"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, December 24, 2015

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலை: 26–ந்தேதி வெளியிட தபால் துறை திட்டம்

சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் அழகுமுத்து கோன், ஜெகவீர ராமபாண்டி எட்டப்பன் என்ற எட்டயபுரம் அரசருக்கு நண்பர். கப்பம் கட்ட மறுத்து, முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர். 

மருதநாயகம் யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து, பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு, வீரன் அழகுமுத்து கோன், படைத்தளபதிகளும், போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டனர். இவர்களை கவுரவிக்கும் வகையில், அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் தலை, அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது. வரும் 26-ந்தேதி (சனிக்கிழமை) அழகுமுத்து கோன் நினைவு அஞ்சல் தலை, அஞ்சல் உறை, விவரக் குறிப்பேடும் அஞ்சலகங்களில் விற்பனைக்கு கிடைக்கும். 

மேற்கண்ட தகவலை அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, December 15, 2015

ஆனாய நாயனார் புராணம்-1




தொகை


"அலைமலிந்த புனன்மங்கை ஆனாயர்க் கடியேன்"


- திருத்தொண்டத்தொகை


வகை
தாயவன் யாவுக்குந் தாழ்சடை மேற்றனித் திங்கள்வைத்த
தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்
வேயவன் மேன்மழ நாட்டு விரிபுனன் மங்கலக்கோன்
ஆயவ னானாய னென்னை யுவந்தாண் டருளினனே.




- திருத்தொண்டர் திருவந்தாதி


விரி
926.






மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்,
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற,
ஈடு பெருக்கிய போர்களின் மேக மிளைத்தேற,
நீடு வளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு.




1




புராணம் :- ஆனாயர் என்ற பெயராலறியப்படும் நாயனாரது சரித
வரலாறும் பண்புங் கூறும் பகுதி. நிறுத்த முறையானே இலை மலிந்த
சருக்கத்து ஏழாவது ஆனாய நாயனாரது புராணங்கூறத் தொடங்குகின்றார்.


தொகை :- அலைகள் பெருகிய புனல் சூழ்ந்த திருமங்கலம் என்ற
தலத்தில் அவதரித்த ஆனாயருக்கு அடியேனாவேன்.


மங்கை - திருமங்கலம். ஆனாயர் - ஆன் ஆயர் - ஆ மேய்க்கும்
ஆயர் குலத்தவர். ஆனாயர் (933) என்றது காண்க. நாயனாரது இயற்பெயர்
விளங்கவில்லை. ஊரும் ஊர்ச்சிறப்பும், பேரும், தொழிலும் திருத்தொண்டின்
குறிப்பும் முதனூல் பேசிற்று.


வகை :- யாவைக்கும் தாயானவரும், சடைமேற் பிறைவைத்த
தூயவரும்ஆகிய சிவபெருமானுடைய திருவடிகளை மனதில் விடாதுபற்றி,
அத்தொடர்ச்சியாலே அவருடைய பழமையாகிய சீர்களை வேய்ங்குழல்
நாதத்தினாற் பரவுகின்ற மேன்மழ நாட்டு நீர்வளம் மிக்க திருமங்கலத்தின்
ஆனாயர் என்னை மகிழ்ந்து ஆட்கொண்டருளியவர்.


மேன்மழ நாட்டு மங்கலக்கோன் ஆனாயன், தூயவன் பாதம்
தொடர்ந்து அவனது சீர் துளையாற் பரவுபவன்; அவன் என்னை ஆண்டவன்
எனமுடித்துக் கொள்க. தாயவன் யாவுக்கும் "தாயவன்காண் உலகுக்கு"
(கச்சித்திருத்தாண்டகம்). தொடர்தல் - விடாது பற்றுதல் குறித்தது.
துளைவேயாற் பரவுபவன் என மாற்றுக. துளைகளின் வழியே பண் எழுப்பிப்
பரவுதலால் துளையாற் பரவும் என்றார். மங்கலம் - நகரப்பெயர்.
விரிபுனன் மங்கலம் - "அலைமலிந்த புனன் மங்கை" என்பது முதனூல்;
(தொகை). என்னை உவந்து ஆண்டவன் - "அடியேன்" என்ற முதனூல்
முடிபின் தாற்பரிய முணர்த்திற்று. யான் அடியேன் எனப் பணிதலும்,
அவனும் என்னை ஆண்டனன். உவந்து - அடிமையை


ஏற்றுக்கொண்டு. விரிபுனல் இரண்டு ஆறுகள் கூடிச் சேர்தலால் இவ்வாறு
கூறினார். "இது அலைமலிந்த புனன்" என்ற முதனூற் பொருளை எடுத்து
ஆண்டு வற்புறுத்தியதாம்.

