடும்பங்களின் சண்டை போல் இது இருக்கிறது.போரின் இடை இடையே எழும் அளவு மீறிய'கத்தல்'கள் வேறு இயல்பாக இல்லை.
முதுவன், - விருத்திரன், - வலன், - காயாம்பூ - அனைவரும் திரை உலகத்துக்குப் புதியவர்கள் எனினும் முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்கள்.
'பாலை'யில் செதுக்கப்பட்ட செந்தமிழனின் பாடல்கள்- வேத் சங்கரின் இசைக் காற்றில் மிதந்து வரும்போது சங்க இலக்கிய சொற்கள் தேனாகின்றன. பின்னணி இசைக் கோர்ப்பில்,தமிழர் தொல்மரபு இசையை வார்க்கிறார் வேத் சங்கர்.
இயக்குநர் செந்தமிழனின் 'பாலை' திரைப்படத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் பறித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் விடுதலை பற்றியும் இத்திரைப்படம் பேசுகிறது. தமிழீழத்தின் விடுதலை பற்றியும் இத்திரைப் படம் பேசுகிறது.
ஒரு தேசிய இனத்தைக் கருவாகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் பாலை என்பது திரைத்துறையினரே ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.
இயக்குநர் செந்தமிழன் எப்படிப் பார்த்தாலும்- தமிழ்த் திரை உலகில் ஒளி மிக்க எதிர் காலம் கொண்ட ஓர் இணையற்ற இளம் இயக்குநராகக் கனிந்திருக்கிறார்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஆசிரியர் குழு உறுப்பினர்,
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்,
தமிழ்த் தேசிய மாதமிருமுறை இதழ்