நாயனாரது, நாடு - மேன்மழ நாடு - (926); நகரம் - விரிபுனன்
மங்கலம் (932); பெயரும் குலமும் தொழிலும் - ஆனாயர். "ஆயர்
குலத்தவர்" (933); "ஆனிரை அளித்துள்ளார்" (935); திருத்தொண்டின்
திறமும் வரலாறும் - தொல் சீர் துளையாற் பரவும் வேயவன் என்றது
- "தம் பெருமானடி அன்புறு கானத்தின் மேவு துளைக்கருவிக் குழல்
வாசனை மேற்கொண்டார்" (937), (938), (939); "வாயினின் மெய்யின் வழுத்து
மனத்தின் வினைப்பாலின்..........பிரானடியல்லது பேணாதார்" (934);
"கொன்றையினை நேர்நோக்கி..........அன்பை உடையவர்பால் மடை திறந்தார்"
(946), (950), (952); தாயவன் - அருட்கருணை தானாய........தவவல்லியுடன்
(963); சடைமேற் றனித்திங்கள் வைத்த தூயவன் - மதி நாறும் சடைதாழ
(963); நாறுதல் - தோன்றுதல் - முளைத்தல். இவ்வாறு விரிவாய்
இப்பொருள்களை விரிநூல் விரித்தமை கண்டுகொள்க.

926. (இ-ள்.) மேன்மழ........நீர்நாடு - மேன்மழநாடு என்று
சொல்லப்படும் நீர்வளம் மிக்க நாடு; மாடு........வந்து ஏற - பக்கங்களில்
பரவுகின்ற வாசனையுடைய அழகிய சோலைகளில் வான்மதி வந்து ஏறவும்;
சூடு - சுரும்பு ஏற - சூடடிக்கும் நெல்லரிகள் பரப்பிய பண்ணையின்
வரம்புகளில் வண்டுகள் ஏறவும்; ஈடு.........இளைத்து ஏற - மேன் மேல்
அடுக்கியுயர்த்த வைக்கோற் போர்களில் மேகங்கள் இளைத்து ஏறவும்; நீடு
வளத்தது - நிலை பெறும் வளத்தையுடையது.

(வி-ரை.) விரைப்பொலிசோலை - விரை - மணம்; பொலிதல் -
அழகுடன் விளங்குதல். கண்ணுக்கினிய காட்சியழகு மட்டும்கொண்டு
மணமில்லாதசோலைகளைப் பெருஞ்சிரமப்பட்டு வைத்துக் களிக்கும்
இந்நாள்மாக்கள் இதனைச் சிந்திப்பார்களாக.


வான்மதி வந்து ஏற - மிக உயர்ந்து வளர்ந்த சோலையின் உயர்ச்சி
குறித்த உயர்வுநவிற்சியணி. மதி வானவீதியிற் செல்லுவதாயினும்,
இச்சோலையினது வானளாவிய உயர்ச்சியினாற் கீழிருந்து, புறத்துக்
காண்போர்க்கு, அது (மதி) இதனுள் வந்து நுழைந்து மேல் ஏறுவதாகப்
புலப்படும் என்பது. ஏறுதல் - மதி, முளைத்த இடத்தினின்றும் பொழுதேற
ஏற மேற்போதல். "வெண்மதியம், சோலைதொறு நுழைந்துபுறப் படும்பொழுது"
(திருஞான - புரா - 8) என்ற இடத்து இக்கருத்தை மேலும்நயம்பட விரித்தது
காண்க. சோலையின் மரங்களின் உயர்ச்சியை "மந்தியும் அறியா மரன்பயில்
அடுக்கத்து" என்று உயர்வு நவிற்சிபடக் கூறும் திருமுருகாற்றுப்படையும்,
"வான மதிதடவ லுற்ற விளமந்தி, கான முதுவேயின் கண்ணேறித் - தானங்,
கிருந்துயரக் கைநீட்டு மீங்கோயே நம்மேல், வருந்துயரந் தீர்ப்பான் மலை"
என்ற ஈங்கோய்மலை யெழுபதும் (68) பிறவும் காண்க.

சூடு பரப்பிய பண்ணை - சூடு - நெற்கதிர்களில், தலையடியில்
உதிராத மணிகளை உதிர்க்கும் பொருட்டுப் பரப்பிய நெல் அரிகள்.
இவற்றை மேதிகளால் மிதிப்பித்து (கடாவிடுதல் என்பர்) நெல்லுதிர்த்துச்
சேர்த்தல் மரபு. (அரிகளை முதலில் அடித்தபோது உதிர்ந்தநெல் தலையுதிரி
எனப்படும்.) 73ல் உரைத்தவை பார்க்க.

சூடு...........சுரும்பு ஏற - சூடு உதிர்க்கப் பரப்பிய வயல்களில்,
வரம்புகளில் வண்டுகள் ஏறுதலாவது சூடு அரிகள் பரப்பும்போது அங்குத்
தாமரை நீலம் முதலிய கொடிகளும் மலர்களும் உள்ளமையால் அவற்றின்
மொய்த்த வண்டுகள் தப்பி ஓடுதற்கு ஒதுங்கி அங்குநின்றும் வரம்புகளில்
ஏறுதல். "அரிதரு செந்நெற்சூட்டி னடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்......விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி

வெற்பு வைப்பார்" (73) என்றது காண்க.

ஈடு பெருக்கிய போர் - சூடு அடித்தபின் வைக்கோல்களைப் பெரும்
குவியல்களாக அடுக்கிக் குவித்த போர்கள். ஈடு - ஆதி நீண்டுவந்த
முதனிலைத் தொழிற்பெயர். ஈடு - இடுதலினாலே - ஒன்றன்மேல் ஒன்று
குவியலாக இடப்படுதலினாலே. போர் - வைக்கோற்போர். ஈடு -
ஒன்றுக்கொன்று சமமாகச்செய்த என்றும், பெருமைமிகச் செய்த என்றும் உரை
கூறுவாரும், போர் - நெற்போர் என்பாரும் உண்டு. இவை
பொருந்தாமையறிக.

போர்களின் மேகம் இளைத்து ஏற என்றது தாழவரும் மேகங்கள்
தங்கக்கூடிய வளவிலே மிக உயர்ந்தனவாக வைக்கோற் போர்கள்
இடப்பட்டன என்க. இன்றைக்கும் மலைபோல நிமிர்ந்து காணக்கூடியபடி
மிகஉயரமாகிய வைக்கோற் போர்கள் இந்நாட்டின் புறங்களிலும்
(இத்திருமங்கல) நகரிலும் காணலாம். இளைத்து ஏறுதல் - மெல்லத் தவழ்தல்.
இலக்கணை. "சோலைகள் மேலோடும், வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ
நன்னாடு" (932) என்றதும் அங்கு உரைப்பவையும் இங்கு வைத்துச் சிந்திக்க.

மேன்மழநாடு - இது நாட்டின் பெயர். மழநாடு - மழவர் என்ற
மரபினர் வாழ்வதும், அம்மரபினரால் அரசு செய்யப் பெற்றதும் ஆகிய நாடு.
இதுமேன் மழநாடு, கீழ் மழநாடு முதலிய பல பிரிவுகளையுடைய
தென்றறியப்படும். திருப்பாசசிலாச் சிராமத்தைத் தலை நகராகக் கொண்டு
கொல்லி மழவன் அரசு புரிந்த நாடும் மழநாட்டின் ஒரு பிரிவு. அது கீழ்
மழநாடு என்பது போலும். கொல்லி மழவனும் அவனது மரபினரும் வழி
வழியாகச் சிவனடிச் சார்புடைய சைவமரபு அரசர்கள் என்பது, "மறிவளருங்
கையார் பாதம் பற்றியே வருங்குலத்துப் பான்மையினா னாதலினால்"
(திருஞான - புரா - 312) என்றமையாலும், பிறவாற்றாலும் அறியப்படும்.
மழநாடு சோழ நாட்டின் ஒரு பகுதி. மழவ அரசர்களும் சோழ மன்னர்களின்
கீழ் வாழ்ந்த சிற்றரசர்களில் ஒருவராகும் என்ப. கொங்கு மழநாடு என்ற ஒரு
பகுதியும் உண்டு. பிற வரலாறுகள் சரித ஆயாய்ச்சிக் குறிப்பிற் கண்டு
கொள்க.

நீர் நாடு - நீர் வளம் பொருந்திய நாடு என்க. "அலைமலிந்த புனல்"
என்பது முதனூல். அதனை வழி நூலுள் (திருவந்தாதி) "விரிபுனல்" என்றார்.
அதனையே ஆசிரியர் "நீர்" என்றனர்.

நீடு வளத்தது - நீடு முக்காலத்துக்கும் பொதுவாகிய வினைத்தொகை.
இவ்வாக்கின் பயனாக இந்நாளிலும் இந்நாடு நீடும் வளமுடையதாய்
விளங்குதல் கண்கூடு.

சராசரமெல்லாம் சந்த இசைமயமாக்கிய ஆனாய நாயனாரது
சரிதமாதலின் சந்தப்பா யாப்பினால் ஆசிரியர் தொடக்கம் செய்கின்ற நயம்
காண்க. 1 ................

சு‌ப்பையா சுவா‌மிக‌ள்

திருநெ‌ல்வே‌லி அரு‌கி‌ல் உ‌ள்ள கடையனோடை எ‌ன்னு‌ம் ‌கிராம‌த்‌தி‌ல்‌வி‌ல்‌லிமு‌த்து‌க் கோனா‌ர்-நாராயணவடிவு த‌ம்ப‌தியரு‌க்கு 23.11.1908 ஆ‌ம் ஆ‌ண்டு‌பிற‌ந்தவ‌ர் மகா‌ன் சு‌ப்பையா சுவா‌மிக‌ள். ஒரே ஆ‌ண் வா‌ரிசான இவ‌ர், படி‌‌ப்‌பி‌ல்அ‌திக ஆர்வம் கொ‌ண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்டமுடையவராகவும் இரு‌ந்தா‌ர். அ‌ப்போ‌து இரு‌ந்தே ந‌ண்ப‌ர்களுட‌ன் சே‌ர்‌ந்து பல கோ‌யி‌ல்க‌ள், சமா‌திகளை சு‌ற்‌றி வருவா‌ர்.
ஐ‌ந்தா‌ம் வகு‌ப்பு வரை கடையனோடை‌யி‌ல் படி‌த்த இவ‌ர், இ‌ப்படி கோ‌யி‌ல், சமாத‌ி எ‌ன்று ‌சு‌ற்‌றி ‌தி‌ரி‌ந்ததா‌ல் அவரது பெ‌ற்றோ‌ர், மூ‌த்த மக‌‌ள் இரு‌க்கு‌ம் குலசேகரப‌ட்டின‌த்‌தி‌ற்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர். அ‌ங்கு‌ள்ள பெ‌‌ரிய ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர்‌ந்தா‌ர். 
ஆனா‌ல் ‌அ‌ங்கு சு‌ப்பையா சுவா‌‌‌மி‌க்கு ந‌ண்ப‌ர்க‌ள் யாரு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை. வார ‌விடுமுறை நா‌ட்க‌ளி‌ல் அரு‌கி‌ல் உ‌ள்ள ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்று அ‌ங்கு‌ள்ள வ‌ள்‌ளி‌க்குகை, மூவ‌ர் சமா‌தி போ‌ன்ற இ‌ட‌ங்க‌ளி‌ல் த‌னிமை‌யி‌ல் அம‌‌ர்‌ந்து கொ‌ள்வா‌ர். அ‌ப்போது அ‌ங்கு வரு‌‌ம் சாது‌க்க‌ளுட‌ன் ‌சி‌த்த வை‌த்‌திய‌ம், யோக‌ம் போ‌ன்றவ‌ற்றை க‌ற்று‌‌க் கொ‌ண்டா‌ர். ‌பி‌ன்ன‌ர் மூ‌லிகை மரு‌ந்துக‌ள் தயா‌ரி‌த்து பலரு‌க்கு ‌சி‌கி‌ச்சை செ‌ய்தா‌ர். 7ஆ‌ம் வகு‌ப்பு வரை குலசேகர‌ப‌ட்டின‌த்த‌ி‌ல் படி‌த்த அவ‌ர், ம‌ீ‌ண்டு‌ம்கடையனோடை‌க்கு பெ‌ற்றோ‌ர்க‌ள் அழை‌த்து செ‌ன்றன‌ர். ‌பி‌ன்ன‌ர் ஆ‌ழ்வா‌ர்‌திருநக‌ரிலு‌ள்ள இ‌ந்து நடு‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌‌ல் 8ஆ‌ம் வகு‌ப்பும், ‌ திருவைகு‌ண்ட‌ம் காரனேஷ‌ன் உய‌ர் ‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு‌ம், பாளைய‌ங்கோ‌ட்டை தூய யோவா‌ன் க‌ல்லூ‌ரி‌யி‌ல் இ‌ண்ட‌ர்‌மீடிய‌ட் படி‌த்தா‌ர். இதையடு‌த்து மதுரை‌க்கு செ‌ன்று ‌பி.ஏ(hons) படி‌த்து முடி‌த்தா‌ர்.


க‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ராக இரு‌ந்த க‌‌ல்யாண‌ம் ராமசா‌மி எ‌ன்பவருட‌ன் த‌ங்‌கி ‌சி‌த்துக‌ளிலு‌ம், மரு‌த்துவ‌த்‌திலு‌ம், ஆரா‌ய்‌ச்‌சி‌யிலு‌ம் ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். மேலு‌ம் மூ‌லிகை, வை‌த்‌திய‌ம், உடற‌்கூறு, ‌சி‌த்து‌க‌ள், உற‌ங்காமை, உ‌ண்ணாமை போ‌ன்ற ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். ஆனா‌ல் அத‌ி‌ல் நா‌ட்ட‌‌மி‌ல்லை.


த‌ன் ‌நில‌ங்களை ‌வி‌ற்று ஏழை அ‌ன்னதான‌ம் வழ‌ங்‌கினா‌‌ர். ‌பி‌ன்ன‌ர் கணப‌திமூலம‌ந்‌திர‌ம், ஸ்ரீராம ஜெய‌ம் போ‌ன்ற ம‌ந்‌திர‌ங்களை பலரு‌க்கு உபதே‌சி‌த்தா‌ர்.


மீ‌ண்டு‌ம் கு‌ற்றால‌ம், வ‌ள்‌ளி‌க் குகை, ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்றா‌ர். அதுவு‌ம் ச‌ரி‌ப்பட‌வி‌ல்லை. ‌‌பி‌ன்ன‌ர் ‌திரு‌‌ப்ப‌தி செ‌ன்றா‌ர். ‌பிறகு ‌விரு‌த்தாசல‌ம் செ‌ன்றா‌ர். அ‌ங்‌கிரு‌ந்து வடலூரை அடை‌ந்தா‌ர். அ‌ங்கு ‌சில மாத‌ங்க‌ள் த‌ங்‌கினா‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்‌கிரு‌ந்து ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் வ‌ந்தடை‌ந்தா‌ர். சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடை‌சியாக‌ப்பே‌சியது திருக்கழு‌க் கு‌ன்ற மலை‌யிலம‌ர்‌ந்த ஓரா‌ண்டு வரைதா‌ன் (1951)
1951ஆ‌ம் ஆ‌ண்டு அ‌‌‌ங்கு வ‌ந்த சு‌ப்பையா சுவா‌மிக‌ள், அ‌ங்கு‌ள்ள மலை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து யோக ப‌யி‌ற்‌சி செ‌‌ய்வா‌ர். அ‌ப்போது அவரு‌க்கு பா‌ல், பழ‌ம் கொடு‌த்து உபச‌ரி‌த்தன‌ர். இர‌வி‌ல் ‌விஷ ஜ‌ந்து‌க்க‌ள், பு‌லி, ச‌ிறு‌த்தை எ‌ல்லா‌ம் நடமாடு‌ம் இ‌ட‌த்‌தி‌ல் எ‌ப்படி இரு‌க்‌கிற‌ீ‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்டு‌ள்ளன‌ர். சுவா‌மி பு‌ன்முறுவலுட‌ன் இ‌ர‌ண்டொரு வா‌ர்‌த்ததை கூ‌றி அவ‌ர்களை அனு‌ப்‌பி வை‌த்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் மரண‌த்த‌ி‌ற்கு மூல‌ங்களை ந‌சி‌க்கு‌ம் உபாய‌த்துட‌ன் தவ‌ம் மே‌ற்கொ‌ண்டதா‌ல் பேசுவதை‌ந‌ிறு‌த்த‌ி‌‌க் கொ‌ண்டா‌ர். தன‌க்கு மு‌ன்பாக ‌திருவரு‌ட்பா எ‌ன்ற நூலை ம‌ட்டு‌ம் எ‌ப்போது‌ம் வை‌த்‌திரு‌ப்பா‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்கு‌ள்ள ம‌க்கள‌ா‌ல் கடையனோடை சுவா‌மி எ‌ன்று‌ம், ‌பி.ஏ. சுவா‌மி எ‌ன்று‌ம், ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் சுவா‌‌மி எ‌ன்று‌‌ம் அழை‌க்க‌‌ப்ப‌ட்டா‌ர்




சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடையனோடை‌யி‌ல் அவதார‌ம் செ‌ய்தது முத‌ல் ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌த்த‌ி‌ல் மு‌க்‌தியடை‌ந்தது வரை அவரு‌க்கு இ‌வ்வுலக உய‌ி‌ர்க‌ள்,சடமா‌யிரு‌ந்த கோ‌யி‌ல்க‌ள், சமா‌திக‌ள் முத‌லியவ‌ற்றுட‌ன் ‌நிறைய‌த் தொட‌ர்புக‌ள் உ‌ண்டு. எ‌வ்வுயிரு‌க்கு‌ம் ‌தீ‌ங்கு ‌நினை‌க்காதவனே வை‌ஷ்ணவ‌ன் எ‌ன்ப‌ர். அ‌வ்வ‌ழி வ‌ந்தவ‌ர் எ‌வ்வு‌யிரு‌க்கு‌ம் எவராலு‌ம் ‌தீ‌ங்கு வர‌க்கூடாது என எ‌ண்ணுபவ‌ன் ச‌ன்மா‌ர்‌க்‌கி என வை‌ஷ்ணவ‌த்‌‌தி‌ல் இரு‌ந்து ச‌ம்மா‌ர்‌க்க‌ம் வரை அவ‌ர் வ‌ந்த பாதையை பா‌ர்க‌்கு‌ம் போது அவ‌ரி‌ன் உ‌யி‌ர் எ‌த்தகைய உறவை ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ‌நிலை நா‌ட்டி‌யிரு‌க்‌கிறது எ‌ன‌ப் பா‌ர்‌‌த்தா‌ல் தெ‌ளிவு ஏ‌ற்படு‌ம்.




1961 ம் ஆண்டு அவர் தன்னுடன் தொடர்புடைய அன்பர்களிடம் தனது உடலில்
நாடி அடங்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தார்.அப்போது அவர் திருகழ்குகுன்ர மலை குகையில் இருந்தார். நாடி அடங்கியவுடன் அவரது உடல் கீழே கொண்டுவரப்பட்டது. அவர் விருப்பப்படி சமாதி கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. மேலெ திறக்கும் வகையில் பலகைக் கல் வைத்து மூடப்பட்டது. 40 நாட்களுக்கு பூஜை செய்யப் பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் முன்னிலையில் சமாதியின் மூடி திறக்கப் பட்டது.
அவரது உடல் கெடாமல் அமர்ந்த நிலையில் அப்படியே இருக்கக் கண்டனர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். THE BODY IS INTACT என்று அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டது.


சமாதியின் மேல் மூடி மூடப்பட்டது. மீண்டும் பத்து மாதங்களுக்கு பூசை செய்யப்பட்டது.அதன் பிறகு மீண்டும் சமாதியின் மூடி திறக்கப் பட்டது. உடல் கெடவில்லை. பின்னர் சமாதியின்மீது கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.
சமாதியில் தினசரி அன்னதானம் நடக்கிறது.தியான மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டு மலர் வெளியிடப்பட்டுள்ளது.

Monday, November 30, 2015

யாம் கூடுகை விழா

மதுரையில் யாதவர் தொழில் வணிக கூடம் சார்பில் 'யாம் கூடுகை 2015' விழா நடந்தது. யாதவர் மகா சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கோனார் விபூதி திட்டம், யாதவா சேம்பர்.காம் இணையதளத்தை ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி துவக்கி வைத்தார். யாதவர் தொழில் வணிகக்கூட கையேட்டை கல்யாணசுந்தரம் வெளியிட்டார். சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் சீனிவாசன், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள் பேசினர். சரவணன் வரவேற்றார். கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Sunday, November 29, 2015

காளையார்கோவில் தாலுக்கா,காளக்கண்மாய் (ஊராட்சி) கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பணிக்கு நன்கொடை

பேரன்புடையீர் வணக்கம்,
சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவில் தாலுக்கா,காளக்கண்மாய் (ஊராட்சி) கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பணிக்கு தாங்களால் முயன்ற நிதி உதவியோ அல்லது பொருள் உதவியோ செய்து கோவில் கட்டிடப்பனிக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவன்:
ஸ்ரீ கோகுலக்கிருஷ்ணன் திருக்கோவில் திருப்பனி குழுவினர்கள் 
காளக்கண்மாய்,சிவகங்கை,மாவட்டம்.
[ பதிவு எண் :835/2015 ]
தொடர்புக்கு:

செல் : 7200602104,9786531372 இ-மெயில் :krishnantemple974@gmail.com




Saturday, November 28, 2015

முல்லைசார்ந்த கற்பினள்

காலவோட்டத்தில் மலைகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்கள் மலையைவிட்டு இறங்கிவந்தனர். அதாவது, மலையடிவாரத்தில் மண்டியிருந்த காட்டுப்பகுதிகளுக்குள் நுழைந்தனர். ஆடுமாடுகளை மேய்த்தலும் சிறு அளவில் உழுதலும் இவர்களுடைய தொழிலாக இருந்தது. இந்நிலங்கள் புன்செய்நிலங்கள்தான். இவர்கள் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் குடியிருந்தனர். இந் நிலப்பகுதியை முல்லை என்றனர்.

காட்டுப்பகுதிகளில் வேட்டையாடி, கால்நடைகளை வளர்த்த ஆயர் (ஆ-பசு, நிரை – கூட்டம். ஆநிரையை மேய்த்ததால் இவர்களை ஆயர்கள் என்றனர்.), கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் ஆகியோர் இனக்குழுமுறையில் இப்பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். இதற்குச் சான்றாக அகநானூற்றின் 101, 311, 393 ஆகிய பாடல்களைக் காட்டலாம். இவர்களிடம் இனக்குழுச் சமுதாயமான குறிஞ்சி நிலத்தவரின் பண்பாட்டு எச்சங்கள் மிகுந்திருந்தன. இவர்கள் கூட்டுழைப்பினர்கள். கூட்டாகவே உண்டனர். இவர்களின் உணவுப்பொருட்களாக வரகு, கொள், தினை, அவரைப் புழுக்கு போன்றன இருந்தன. சான்று பெரும்பாணாற்றுப்படை – 190 முதல் 196 வரையிலான அடிகள்.

இவர்களின் வாழ்விடப் பகுதியைச் “சீறூர்“ என்று இலக்கியங்கள் சுட்டியுள்ளன. சான்று புறநானூறு – 285 முதல் 335 வரையிலான பாடல்கள். இந்தச் சீறூரினை ஆண்ட மன்னர்கள், இனக்குழுத் தலைமையையும் அரசமைப்பின் தலைமையையும் கொண்ட இருகலப்புநிலைத் தலைமையுடைய ஒருவகையான ஆட்சியினை நடத்தினர். 

இவர்களின் பெருஞ்செல்வம் மாடுகள்தான். அவற்றைக் காக்கவும் அவற்றிலிருந்து பல்வேறு பொருட்களைப் பெற்றுத் தங்களின் உணவுத்தேவைகளைப் போக்கிக்கொள்ளவும் பெரும்பாடுபட்டனர். மாடுகளைத் தம் உடைமையாகக் கருதியதால் இவர்களின் சமுதாயத்தை “உடைமைச்சமுதாயம்“ என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் மாடுகளைப் பகைவர்கள் கைப்பற்றவரும்போது, அவர்களைத் தடுத்து அவர்களிடமிருந்து அவற்றைக் காக்கும்பொருட்டு உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபாடு செய்துள்ளனர். இச்செயலினை அகநானூறு – 67, 131 ஆகிய இரண்டு பாடல்கள் விளக்கியுள்ளன.

ஓர் ஆடவருக்கு ஒரு பெண் என்ற கற்புடை வாழ்க்கை இந்நிலப்பகுதியில் வேரூன்றியது. குறிப்பாக ஒருத்தி ஒருவனுக்காகவே வாழ்ந்தாள் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் இலக்கியங்கள் “முல்லைசார்ந்த கற்பினள்“ என்று குறிப்பிட்டுள்ளன.

“ஏறுதழுவுதல்“ என்ற மாட்டினை அடக்கும் வீரத்தை ஓர் ஆடவனின் திருமணத்தகுதியாகக் கொண்டனர். இது முல்லைத்திணைக்குரிய வீர விளையாட்டுகளுள் ஒன்றாகப் பிறந்து வளர்ந்தது. இன்றுவரை கொண்டாடப்படும் விழாவாகத் தமிழரிடையே உள்ளது.

குறிஞ்சி நிலத்தில் தலைமையுடையோரின் பெண்கள் சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால், முல்லை நிலத்தில் தலைமையுடையோரின் மனைவி சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இது நாகரிக வளர்ச்சியில் ஒரு பாய்ச்சல். குறிஞ்சி நிலத்தலைவர்களின் பெயர்கள் இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. ஆனால், முல்லை நிலத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பாகவே இலக்கியத்தில் புலப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களும் குறிஞ்சி நிலத் தலைவர்கள்போல வள்ளல் தன்மையுடன் இருந்தாலும் இவர்களின் நிலப்பரப்பில் தொடர்ச்சியான வளம் இல்லை.

Friday, November 27, 2015

முல்லைக்கலி – 104வது பாடல்


இப்பாடலில் ஒரு வரலாற்றுச் செய்தி வருகிறது. தமிழகத்தில் பல கடல்கோள்கள் நிகழ்ந்தன. அதனால்தான் ஒல்காப் பெரும்புகழ் கொண்ட தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல செறிவு நிரம்பிய இலக்கியங்கள் அழிந்து விட்டன. தமிழின் தொன்மை ஏறத்தாழ கி.மு. ஐந்தாயிரம் எனக் குறிக்கிறார் முதுபெரும் அறிஞர் முனைவர். ச.வே. சுப்பிரமணியம் அவர்கள். கடல்கோள் நிகழ்ந்ததற்குச் சான்றாக 104 ஆவது முல்லைக்கலிப் பாடல் விளங்குகிறது. அக்கருத்து இதுதான். “தென் மதுரையும் கபாடபுரமும் கடலால் கொள்ளப்பட்ட காரணத்தால் பாண்டிய அரசன் சோழ நாட்டுப் பகுதியையும் பாண்டிய நாட்டுடன் 
tamil suvadikal
இணைத்துக் கொள்கிறான். இப்பாடலைப் பாடியவன் இவ்வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்தவன் சோழன் நல்லுருத்திரன். கடலின் மிகுந்த அலைகள் தன் நாட்டினுள் புகுந்து கைக்கொண்டு (பாண்டி நாட்டினுள்) விடுதலால், தன் நாட்டின் பரப்பை பரப்பளவைக் கூட்டவேண்டி மனத்தில் இளைப்பின்றி பகைவரைத் (சேரனையும், சோழனையும்) தன் வலிமையால் வென்று மேலே சென்று சோழனின் புலி இலச்சினையையும், சேரனின் வில் இலச்சினையையும் அழித்து, விளங்கும் மீன் இலச்சினையை அங்கே பொறித்த புகழையுடைய பாண்டியனின் பழைய புகழை நிலைபெறச் செய்த குடியுடன் தோன்றிய முல்லை நிலத்தில் வாழும் ஆயர் (இடையர் குலத்தினர்) என்ற கருத்தில் பாண்டியனின் சிறப்புக் கூறப் படுகிறது.


அப்பாடல் வரிகள்

மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வௌவலின்
serasozhapandiyar
மெலிவின்றி, மெலிவின்றி மேல் சென்று மேவார்நாடு இடம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்இசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர் ….

எனத் தொடரும் இப்பாடல் 80 வரிகளைக் கொண்டது.


“மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல்வௌவலின்
………………..
ஒருமொழி கொள்க, இவ்வுலகுடன் எனவே” எனும் வரி முடிய உள்ள இப்பாடல், பல்வேறு செய்திகளை உள்ளடக்கியது.

விளக்கம்


தலைவி ஒருவனை விரும்ப அவன் ஏறு தழுவினான். அக்காட்சியைத் தோழி தலைவிக்குக் காட்டினாள். பின் தலைவியின் சுற்றத்தார் அவனுக்கே தன் மகளை மணம் செய்துதர இசைந்தனர். பொதுவாக முல்லைக்கலிப் பாடல், காளைகளைப் பிடித்து அடக்கும் இளைஞர்களுக்கே தம் மகளை மணம் செய்து கொடுத்து இல்லறம் நடத்த இசைவர் எனும் செய்தியை விளக்குவதாகவே உள்ளது. காடும் காடுசார்ந்த இடம் முல்லை. அதில் ஆயர்குல மக்கள் வாழ்வர். அவர்கள் காளையை வென்ற இளைஞர்களுக்குத் தம் மகளை மணம் செய்து கொடுப்பது முல்லை நில ஒழுக்கம். இல்லறத்தில் நிலைபெற்று இருத்தலும், இருத்தல் நிமித்தமும் உரிப்பொருள்.
thamizharivom eruthazuval

இப்பாடலில்,

பால்நிற வண்ணன் கண்ணனின் அண்ணன் பலதேவன். அவன் பால் போல் வெண்ணிற மேனியன். நேமித் திருமார்பன் எனப்படும் சக்கரத்தை உடைய திருமால் பிறைநுதல் முக்கண்ணன் எனும் நெற்றிக்கண் உடைய முக்கட் பெருமானாம் சிவ பெருமான் ஏறும் வெள்ளையேறாகிய (ஏறு – காளை) காளையை அடக்கும் முல்லை நில ஆயர்குல வீரன். செட்டிநாட்டில் மஞ்சுவிரட்டுத் தொழு என்பர். இச்சொல், “தொழுவினுள் கொண்ட ஏறு எலாம்” எனத் தொழுவினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காளைகளைக் குறிக்கிறது. மேகத்தை விரட்ட நடத்தப்படும் மாடுகளை ஓடிப்பிடித்து ஏறி அடக்கும் விளையாட்டு மஞ்சுவிரட்டு. அதனை ஜல்லிக்கட்டு என்பர். இவ்விளையாட்டுக்குத் தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. முல்லைக்கலிப் பாடல் முழுவதையும் படிக்கச் சுவையாக இருக்கும். படிப்பீர்… சுவைப்பீர்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar